Sunday, 19 April 2020

*நலிவுற்ற குடும்பங்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிவாரணப் பொருட்கள் வழங்கல்.*

*நலிவுற்ற குடும்பங்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிவாரணப் பொருட்கள் வழங்கல்.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://youtu.be/Si8PKuiRHVA

*_ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டோம்_*

*_இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கே! என்ற எண்ணத்தில்_*

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்ட கிளை எடுத்த சிறு முயற்சியின் விளைவு*

**
*🛡நலிவுற்ற கரகாட்ட கலைஞர்கள், தையல் கலைஞர்கள், மாற்று திறனாளிகள், செளராஸ்டிரா மக்கள், மிகவும் விளிம்பு நிலையில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு*

**
*🛡ரூபாய் 2 லட்சம் செலவில் நிவாரணப் பொருட்கள் வாங்கி வழங்கிட நேற்று மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) சிவகுருநாதன் அவர்களிடம் முறையாக ஒப்புதல் பெறப்பட்டது.*

**
*🛡மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் பயிலும் மூன்று மாணவர்களை*

*_1.மகாலிங்கம்_*
*_2.நவீன்_*
*_3.மீஷாக் ராபின்சன்_*

*தன்னார்வலர்களாக இன்று நம்முடன் வருகை தந்தனர்.*

**
*🛡இவர்களுடன் இணைந்து இன்று திருநெல்வேலி மாநகரில் மொத்தம் 200 குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாய் செலவில் 10 கிலோ அரிசி பையுடன் தலா 1000/- ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.*

**
*🛡உலகையே அச்சுறுத்தும் உயிர்கொல்லி நோயான கோரனாவால் ஊரடங்கு உத்தரவிற்கு ஆட்பட்டு அடுத்த வேளை உணவிற்கே வழி தெரியாது வறுமையில் சிக்கி தவிக்கும் விளிம்பு நிலை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்கின்ற போது*

*TNPTF என்ற நமது பேரமைப்பு*...

*_ஆசிரியர் நலன்_*
*_மாணவர் நலன்_*
*_சமூக நலனில்_*

*அன்றும் இன்றும் என்றும் அக்கறையுடன் செயல்படும் அமைப்பு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கின்றது.*

**
*🛡இவ்வாறு நாம் செயல்பட காரணமே நமது இயக்கத்தின் நாடி நரம்புகளாய் செயல்படும் நகர,வட்டார கிளை பொறுப்பாளர்களும்*

**
*🛡இரத்தமும் சதையுமாக இருக்கும் நமது இயக்க அடிப்படை உறுப்பினர்களும்தான்  என்பதை மாவட்ட கிளை எப்போதுமே முழுமையாக உணர்ந்துள்ளது.*

**
*🛡இச்சிறு முயற்சிக்கு காரணமாக இருந்த நமது மாநில தலைவர் _தோழர்.மூ.மணி மேகலை_ அவர்களுக்கும்,  *மாநில பொதுச்செயலாளர்* தோழர்.ச.மயில் அவர்களுக்கும் மாநில பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ மற்றும் மாநில துணைப் பொதுச்செயலாளர் _தோழர்.சா.கணேசன்_ மற்றும் STFI அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச.மோசஸ்_ அவர்களுக்கும் நெல்லை மாவட்ட கிளையின் நன்றியை உரித்தாக்குகிறோம்.*

_🤝தோழமையுடன்...._

*_செ.பால்ராஜ்_*
*மாவட்ட செயலாளர்*
*திருநெல்வேலி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: