*TNPTF - 11.01.2020 மாவட்ட அளவிலான தர்ணா போராட்டம், பங்கேற்கும் மாநில நிர்வாகிகள் பட்டியல், மாதிரி துண்டுப்பிரசுரம் மற்றும் 08.01.2020 அகில இந்திய வேலைநிறுத்தம் போராட்டம் - பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 35/2019 நாள்: 25.12.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
*☀️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மைய நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் தோழர். மூ.மணிமேகலை அவர்கள் தலைமையில் நேற்று (24.12.2019) மாலை சென்னையில் நமது பேரியக்கத்தின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.*
*☀️அக்கூட்டத்தில் 17.11.2019 இராமேஸ்வரம் மாநிலப் பொதுக்குழு முடிவின்படி 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 04.01.2020 அன்று நடத்த வேண்டிய மாவட்ட அளவிலான 'தர்ணா போராட்டம்" தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தொடர் பணிகளின் காரணமாகவும், இரண்டாம் பருவத்தேர்வு விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் மறுதிறப்பு 03.01.2020 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தர்ணா போராட்டத்தை சிறப்பாக நடத்துவதற்குரிய களப்பணிகளை மேற் கொள்வதற்குரிய கால அவகாசம் இல்லாத சூழ்நிலையாலும் மேற்கண்ட தர்ணா போராட்டத்தை 11.01.2020 சனிக்கிழமை முற்பகலிலோ அல்லது பிற்பகலிலோ அந்தந்த மாவட்ட வசதிக்கு ஏற்றவாறு நடத்திட தீர்மானிக்கப்பட்டது.*
*☀️எனவே, மாநில மைய முடிவின்படி 11.01.2020 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பேரெழுச்சியோடு தர்ணா போராட்டத்தை நடத்திட உரிய ஏற்பாடுகளைச் செய்திட மாவட்ட, வட்டார, நகரக்கிளைகளின் நிர்வாகிகளை மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது. தர்ணா போராட்டத்திற்கான துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வால்போஸ்டர்களை போதுமான அளவில் வெளியிட்டு மாவட்டம் முழுவதும் விநியோகித்து கோரிக்கைகள் அனைத்து ஆசிரியர்களிடமும் சென்றடைவதற்குரிய விரிவான ஏற்பாடுகளை மாவட்டக்கிளைகள் தவறாது மேற்கொள்ள வேண்டும். மாவட்ட வாரியாக தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ளும் மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, அதில் கண்டவாறு துண்டுப்பிரசுரங்களில் மாநில நிர்வாகிகளின் பெயர்களை 'சிறப்புரை" என்ற நிலையில் பயன்படுத்திக் கொள்ளவும் மாநில மையம் கேட்டுக்கொள்கிறது.*
*☀️மேலும், 08.01.2020 அன்று அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறவுள்ள ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதென இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (ளுவுகுஐ) முடிவெடுத்துள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் அடிப்படையில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் தேச நலனுக்கான அப்போராட்டத்தில் பங்கேற்பதென 17.11.2019 இராமேஸ்வரம் மாநிலப் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.*
*☀️தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்தல், தேசிய கல்விக் கொள்கை - 2019 ஐ ரத்து செய்தல் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து நடைபெறும் 08.01.2020 அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் நம் பேரியக்கத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்பது நம் வரலாற்றுக் கடமையாகும். புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து 2003ம் ஆண்டிலிருந்து இதுவரை நடைபெற்றுள்ள 16 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்றுள்ள ஒரே ஆசிரியர் இயக்கம் என்ற பெருமைக்குரிய இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. அந்த மாபெரும் இயக்கத்தின் போர்க்குணமிக்க உறுப்பினர்கள் அனைவரும் 08.01.2020 அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு நம் கோரிக்கைகளை வலிமையாக எடுத்துரைக்க மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது. 08.01.2020 அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்திற்குரிய மாதிரி துண்டுப்பிரசுரம் விரைவில் வெளியிடப்படும் என்பதையும் மாநில மையம் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது.*
*Word File வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவைபடும் தோழர்கள் கீழே உள்ள link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.*
*🗣️📜6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலந்தழுவிய அளவில் மாவட்ட அளவிலான மாபெரும் தர்ணா போராட்ட கோரிக்கைகள் அடங்கிய மாதிரி துண்டுப்பிரசுரம்*
👇👇👇👇👇👇👇👇

No comments:
Post a Comment