*🚨🧫😷கொரோனா நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்கிட - கொரோனா நோய்த்தடுப்பு, நிவாரணப் பணிகளில் பங்கேற்க ஆசிரியர்கள் முடிவு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*_பேரமைப்பின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
*🚨*
*😷மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 03/2020 நாள்: 27.03.2020*
*🚨*
*😷கொரோனா நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்கிட கொரோனா நோய்த்தடுப்பு, நிவாரணப் பணிகளில் பங்கேற்க ஆசிரியர்கள் முடிவு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு*
*🚨*
*😷கொரோனா நோய்த் தடுப்பு நிவாரண நிதியாக ஒருநாள் ஊதியத்தை தமிழக அரசுக்கு வழங்கிடவும், நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பங்கேற்கவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது.*
_இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_
*🚨*
*😷கொரோனா என்னும் கொடிய நோய் தொற்று இன்று உலகையே மிகக் கடுமையாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலகின் பெரும்பான்மையான மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். உலக வரலாற்றில் இதுபோன்றதொரு நிகழ்வை இத்தலைமுறையில் முதன் முறையாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.*
*🚨*
*😷உலகில் பொருளாதாரத்திலும், விஞ்ஞானத்திலும், மருத்துவத் துறையிலும் முன்னேறிய நாடுகள் கூட கொரோனாவின் கொடுந்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பாதிப்புக்கு உள்ளாகியும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர்ப்பலியாகியும் உள்ளனர்.*
*🚨*
*😷நாள்தோறும் ஊடகங்களின் வழியே வெளியாகும் செய்திகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. இந்தியாவிலும் கொரோனாவின் கோரத் தாக்குதல் தொடங்கியிருக்கிறது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் இந்திய தேசத்தில் கொரோனா நோயின் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.*
*🚨*
*😷அரசின் நடவடிக்கைகளுக்கு நூறு சதவீதம் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டியது இந்திய மக்கள் அனைவரின் கடமையாகும்.*
*🚨*
*😷கொரோனாவைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கூலித் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.*
*🚨*
*😷தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லாப் பொருட்கள் வழங்கவும் குடும்ப அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கவும் முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் இத்தொகை மிகவும் குறைவானது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.*
*🚨*
*😷ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும். விலையில்லா ரேஷன் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கப்பட வேண்டும். மேலும் பல்வேறு உதவிகள் செய்யப்பட வேண்டும்.*
*🚨*
*😷எனவே கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் தங்களது ஒருநாள் ஊதியத்தை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்திட மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது.*
*🚨*
*😷ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து இத்தொகையைப் பிடித்தம் செய்திட தமிழக அரசு ஆணையிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.*
*🚨*
*😷மேலும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட தகுதியுள்ள, ஆர்வமுள்ள ஆசிரியர்களை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு பயன்படுத்த தமிழக அரசு முன்வந்தால் எங்களது அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அப்பணியில் ஈடுபட தயாராக உள்ளார்கள் என்பதையும் தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.*
_🤝தோழமையுடன்;_
*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment