*🛡️TNPTF இயக்கத்தின் 13வது அமைப்புத் தேர்தல்கள் நடத்த கால அட்டவணை நிர்ணயம் - பொதுச்செயலாளர் அறிவிப்பு வெளியீடு*
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் - பொதுச் செயலாளரின் கடிதம்,நாள்:22.01.2021*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே!_ வணக்கம்.*
*⚔️*
*🛡️29.11.2020 அன்று தேனியில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு முடிவின்படி இயக்கத்தின் 13வது அமைப்புத் தேர்தல்கள் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடத்தப்பட வேண்டும்.*
*⚡வட்டார,நகர, மாநகரக்கிளைத் தேர்தல்கள்- டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021*
*⚡மாவட்டக் கிளைத்தேர்தல்கள்- பிப்ரவரி-2021*
*⚡மாநிலத் தேர்தல்- மார்ச் 2021*
*⚔️*
*🛡️மேற்கண்ட கால அட்டவணைப்படி தேர்தல்களை நடத்துவதில் மாவட்ட, வட்டார,நகர, மாநகரக்கிளைகள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். மாநிலம் முழுவதும் பல மாவட்டக் கிளைகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டார,நகர,மாநகரக் கிளைத் தேர்தல்களை நடத்துவதில் வேகமாகச் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. இருப்பினும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார,நகர, மாநகரக் கிளைகளின் தேர்தலையும் ஜனவரி 2021க்குள் திட்டமிட்டபடி முடித்திட அம்மாவட்டக் கிளைகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*
*⚔️*
*🛡️அதே நேரத்தில் ஒருசில மாவட்டக் கிளைகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டார,நகரக் கிளைகளின் தேர்தல்களை இதுவரை தொடங்காமலேயே இருப்பது வருத்தத்தைத் தருவதாக உள்ளது. அந்நிலையில் உள்ள மாவட்டக் கிளைகள் உடனடியாகத் தேர்தல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.*
*⚔️*
*🛡️எந்தச் சூழலிலும் மாநிலப் பொதுக்குழு தீர்மானித்த அட்டவணைப்படி குறித்த காலத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதை மாநில மையம் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது.*
*⚔️*
*🛡️எக்காரணம் கொண்டும் மாவட்டக் கிளைத் தேர்தல்கள் பிப்ரவரி 2021க்குள் முடிக்கப்பட வேண்டும். அவ்வாறு தேர்தலை முடிக்கும் மாவட்டக் கிளைகள்தான் மார்ச் 2021 இல் நடைபெறும் மாநிலத் தேர்தலில் பங்கேற்க முடியும்.*
*⚔️*
*🛡️இது தொடர்பாக 28.01. 2021 அன்று மதுரையில் நடைபெறும் மாநிலச் செயற்குழுவில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.*
*⚔️*
*🛡️வட்டார,நகர,மாநகரக் கிளைத் தேர்தல்களில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இத்துடன் இரண்டு பக்கங்களில் PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து கிளைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்திட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*
🤝தோழமையுடன்;
*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
No comments:
Post a Comment