*அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் நாளை (08.01.2020) - "தீரமுடன் பங்கேற்போம்" - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளரின் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 01/2020 நாள்: 07.01.2020*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
*⚔*
*🛡ஊழியர் நலன்களுக்கு விரோதமான தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும்.*
*⚔*
*🛡தேசநலனுக்கு எதிரான தேசிய கல்விக்கொள்கை 2019 ஐ திரும்பப் பெறுதல் வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். தேசத்தின் எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்கும் பொதுத்துறைப் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது.*
*⚔*
*🛡தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தக்கூடாது என்பன உள்ளிட்ட தேச நலன் சார்ந்த 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (08.01.2020) அகில இந்தியப் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.*
*⚔*
*🛡தேசம்காக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதும் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கின்ற 20 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். அரசுப் போக்குவரத்து, ஆட்டோ, கால் டாக்சி, லாரி, சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்தில் ஈடுபடும் தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.*
*⚔*
*🛡தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட அகில இந்திய அளவிலான பத்து மத்திய தொழிற்சங்கங்களும், மாநில அளவிலான பல்வேறு தொழிற்சங்கங்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.*
*⚔*
*🛡தமிழகத்தைப் பொறுத்த அளவில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் (STFI) அங்கம் வகிக்கும் 10 ஆசிரியர் அமைப்புகளும் பல்வேறு அரசு ஊழியர் அமைப்புக்களும் கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்புக்களும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் நடைபெற்றுள்ள அனைத்து அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டங்களிலும் பங்கேற்ற பெருமைக்குரிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இந்த மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக 17.11.2019 இராமேஸ்வரம் மாநிலப் பொதுக்குழுவில் முடிவாற்றியுள்ளது.*
*⚔*
*🛡தேசநலன், பொதுமக்கள் நலன், தொழிலாளர் நலன், ஊழியர் நலன், ஆசிரியர் நலன் சார்ந்த இந்த மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது என்பது நம் ஒவ்வொருவரின் வரலாற்றுக் கடமையாகும். தேசநலன் காக்கும் இப்போராட்டத்தில் பங்கேற்று இயக்கம் எடுத்த முடிவை நிறைவேற்றும் நெஞ்சுறுதி கொண்ட தோழர்களைக் கொண்ட இயக்கம் நம் பேரியக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் நம் பேரியக்கத் தோழர்கள் நாளைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் உறுதியோடு பங்கேற்றிட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*
*⚔*
*🛡வழக்கம் போல் தமிழக அரசு போராட்டத்தை முடக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. தனது ஊழியர்களை, ஆசிரியர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தொழிலாளர் வர்க்கம் இருப்பதை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறது. மத்திய மாநில அரசுகள் கட்டுக்கடங்காத காளைபோல் கண்மூடித்தனமாக சென்று கொண்டிருக்கின்றன. தறிகெட்டுச் செல்லும் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் மூக்கணாங்கயிறாக நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் வெற்றி உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் தான் உள்ளது.*
*⚔*
*🛡இது தேசநலனுக்காக போராட்டம். நமக்கான போராட்டம். நம் எதிர்கால சந்ததியினருக்கான போராட்டம். உழைக்கும் வர்க்கத்தின் உரிமை மீட்புப் போராட்டம். ஏழை எளிய மக்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கான வலிமையான போராட்டம். இந்த தேசம் தழுவிய போராட்டக்களத்தில் நிற்கும் தொழிலாளர் சமுத்திரத்தில் ஒரு சிறு துளியாய் நாமும் பங்கேற்போம்.*
*⚔*
*🛡'பொது வேலைநிறுத்தம் என்பது உழைக்கும் மக்களை ஒரு பெரும் போராட்டத்திற்குத் தயார் செய்கிற ஒரு இராணுவப்பயிற்சி. அப்பெரும் போராட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது. உழைக்கும் மக்கள் யாவரையும் ஒன்றிணைக்கும் பாலமே, பலமே பொது வேலை நிறுத்தம்!"*
*_'இது முடிவுமல்ல... ஆரம்பமுமல்ல..._*
*_இது ஒரு தொடர் புரட்சிப்பயணம்!_*
*_பயணத்தைத் தொடர்வோம்..._*
*_ஒற்றை இலக்கோடு!"_*
_🤝தோழமையுடன்;_
*_ச.மயில்_* *பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment