*புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, 2020 ஜனவரி 8 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் பங்கேற்போம்! தேச நலன் காப்போம்! - பொது வேலைநிறுத்தம் மாதிரி துண்டுப்பிரசுரம் - பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*_______மாவட்டக்கிளை*
*_புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக,_*
*2020 ஜனவரி 8 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் பங்கேற்போம்! தேச நலன் காப்போம்!*
*_அன்புமிக்க ஆசிரிய சகோதர, சகோதரிகளே!_ வணக்கம்.*
*⚔*
*🛡மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் எதிர்த்து இந்திய தேசத்தில் உள்ள கருத்தாலும் கரத்தாலும் உழைக்கும் மக்களின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் வகையில் அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள், மாநில அளவிலான தொழிற்சங்கங்கள், பி.எஸ். என்.எல்., ரெயில்வே, காப்பீட்டுத்துறை பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர் அமைப்புகள் கலந்து கொள்ளும் அகில இந்தியப் பொதுவேலை நிறுத்தம் 08.01.2020 அன்று நடைபெற உள்ளது.*
_ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்கள் பங்கேற்பு:_
*⚔*
*🛡தேசத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் இந்த தேசபக்தப் போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள ஆசிரியர், அரசு ஊழியர் அமைப்புகளும் முடிவெடுத்துள்ளன. அகில இந்திய அளவில் மிகப்பெரிய பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பாக விளங்கிக் கொண்டிருக்கும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பும் (STFI) இப்போராட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்துள்ளது. இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், தமிழகத்தில் வலிமை மிக்க ஆசிரியர் இயக்கமாக விளங்கிக் கொண்டிருக்கும், தேசநலன், ஆசிரியர் நலன், மாணவர்நலன், கல்விநலன் காத்திட சமரசமற்ற தொடர் களப்போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் மகத்தான ஆசிரியர் இயக்கமாம் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறது.*
புதிய ஓய்வூதியத் திட்டம்:_
*⚔*
*🛡இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 336ன் 17வது பிரிவு ஓய்வூதியம் சட்டப்பூர்வமானது என்று அழுத்தமாகக் கூறியுள்ளது. ஆனால் இன்று மத்திய மாநில அரசுகள் தனது ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் பொறுப்பினைக் கைகழுவிக் கொண்டிருக்கின்றன. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை நிர்க்கதியாய், நடுத்தெருவில் நிறுத்தி வைத்து மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் கொடூரமான நிலையை முறியடித்து புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டிட 08.01.2020 அகில இந்தியப் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது நமது தலையாய கடமையாகும்.*
_தேசிய கல்விக் கொள்கை - 2019:_
*⚔*
*🛡இன்று தேசிய கல்விக் கொள்கை - 2019 என்ற பெயரில் கல்வியில் மதத்தைக் கலக்கும் விஷ முயற்சிகள் தற்போது வேகம் பெற்றிருக்கின்றன. இந்தியா போன்ற பரந்து விரிந்த மதச்சார்பற்ற தேசத்தில் இவ்வாறான நிலை என்பது தேச ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தி விடும் என்று நடுநிலையாளர்களும், நல்லவர்களும் அஞ்சுகிறார்கள். புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு துடிப்பதும், மத்திய அரசு அதை அமல்படுத்துவதற்கு முன்பே தமிழக அரசு அதில் உள்ள முக்கிய அம்சங்களை அமல்படுத்துவதும் தேசத்தின் எதிர்காலக் கல்வியை நாசப்படுத்தும் முயற்சிகளாகும். _வேலை நிறுத்தம் ஏன்?_*
*⚔*
*🛡ஜனவரி 8 வேலை நிறுத்தப் போராட்டத்தின் அவசியம் என்ன என்பதை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சுயசிந்தனையுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. தொழிற்சங்க இயக்கங்கள் முன்வைத்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாத நிலையில் தேசநலன் காக்கும் இப்போராட்டம் நடைபெறுகிறது.*
_கோரிக்கைகள்:_
*⚔*
*🛡புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துதல், தொழிலாளர் நலச் சட்டங்களை அமலாக்குதல், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிடுதல், முறைசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 3000 ரூபாயாக உயர்த்துதல், குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ.21000 ஆக உயர்த்துதல், நாட்டின் பாதுகாப்பு, சிவில் விமானப் போக்குவரத்து, மருந்து உற்பத்தி, சில்லறை வர்த்தகம் ஆகியவற்றில் நேரடி அந்நிய முதலீட்டைத் தவிர்த்தல் உள்ளிட்ட தேசநலன், மக்கள்நலன், ஆசிரியர் அரசு ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காக நடைபெறும் 2020 ஜனவரி 8 அகில இந்தியப் பொது வேலை நிறுத்தத்தில்; கலந்து கொள்வது என்பது நம் ஒவ்வொருவரின் வரலாற்றுக் கடமையாகும்.*
*_நம்முடைய எதிர்கால நலன் மற்றும் தேசநலன் காக்கும் இப்போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்போம்!_*
*_வெற்றி பெறுவோம்!_*
_இவண்_
*மாவட்டப் பொருளாளர்* *மாவட்டச் செயலாளர்,* *மாவட்டத் தலைவர்*
No comments:
Post a Comment