*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மைய நிர்வாகிகள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை இன்று (24.12.2019) சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குனரகத்தில் சந்தித்த நிகழ்வு - பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மைய நிர்வாகிகள் மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள், மாநில பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ அவர்கள், மாநில பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ அவர்கள், மாநில துணை பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்_ அவர்களும் இன்று தொடக்கக்கல்வி இயக்குநர் _திரு.பழனிச்சாமி_ அவர்களை இன்று (24.12.2019) சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குனரகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.*
*🤝மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் நமது இயக்க நிர்வாகிகளை இன்முகத்தோடு வரவேற்றார்.*
*🛡இயக்குநர் உடனான சந்திப்பின் பொழுது சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது...*
*💥பொதுமாறுதல் கலந்தாய்வு முடிவுற்ற நிலையில் காலியாக உள்ள ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்தினை 01.01.2019 முன்னுரிமைப் பட்டியலின் (Seniority Panel) அடிப்படையில் நிரப்ப வேண்டும்.*
*💥LKG, UKG -ல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீண்டும் பழையபடி இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.*
*🎙நமது கோரிக்கைகளை இயக்குநர் அவர்கள் பொறுமையாக கேட்டப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார். மேலும் அனைவரும் இணைந்து பணியாற்றினால் தான் ஆரம்பப்பள்ளிகளின் தரத்தை முன்னேற்றமடையச் செய்ய முடியும் எனவே அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.*
_🤝தோழமையுடன்;_
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment