Wednesday, 2 October 2019

*நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post.html

**
*🛡திருச்செங்கோட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.*

**
*🛡திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று கோரிக்கைகளை வலியறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.*

**
*🛡ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் _தோழர்.கலைச்செல்வன்_ தலைமை வகித்தார்.*

*🛡வட்டாரத் தலைவர் _தோழர்.கோபிநாத்_ வரவேற்றார்.*

*🛡தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் _தோழர்.அர்ஜுனன்_ வாழ்த்து பேசினார்.*

*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் _தோழர்.மாதேஷ்_ கண்டன உரையாற்றினார்.*

**
*🛡இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வைரம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த பிரகாசம், பில்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்படும் எல்.கே.ஜி, யு.கே.ஜி., வகுப்புகளுக்கு ஆசிரியராக நியமித்தது மற்றும் தலைமை ஆசிரியர் விடுப்பில் உள்ள நிலையில், வைரம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு, செருக்கலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியரை நியமித்த, பரமத்தி வட்டாரக் கல்வி அலுவலர்ருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தங்களின் கோரிக்கை மனு மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்கினர்.*

*🛡கொல்லிமலை வட்டாரம் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: