Saturday 12 October 2019

*தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் மற்றும் பரிசுக்கான செலவீனம் மேற்கொள்ளுதல் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/3-4-5.html


*🎙2018-19 ம் கல்வி ஆண்டு பள்ளிக் கல்வித் துறையின் மானியக் கோரிக்கையில்மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களால் கீழக்கண்டுள்ளவாறு அறிவிப்புகள்வெளியிடப்பட்டுள்ளன.*

*_"மாணவ மாணவியரின் உடல்திறனை வளர்க்கும் பொருட்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு ஆண்டு தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு அவர்களுடைய விளையாட்டுத் திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும்."_*

*🎙மாணவ மாணவியருக்கு விளையாட்டு  போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதால் ஏற்படும் செலவினத்தை சமக்ர சிக்க்ஷா மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளி மானியத்திலிருந்து (Composite School Grant) மாநில திட்ட இயக்குநர் அவர்களின் அனுமதியுடன் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.*

*🎙எனவே, அரசு தொடக்க மற்றும் நிடுநிலைப் பள்ளிகளில் 3 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அவர்களுடைய விளையாட்டு திறனைக் கண்டறிந்து ஊக்குவிப்பதற்காக விளையாட்டு போட்டிகள் நடத்தி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்குவதால் எற்படும் செலவீனத்தை சமக்ர சிக்ஷா மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளி மானியத்திலிருந்து செலவீனம் மேற்கொள்ள பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: