🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/12/tnptf-300-tnptf.html
*பொதுச் செயலாளர் சுற்றறிக்கை எண் 1 33/2019 நாள் - 08.12.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
*🗞6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 05.12.2019 அன்று நம் பேரியக்கம் நடத்திய வட்டார அளவிலான பெருந்திரள் முறையீடு" போராட்டம் தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட வட்டார நகரக் கிளைகளில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது மேற்கண்ட நிகழ்வில் பத்தாயிரத்திற்கும் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு நம் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளார்.*
*🗞உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி சில வட்டாரங்களில் காவல்துறை அனுமதி மறுத்ததாலும், மழை வெள்ளம் காரணமாகவும் சில வட்டார, நகரக் கிளைகளில் பெருந்திரள் முறையீடு” நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் மாநிலப் பொதுக்குழு எடுத்த முடிவை அமல்படுத்துவதில் வட்டார, நகரக் கிளைகளின் முயற்சி என்பதும், பங்கேற்பு என்பதும் மிகவும் பாராட்டுக்குரியது.*
*🗞அடுத்து நம் பேரியக்கத்தின் மிக முக்கிய நிகழ்வு என்பது 17.11.2019 இராமேஸ்வரம் மாநிலப் பொதுக்குழு முடிவின்படி வரும் 15.12.2019 ஞாயிறு காலை 10 மணிக்கு மதுரையில் மூட்டா அரங்கில் நடைபெறும் இயக்க இதழ் வெளியீட்டு விழாவாகும்.*
*🗞மாதமிருமுறை இதழாக நம் இயக்கம் கொள்கைகளைத் தாங்கி வெளிவந்த "ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி" இதழை மாநிலச் செயற்குழு முடிவின்படி மாதமொருமுறை இதழாக, வண்ணப்புத்தகமாக "TNPTF ஆசிரியர் முழக்கம்" என்ற பெயரில் வெளியீடுவதந்குரிய பணிகள் வெகுவேகமாக நடைபெற்று வருகிறது.*
*🗞15.12.2019 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெறும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவரும், தமிழகத்தின் பிரபல எழுத்தாளருமாகிய _தோழர், ச.தமிழ்ச்செல்வன்_ அவர்கள் "TNPTF ஆசிரியர் முழக்கம்" இதழை வெளியிட்டு உரையாற்றுகிறார்.*
*🗞நம் இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர்களாகவும் இயக்க இதழின் ஆசிரியர்களாகவும் இருந்து சிறப்பித்த தன் இயக்க மூத்த முன்னோடிகள் _தோழர்.செ.நடேசன், தோழர்.ந.பர்வதராஜன், தோழர்.செ.போத்திலிங்கம், தோழர்.சு.பாலசந்தர்_ ஆகியோர் இதழைப் பெற்றுக் கொண்டு உரையாற்றுகிறார்கள்.*
*🗞நம் இயக்கத்தின் மாநில நிர்வாகிகளாக இருந்து வழி நடத்தி வரலாறு படைத்த மூத்த தோழர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.*
*🗞இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுவில் இடம் பெறும் மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்டச்செயலாளர்கள், மாவட்டப் பொருளாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டாரச் செயலாளர்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க மாநில மையம் அன்புடன் அழைக்கிறது. மேலும், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கள்ளர் பள்ளி, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டக்கிளைகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் நம் இயக்க உறுப்பினர்களை இந்நிகழ்வில் பங்கேற்கச் செய்திட அந்தந்த மாவட்டக்கிளைகள் ஏற்பாடு செய்திட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது. மேலும், ஆர்வமும், விருப்பமும் உள்ள நம் இயக்க உறுப்பினர்கள் அனைவரையும் "இயக்க இதழ் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்க மாநில மையம் இருகரம் கூப்பி வரவேற்கிறது.*
*🗞நம் இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வான "இயக்க இதழ்" வெளியீட்டு விழா நிகழ்வில் பங்கேற்க நம் இயக்க உறுப்பினர்கள் இதையே அழைப்பாக ஏற்று தங்களின் மேலான வருகையை உறுதி செய்திடுமாறு மாநில மையம் தோழமையுடன் அழைக்கிறது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment