Saturday, 2 November 2019

*ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் அகில இந்திய பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள் & புகைப்படத் தொகுப்புகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post.html


**
*🛡ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், _இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய நிர்வாகிகள் கூட்டம் & மத்திய செயற்குழுக் கூட்டம்_ 31.10.2019 வியாழன் அன்றும், _அகில இந்திய பொதுக்குழுக் கூட்டம்_ 01.11.2019 வெள்ளி அன்றும் நடைபெற்றது.*

**
*🛡இக்கூட்டங்களில் பங்கேற்க தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை,_ பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்,_ மாநிலப் பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ மற்றும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச.மோசஸ்_ உள்ளிட்டோர்  ஜெய்ப்பூரிற்கு சென்றிருந்தார்கள்.*

**
*🛡இக்கூட்டங்களில், 3 மாநிலங்களில் நடைபெற்ற பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறைகள், தேசிய கல்விக் கொள்கை வரைவிற்கு எதிராக எடுக்கப்பட்ட மாநில அளவிலான நடவடிக்கைகள் மற்றும் STFI-ன் எதிர்கால கள நடவடிக்கைகள் குறித்த பல்வேறு கூட்டக்குறிப்புகளின் கீழ் விவாதிக்கப்பட்டது.*

**
*🛡(31.10.2019) அன்று  இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) அகில இந்திய நிர்வாகிகள் கூட்டத்தில் _தோழர். மயில்_ அவர்கள் உரையாற்றினார்.*

**
*🛡01.11.2019 அன்று  இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) அகிலஇந்தியப் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழகத்தில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சங்கங்களின்  தலைவர்களுக்கு ராஜஸ்தான் சிக்க்ஷாசக் சங் (ஷெகாவத்) சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.*

🤝தோழமையுடன்;

*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм














No comments: