Saturday, 1 February 2020

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில நிர்வாகிகள், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மதிப்புமிகு. சிஜி தாமஸ் வைத்தியன் IAS அவர்களை நேரில் சந்தித்து பேசிய நிகழ்வு*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில நிர்வாகிகள், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மதிப்புமிகு. சிஜி தாமஸ் வைத்தியன் IAS அவர்களை நேரில் சந்தித்து பேசிய நிகழ்வு*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் இன்று (01.02.2020) சென்னையில் டி.பி.ஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மதிப்புமிகு. சிஜி தாமஸ் வைத்தியன் IAS அவர்களை நேரில் சந்தித்து பேசிய நிகழ்வு*

*⚡இந்நிகழ்வில் அரசாணை எரிப்பு, ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான 17(ஆ) நடவடிக்கைகளை ரத்து செய்தல்,*

*⚡5,8 வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தல்,*

*⚡பள்ளி தொடர்பான இணையதள பதிவுகளால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்,*

*⚡மாநிலம் முழுவதும் தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்குவதில் தாமதம்,

*⚡B.Lit;BEd ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல்,*

*⚡துப்புரவுப் பணியாளர்களின் ஊதியம் வழங்கப்படாமை,*

*⚡பள்ளிக் கல்வித் துறையில் அதிகாரபூர்வ விடுமுறை பட்டியல் வெளியிடாததால் ஏற்பட்டுள்ள குழப்பங்கள்,*

*⚡CRC மையங்களின் தலைமை ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் ஆரம்ப நடுநிலைப் பள்ளிகள் வருவதால் ஏற்பட்டுள்ள குளறுபடிகள்,*

*⚡பொது மாறுதல் கலந்தாய்விற்கு பின்பு ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது*

*🌟இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்,*

*⚡மாநில தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_*

*⚡பொதுச்செயலாளர் _தோழர். ச.மயில்,_*

*⚡மாநில பொருளாளர் _தோழர் க.ஜோதி பாபு,_*

*⚡துணைப் பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்,_*

*⚡STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச. மோசஸ்,_*

*⚡மாநில துணைத் தலைவர் _தோழர் பெ.அலோசியஸ் துரைராஜ்,_*

*⚡மாநிலச் செயலாளர் _தோழர்.சி.ஜி. பிரசன்னா_ ஆகியோர் கலந்து கொண்டனர்*

_🤝தோழமையுடன்;_

*ச.மயில்*
*மாநில பொதுச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: