Monday 6 April 2020

*கொரோனா நோய்த்தடுப்பு விழிப்புணர்வு - ஒருநாள் ஊதியம் வழங்கல்- இன்றைய உலகச் சூழல் - இயக்கப் பணிகள் குறித்து இயக்க உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலாளரின் கடிதம்*

*கொரோனா நோய்த்தடுப்பு விழிப்புணர்வு - ஒருநாள் ஊதியம் வழங்கல்- இன்றைய உலகச் சூழல் -  இயக்கப் பணிகள் குறித்து இயக்க உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலாளரின் கடிதம்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே!_ வணக்கம்*

**
*🛡24.3.2020 முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மூலம் நாடே அடங்கியிருக்கிறது. எதிர்பாராத நெருக்கடியான இக்காலகட்டத்தில் தங்களையும்,தங்கள் குடும்பத்தாரையும் தற்காத்துக் கொள்வதில் விழிப்புடன் இருப்பீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.அதே நேரத்தில் நம் அருகமைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் தக்க விழிப்புணர்வை ஊட்டுவது என்பதும் ஆசிரியர்கள் என்ற முறையில் நம் தலையாய கடமையாகும்*

**
*🛡இப்படி ஒரு நெருக்கடியை,நிம்மதி இழப்பை,இக்கட்டான நிலையை, இழிநிலையை உலகில் யாரும் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. கருவிலே இருக்கும் குழந்தைக்குக் கூட அறுவைச் சிகிச்சை செய்யும் அளவிற்கு மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்துள்ள இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே,பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விண்ணில், அந்தரத்தில் ஆய்வுக் கூடம் அமைத்து மனிதர்கள் மாதக்கணக்கில் அங்கு தங்கி ஆய்வு நடத்துகிற அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிற இன்றைய சூழலிலே, உலகையே புரட்டிப் போட்டுவிட்ட கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரசை அழிக்கும் வழி தெரியாத நிலையில் உலக விஞ்ஞானம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது*

**
*🛡சில மணி நேரத்தில் உலகையே அழித்து விடுகிற அளவுக்கு அணுஆயுதங்களைக் கைவசம் வைத்திருக்கும் வல்லரசுகள் எல்லாம் கொரோனாவைக் கண்டு குலை நடுங்குகிற காட்சிகள் கற்பனைக்கும் எட்டாததாகவே உள்ளது. உலகில் சொர்க்கபுரியாகக் காட்சியளித்த பணக்கார நாடுகளில் மக்கள் கொத்துக் கொத்தாய் பல்லாயிரக்கணக்கில் மாண்டு கொண்டிருப்பது இதயமுள்ள எவரையும் கதறச் செய்துவிடும் காட்சிகளாகவே உள்ளது*

**
*🛡உலக வரலாற்றில் இப்படி ஒரு இழிநிலை எப்போதும் ஏற்பட்டதில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இரண்டாம் உலகப் போர் காலத்தில் கூட இப்படி ஒரு மரண பீதியில் உலகம் முழுவதும் மக்கள் இருக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்*

**
*🛡உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. உலக மக்கள் தொகையில் 95 சதவீதம் பேர் அச்சத்தின் பிடியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையை உலகம் ஒருபோதும் சந்தித்ததில்லை*

**
*🛡தீங்குயிரி கொரோனாவின் கொடுங்கரங்கள் நம் இந்தியத் திருநாட்டிலும் தனது வேலையைக் காட்டிக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் இந்தியாவில் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருப்பது பெருத்த கவலையையும், பேரச்சத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது*

**
*🛡இருப்பினும் நம் நாட்டில் கொரோனா நோய்த்தொற்று இன்னும் சமூகத் தொற்றாக உருவாகவில்லை என்பது நமக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு சமூகத்தொற்று என்ற நிலையை எட்டினால் ஏற்படும் இழப்பை கற்பனைகூட செய்து பார்க்க நெஞ்சம் பதறுகிறது*

**
*🛡எனவே,கொரோனா சமூகத்தொற்றாக மாறாமல் இருக்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதில் ஒன்றுதான் ஊரடங்கு என்பது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் இன்னும் பன்மடங்கு வேகம்பெற வேண்டியுள்ளது. அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டியது நாட்டு மக்களின் கடமையாகும். ஆசிரியர்கள் என்ற முறையில் அதில் முன்னணிப் பங்கு வகிப்பது நம் இயக்கத் தோழர்கள் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்*

**
*🛡நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை அகில உலக மருத்துவர்கள் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ கண்டுபிடிப்புகளால் உலகையே தலைகீழாக மாற்றியுள்ள உலக விஞ்ஞானம்,தற்போது உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனாவை அழித்தொழிக்கும் மருந்தை விரைவில் கண்டுபிடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனினும் தற்போதைய நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும், மட்டுப்படுத்தும் நடவடிக்கை என்பது ஒவ்வொரு தனிமனிதனின் கைகளில்தான் உள்ளது. அதுதான் தனிமைப்படுத்துதல் என்பதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது என்பதும்*

*
*🛡"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.ஆனால் இன்றோ, "தனித்து வாழ்ந்தால் தனக்கு நன்மை" "தன்னுயிர் காக்க தனித்து வாழ்" உன்னுயிர் காக்க ஒதுங்கி வாழ்" என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
_எனவே,நம்மைக் காக்க, நம் குடும்பத்தைக் காக்க,நம் தேசத்தைக் காக்க நாம்,
*_தனித்திருப்போம்!_
*_விழித்திருப்போம்!_*

*
*🛡தோழர்களே!நம் பேரியக்கமான TNPTF என்பது எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் இயக்கம். ஒரு வற்றாத ஜீவ நதியின் இடையறாத தங்குதடையற்ற பயணத்தைப் போல தனது பயணத்தை தோன்றிய நாள் முதல் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டிருக்கும் இயக்கம்*

**
*🛡இடையறாது இயங்கிக் கொண்டிருப்பதற்கு பெயர்தான் இயக்கம். நம் இயக்கத்தின் இயக்கத்தில் எப்போதும் தயக்கம் ஏற்பட்டதே இல்லை. ஆனாலும் உலகமே நிலைகுலைந்து நிற்கும் இவ்வேளையில் நம் இயக்கத் தோழர்களும் உலகத்தோடு ஒட்ட வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த இடைவேளைக் காலங்களில் அறிவுச் செறிவூட்டும் புத்தகங்களைப் படிப்பது,கற்றல் கற்பித்தல் தொடர்பான புதிய நெறிமுறைகளைத் தெரிந்துகொள்வது, ஆக்கப்பூர்வமான இல்லப் பணிகளை மேற்கொள்வது, ஆசிரியர்,அரசு ஊழியர் இயக்க மற்றும் தொழிற்சங்க வரலாறுகளைத் தெரிந்து கொள்வது,நம் இயக்கத் தோழர்களோடு அவ்வப்போது கைபேசியில் உறவாடுவது போன்ற செயல்பாடுகளில் தொய்வின்றி நாம் ஈடுபடவேண்டும் என மாநில அமைப்பு அன்புடன் கேட்டுக் கொள்கிறது*

**
*🛡மாநில அமைப்பின் அறிவிப்பை ஏற்று பல மாவட்டங்களில் நம் இயக்கத் தோழர்கள் நோய்த்தடுப்பு, விழிப்புணர்வு,அரசுப் பணிகள் மற்றும் தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்குரியது. இன்னும் சில நம் இயக்கத் தோழர்கள் ஊரடங்கால் வருவாய் இழந்து நிற்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள செயல்களும் பாராட்டுக்குரியவை*

**
*🛡கொரோனா தடுப்பு நிவாரணப் பணிகளுக்கு நம் இயக்க உறுப்பினர்கள் ஒருநாள் ஊதியத்தை தமிழக அரசுக்கு அளிப்பது என நம் மாநில அமைப்பு ஏற்கனவே முடிவெடுத்து அறிவித்துள்ளது. அதன்படி தமிழக அரசு ஒருநாள் ஊதியத்தையோ அல்லது அதற்கும் கூடுதலான ஊதியத்தையோ தருவதற்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் விருப்ப கடிதம் தர அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்-20 மாத ஊதியத்தில் பிடித்தம் செய்திட நம் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாது தங்கள் விருப்பத்தை தெரிவித்திட மாநில அமைப்பு அன்புடன் கேட்டுக்கொள்கிறது. நாம் அளிக்கும் இச்சிறு உதவி நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு எவ்வகையிலேனும் பயன்படும் என்பதை நம் இயக்கத் தோழர்கள் உணர்ந்து  செயல்படவேண்டும்*

**
*🛡கடந்த காலங்களில் கஜா புயல் நிவாரண நிதிக்கு மாண்புமிகு தமிழக முதல்வரிடம் 10லட்சம் ரூபாயையும், கேரள வெள்ள நிவாரண நிதிக்கு மாண்புமிகு கேரள முதல்வரிடம் 10லட்சம் ரூபாயையும் வழங்கி உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாட்டின் ஒரே ஆசிரியர் இயக்கம் நம் பேரியக்கம் என்பதை இந்நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்*

**
*🛡தெலுங்கானா, ஆந்திரா,ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து 30% முதல் 50% வரை கொரோனா நோய்த்தடுப்பு நிவாரண நிதியாக ஊதியப் பிடித்தம் செய்திட தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக ஆணை பிறப்பித்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது*

**
*🛡பொதுவாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தாங்கள் பெறும் மாத ஊதியத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். அவர்கள் ஒன்றும் மிகப்பெரும் செல்வந்தர்கள் அல்ல. ஒருமாத ஊதியம் கிடைக்காவிட்டால் கூட தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு சிரமப்படும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பெரும்பான்மையோர் உள்ளனர். தங்கள் ஊதியத்தில் 75%ஐ வருங்கால வைப்புநிதிப் பிடித்தம், வருங்கால வைப்புநிதிக் கடன் தவணை,வீட்டுக் கடன்,தனிநபர் கடன், வாகனக் கடன் போன்றவைகளுக்கு மாதத் தவணையாக செலுத்துபவர்கள் என்பதை உணராமல் மேற்கண்ட மாநில அரசுகள் தங்கள் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளதை நமது அகில இந்திய அமைப்பான இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) கண்டித்துள்ளது. அதைத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் வன்மையாகக் கண்டிக்கிறது*

**
*🛡அன்புத் தோழர்களே! இந்த இக்கட்டான சூழலில் நம்மையும்,நம் குடும்பத்தையும்,இந்த தேசத்தையும் காப்பதற்கு நம்மால் இயன்ற உதவிகளை இடையறாது ஆற்றுவோம்.நோய்த்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மக்கள் நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம்.கொரோனா என்ற கொடுமை ஒழிந்து நம் அன்றாட வாழ்க்கையில் கல்விப் பணியிலும், இயக்கப் பணியிலும்,சமூகப் பணியிலும் முன்புபோல் ஈடுபடும் நாள் விரைவில் உருவாகும்.*

_அதுவரை_

*_தனித்திருப்போம்!_*
*_விழித்திருப்போம்!_*

*_சமூக விலகலைக் கடைப்பிடிப்போம்!_*

*_தேசம்காப்போம்!_*

*சென்னை*
*06.04.2020*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்_
_பொதுச் செயலாளர்_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: