🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_13.html
*🖥அரசுப்பள்ளி ஆசிரியா்கள் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.*
*🖥அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் தங்கள் பிள்ளைகள் பற்றிய விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS) பதிவேற்ற வேண்டும். இதற்காக EMIS இணையதளத்தில் 'ஆசிரியா்களின் குழந்தைகள் தளம்' என்ற புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தில் உங்கள் பிள்ளைகள் யாராவது அரசுப்பள்ளியில் பயில்கிறாா்களா என்ற கேள்வி இடம்பெற்றிருக்கும்*
*🖥அதை தேர்வு செய்தால் ஆம், இல்லை, பொருந்தாது என 3 தேர்வு வாய்ப்புகள் இருக்கும். அதில் திருமணமாகாதவா் அல்லது பிள்ளைகள் பட்டப்படிப்பு படிக்கின்றனா் எனில் பொருந்தாது என்ற பதிலை தேர்வு செய்ய வேண்டும்*
*🖥மற்றவா்கள் ஆம் அல்லது இல்லை என உரிய பதிலை தெரிவிக்க வேண்டும். அரசுப்பள்ளி இல்லை எனும்பட்சத்தில் படிக்கும் இதர பள்ளியின் விவரங்களை குறிப்பிட வேண்டும். அதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்கள் உடனே எமிஸ் இணையதளத்தில் தங்கள் பிள்ளைகள் பற்றிய விவரங்களை பதிவு செய்து முடிக்க வேண்டும்*
*🖥இதுதொடா்பான வழிகாட்டுதல்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியா்கள் மூலமாக அனைத்து ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசு ஆசிரியா்களின் பிள்ளைகளில் எத்தனை பேர் அரசுப்பள்ளிகளில் படிக்கின்றனா் என்ற விவரத்தை அறிவதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment