*🗣️மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் மதிப்புமிகு. பள்ளிக்கல்வி ஆணையர் ஆகியோருடன் மாநில மைய நிர்வாகிகள் சந்திப்பு-பொதுச்செயலாளர் அறிக்கை*
_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி_
மாநில மையம்
_22.07.2021_
*🗣️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மூ. மணிமேகலை, பொதுச்செயலாளர் ச.மயில்,மாநிலப் பொருளாளர் க.ஜோதிபாபு,துணைப் பொதுச்செயலாளர் தா. கணேசன்,STFI பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் ஆகியோர் இன்று(22.07.2021) பிற்பகல் சென்னையில் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து இயக்கத்தின் சார்பில் 22 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து, முக்கியக் கோரிக்கைகள் குறித்து விவாதித்தோம்.இச்சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைந்திருந்தது.*
*🗣️அமைச்சரைப் பார்க்க பெருமளவில் பார்வையாளர்கள் வந்திருந்த நிலையிலும், நமது சங்கத்திற்கு முன்னுரிமை கொடுத்து அழைத்தது பெருமைக்குரியதாக இருந்தது.*
*🗣️மேற்கண்ட நிகழ்வைத் தொடர்ந்து இன்று மாலையில் டி.பி.ஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் அவர்களை மைய நிர்வாகிகள் 5 பேரும் நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்து விரிவாக விவாதித்தோம்.*
*🗣️மதிப்புமிகு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களும் கோரிக்கைகளைத் தெளிவாக உள்வாங்கி, அதற்குப் பொருத்தமான பதிலை வழங்கியது சிறப்பாக அமைந்திருந்தது.*
*🗣️மேற்கண்ட இரு சந்திப்புகளிலும்
*⚡CPS திட்டத்தை ரத்து செய்தல்,*
*⚡இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல்,*
*⚡ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்துதல்,*
*⚡அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வுக்கேற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்தல்,*
*⚡அரசுப் பள்ளிகளில் மராமத்துப் பணிகளை மேற்கொள்ளுதல்,*
*⚡கல்வித்துறை அலுவலகங்களில் போதுமான ஊழியர்களை நியமித்தல்,*
*⚡அனைவருக்கும் கல்வித் திட்ட நிதியை பள்ளி மேலாண்மைக்குழு தீர்மானத்தின்படி செலவு செய்வதை உறுதி செய்தல்,*
*⚡தொடக்கக் கல்வித்துறையைத் தனி அலகாகச் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளுதல்,*
*⚡ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலமான 22.01.2019 முதல் 30.01. 2019 முடிய உள்ள காலத்தை பணிக்காலமாக அறிவித்தல்,*
*⚡ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணி மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்தல்,*
*⚡போராட்டக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட 17(ஆ)நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டவர்களுக்கு காலிப்பணியிடங்களில் உடனடியாகப் பதவி உயர்வு வழங்குதல்,*
*⚡STFI இணைப்புச்சங்கத் தலைவர்களான தோழர்.மா.ரவிச்சந்திரன், தோழர்.P. பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீதான 17(ஆ) நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுதல்,*
*⚡ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் ஆகிய மலைப்பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு மலைப்படி வழங்குதல்,*
*⚡உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல்,*
*⚡பகுதி நேர சிறப்பாசிரியர்கள் 13500 பேரையும் முழுநேர ஆசிரியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்குதல்*
*உள்ளிட்ட 22 கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.*
*🗣️கோரிக்கைகள் குறித்து சாதகமான முறையில் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும், மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்கள் தெரிவித்தது நம்பிக்கை அளிப்பதாக அமைந்திருந்தது.*
*🗣️பள்ளிக்கல்வி ஆணையர் சந்திப்பின்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்.சு. வெங்கடேசன் அவர்களைப் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் அறையிலேயே சந்திக்கும் வாய்ப்பு தற்செயலாக அமைந்ததும், அவரோடு மாநில மைய நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் கூடுதல் மகிழ்ச்சியை தந்தது.*
*🤝தோழமையுடன்*
*_ச.மயில்_* *பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
No comments:
Post a Comment