🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/12/tnptf-tnptf.html
*_அன்பான தோழர்களே!வணக்கம்_*
*🎙நாமக்கல் மாவட்டத்தில் இன்று (01.12.2019) குறிப்பிடத்தக்க இரண்டு இயக்க நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வட்டாரக் கிளைக்கு,புதிய அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.இது மிகவும் மகிழ்ச்சிக்கும், பாராட்டுதலுக்கும் உரிய ஒரு நிகழ்வு. இந்நிகழ்விற்கு முயற்சி எடுத்த அனைத்து தோழர்களுக்கும் மாநில மையம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கிறது.பள்ளிபாளையம் வட்டார கிளையின் போர்ப் பாசறையாய் புதிய அலுவலக் கட்டிடம் விளங்கிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் புரட்சிகரமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறது*
*🎙அதேபோன்று நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வட்டாரத்தில் இயக்கத்தின் புதிய கிளை துவக்க விழா இன்று (01.12.2019) மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. கொல்லிமலை வட்டாரக் கிளை மீண்டும் புதுப்பொலிவுடன் இயக்கப் பதாகையை உயர்த்திப் பிடித்து முன்னேற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் புரட்சிகரமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறது*
*🎙மேற்கண்ட இரு நிகழ்வுகளுக்கும் காரணமான நாமக்கல் மாவட்ட, வட்டார பொறுப்பாளர்களுக்கும், முன்னணித் தோழர்களுக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது*
🤝தோழமையுடன்;
*_ச.மயில்_*
*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment