Friday, 8 November 2019

*ஜெய்ச்சிட்டு பேசுங்க , அதான் கெத்து ! பெண் விமானியின் நம்பிக்கை பேச்சு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_71.html


*_ஏளனம் செய்பவர்களை  உங்களை திரும்பி பார்க்க வையுங்கள் - அதற்கு  எடுத்துக்காட்டாக நானே உள்ளேன்_* 
                                       
_தமிழகத்தின் முதல் பெண் விமானியுடன் மாணவர்கள் கலந்துரையாடல்_

*🌟தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழகத்தின் முதல் பெண் விமானி காவ்யா மாணவர்களுடன் கலந்துரையாடினார்.*
                                 
*⚡ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.*

*⚡தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.*

*⚡பெண் விமானியின் தந்தை ரவிக்குமார், தாய் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.*

*✈தமிழகத்தின் முதல் பெண் விமானி காவ்யா மாணவர்களிடம் பேசும்போது, உங்களை பார்த்து ஏளனம் செய்பவர்களை கண்டு  கோபப்படாதீர்கள். அவர்கள் முன்பாக நீங்கள் என்னவாக வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அதுவாக மாறி காண்பியுங்கள்.*

*✈உலகம் உங்களை திரும்பி பார்க்கும் வகையில் சாதனை படைக்க வேண்டும். அதற்கு படிப்பு  இருந்தால் போதும்.*

*✈வாழக்கையை எளிதாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். என்னை சிறு வயதில் கிண்டல் செய்தவர்கள் இன்று எனது சாதனையை ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.*

*✈விமானி ஆவதற்கு 12ம் வகுப்பு படித்தால் போதும். பிறகு ஐந்து வருட கோர்ஸ் படித்தால் விமானி ஆகிவிடலாம்.*

*✈நான் இப்போது விமானம் ஓட்ட கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக உள்ளேன்.*

*✈சிறு வயதில் உங்களை போன்று வானில் சத்தம் கேட்டால் உடனே நீண்ட நேரம் மேலே பார்த்து கொண்டு இருப்பேன். இன்று அந்த மேகக்கூடத்தின் இடையில்  கீழிருந்து 45,000 அடி மேலே சென்று தைரியமாக விமானம் ஓட்டுகிறேன்.*

*✈அரசு பேருந்து ஓட்டுநராக உள்ள எனது தந்தை வருமானத்தில், நடுத்தர குடும்பத்தில் பிறந்த என்னால் சாதிக்க முடிந்தபோது உங்களால் கண்டிப்பாக ஏதாவது ஒரு துறையில் சாதிக்க முடியும். முயற்சி செய்து கொண்டே இருங்கள் வெற்றி வசப்படும் என்று பேசினார்.*

*📖மாணவர்கள் அனைவருக்கும் ஆங்கில அகராதிகளை பெண் விமானி வழங்கினார்.*

*⚡மாணவர்கள் அய்யப்பன், காவியா, கீர்த்திகா, கோட்டையன், லெட்சுமணன், வெங்கட்ராமன், முத்தய்யன் ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு பதில் பெற்றனர்.*

*🙏ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: