*CORONA தற்காப்பு விடுமுறை - முதல்வர் & ஆணையரின் ஆணையை மீறிய கல்வி அலுவலர்களின் மேதாவித்தனமான புரிதலால் மாணவரின்றி ஆசிரியப்பணி! 1-8 வகுப்புகளுக்கு முழுமையான விடுமுறையளிக்க தொடக்கக் கல்வி இயக்குநரிடம் TNPTF வலியுறுத்தல்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
_பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 07/2020_ நாள்: 16.03.2020_
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்!*
*⚔*
*🛡 கொரோனா நோய்த்தடுப்பு முயற்சியாக தமிழகம் முழுவதும் KG வகுப்புகள் முதல் ஐந்தாம் வகுப்பு வரை 16.03.2020 முதல் 31.03. 2020 முடிய தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது.*
*⚔*
*🛡 கொலை நோயான கொரோனோவின் பாதிப்பு உலகமெங்கும் மிகக்கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அறிவியலிலும், மருத்துவத்திலும் மிக முன்னேறிய நாடுகள் கூட கொரோனாவின் கொடிய தாக்குதலைச் சந்தித்துக் கொண்டிருப்பதை தற்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.*
*⚔*
*🛡 இந்திய அரசு கொரோனாவைத் தேசியப் பேரிடராக அறிவித்துள்ளதன் மூலம் அதன் தாக்கம் எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.*
*⚔*
*🛡 இக்கட்டான இச்சூழலில் நோய் தடுப்புத் தொடர்பாக நம் இயக்கத் தோழர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் மருத்துவ வல்லுநர்கள் கூறும் சுகாதார மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும்.*
*⚔*
*🛡 தமிழகம் முழுவதும் 16. 03.2020 முதல் 31.03. 2020 முடிய தொடக்கக் கல்வித்துறையில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.*
*⚔*
*🛡 அதிலும் இந்த விடுமுறை மாணவர்களுக்கு மட்டும் தான், ஆசிரியர்களுக்கு இல்லை என்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கல்வித்துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டு இன்று (16.03.2020) மாணவர்களே இல்லாமல் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர்.*
*⚔*
*🛡 கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் சில வினோதமான நிகழ்வுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதில் உச்சகட்ட நிகழ்வுதான் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை என்பதும், ஆசிரியர்களுக்குப் பணி என்பதும்.*
*⚔*
*🛡 பள்ளிக்கல்வித்துறை ஆணையரின் உத்தரவில் ஆசிரியர்கள் பணிக்குச் செல்ல வேண்டும் என்று எவ்வித வார்த்தையும் இல்லாத நிலையில், மாவட்ட அளவிலான, வட்டார அளவிலான சில கல்வித் துறை அலுவலர்களின் மேதாவித்தனமான புரிதலின் காரணமாகவும், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் சில ஆசிரியர்களின் படு வேகமான பரப்புதலின் காரணமாகவும் இந்த வினோத நிலை ஏற்பட்டதாகக் கருதவும் இடம் உள்ளது*
*⚔*
*🛡 இச்சூழலில் இன்று (16.03.2020) மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை த் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் அவர்கள் தொடக்கக்கல்வித்துறையில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பதையும், மாணவர்கள் இன்றி ஆசிரியர்கள் மட்டும் பணிக்குச் செல்வது என்பது எவ்விதத்திலும் பொருத்தமானதல்ல என்பதையும்,எனவே ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளார் என்பதை மாநில மையம் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது.*
*⚔*
*🛡 மேலும்,19.03.2020 புதுதில்லிப் பேரணி கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், புதுதில்லிப் பயணத்திற்கு வருவதற்கு முன் பணம் மற்றும் முழுப்பணம் செலுத்தியிருந்த நம் இயக்கத் தோழர்களுக்கு ரயில் பயண முன்பதிவு மற்றும் விமானப் பயண முன்பதிவு கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் போக மீதிப் பணம் விரைவில் நடைபெற உள்ள மாநிலச் செயற்குழுவில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலம் திருப்பி அளிக்கப்படும் என்பதையும் மாநில மையம் தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.*
சென்னை.
16.03.2020
_🤝தோழமையுடன்,_
*_ச.மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment