Friday 8 November 2019

*பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த மகளிர் ஊழியருக்கு Safe Surfing ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்துதல். அண்ணா மேலாண்மை நிறுவனத்திற்கு உரிய விவரங்கள் சமர்பிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்தல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/safe-surfing.html


*🌟2019 செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அண்ணா மேலாண்மை நிறுவனம் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைபண்பை மேம்படுத்துவதற்கான திட்டத்தினை 3 நாட்கள் பயிற்சி முகாமாக திட்டமிட்டு நடத்தியதாகவும், தற்போது அச்சு இயந்திரங்கள் காகிதமில்லா பரிவர்த்தனைக்கு தொழில்நுட்ப மேம்பாட்டின் காரணமாக மாற உள்ளதை தொடர்ந்து இதுவரை வலைதள நுணுக்கங்களை தன்னுடைய சொந்த (அ) அலுவலகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தாத (அ) அறியாத ஊழியர்களுக்கு பயன்படும் வகையில் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பொருட்டு அதில் உள்ள குறைகளை தெரிந்து அறியும் பொருட்டு, இந்திய அரசின் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் உதவியுடன் இந்திய வலைதளம் மற்றும் கைபேசி சங்கம் (IAMAI) Safe Surfing என்னும் கருப்பொருளைக் கொண்டு வலைதளம் மற்றும் கைபேசிகளை பாதுகாப்புடன் பயன்படுத்துதல் சார்ந்த பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.*

*🌟மாநிலத்தில் இயங்கி வரும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக பெண் ஆசிரியர்களுக்கு அத் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கினால் அது  இரு வகையில் பயனளிக்கும் என்று கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். Safe surfing பயிற்சி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சியின் பயனாக அது மாணவர்களுக்கு வலைதளத்தினை பாதுகாப்பாகவும், நெறிப்படுத்தும் வகையிலும் பயன்படுத்த அறிவுறுத்துவதோடு அதன் நுணுக்கங்களை  ஆய்த்து தெரியவும் பயன்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.*

*🌟எனவே பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணியாற்றி வரும் பெண் ஆசிரியர்களுக்கு ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் ஒரு குழுவில் இடம் பெறும் வகையில் இந்த safe Surfing எனப்படும் பயிற்சி திட்டத்தினை _நவம்பர் 20ல்_ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி கட்டணம் ஒருவருக்கு ரூ.1000 (ஓராயிரம் மட்டும்) மும் பயிற்சி சாராக் கட்டணமாக ரூபாய் 1200/ -ம் மொந்தம் 2200/வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*🌟இக்கட்டணம் பயிற்சிக்கான உபகரணங்கள், பாடத்திட்டங்கள் மற்றும் காபி, தேனீர், உணவு பிஸ்ட்டுகள், சிற்றுண்டிகள் ஆகியவற்றைப் வழங்குவதற்கான செலவினையும் உள்ளடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*🌟மேலும் பயிற்சி கட்டணம் ரூ 2200 (1000+1200) ஒவ்வொருவருக்கும் கட்டவேண்டியுள்ளதால் விருப்பம் உள்ள பெண் ஆசிரியைகள் மாவட்டத்திற்கு 6 பேர் வீதமும் (சென்னை, காஞ்சிரம், திருவள்ளூர், வேலுர், கூடுதலாக 2 பேர்) பயிற்சிக்கு அனுப்புவதற்கும் தேர்ந்தெடுத்து அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: