Sunday, 6 September 2026

ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் இன்றி, பணி பாதுகாப்பு உறுதிபடுத்த வேண்டும்" - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து ஜாக்டோ சார்பில் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் இன்றி, பணி பாதுகாப்பு உறுதிபடுத்த வேண்டும்" - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து ஜாக்டோ சார்பில் ஆர்ப்பாட்டம்! 

ராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எம். மோகனா என்பவரின் செயல்பாடுகளைக் கண்டித்து, ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) சார்பில் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர்கள் செ. சரவணன் மற்றும் து. கார்த்திகேயன் ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர்.

இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எம். மோகனா, மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும்; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களைத் தரக்குறைவாகப் பேசி, அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வதாகவும் நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். மேலும், "நான் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும்" என்ற சர்வாதிகாரப் போக்கிலும், ஹிட்லர் பாணியிலும் மாவட்ட கல்வித்துறையை அவர் வழிநடத்த முயல்வதாகத் தெரிவித்தனர்.

ஆசிரியர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும், கல்விச் சூழலைப் பாதிக்கும் வகையிலும் செயல்படும் முதன்மைக்கல்வி அலுவலர் எம். மோகனா மீது தமிழ்நாடு அரசும், பள்ளிக் கல்வித் துறையும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட 20 அம்ச ஆசிரியர் விரோத நடவடிக்கைகள் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் அ. மாயவன் துவக்கி வைத்து பேசினார். 

அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம். எழில் இளம்வழுதி, மாவட்ட செயலாளர். வி. பர்சிலா வான சாஸ்திரி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.

தொடர்ந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் சே. நீலகண்டன், ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு. தியாகராஜன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மூ. மணிமேகலை, முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் பி. அன்பழகன், ஆசிரியர் கழக மாநில தலைவர் சி. ஜெயக்குமார், தமிழாசிரியர் கழகம் மாநிலத் துணைச் செயலாளர் வா. இராமமூர்த்தி உள்ளிட்ட சங்கத்தின் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் ஆகிய கண்டன உரையாற்றி முழக்கங்களை எழுப்பினர். 

Monday, 30 June 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டாரம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக இயக்க வேர்களுக்கு விழுதுகள் எடுக்கும் பணி நிறைவு பாராட்டு விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டாரம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக இயக்க வேர்களுக்கு விழுதுகள் எடுக்கும்  பணி நிறைவு பாராட்டு விழா.

பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு
வட்டார தலைவர் தோழர்.க. இளங்கோவன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்,
வட்டார செயலாளர் தோழர். அ. சரவணன் அவர்கள் அனைஐவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்,
தோழர்.சே.குமார் மற்றும் தோழர்.தா.ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்,

STFI அகில இந்திய பொதுக்குழு உறுபினர் தோழர்.கு. சுதா அவர்களும்,
TNPTF மாநில செயலாளர் தோழர்.அ. ரஹும் அவர்களும்,
மாவட்ட தலைவர் தோழர்.பி. சவரிமுத்து அவர்களும்,
மாவட்ட செயலாளர் பா. ஜாகீர் உசேன் அவர்களும்,
மாவட்ட பொருளாளர் தோழர்.அ. ஜீவா அவர்களும் விழாவில் கலந்துகொண்டு பாராட்டுரை நிகழ்த்தினார்கள்,

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச. மயில் அவர்கள் சிறப்புரை ஆற்றி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.*

மேலும் மாவட்ட வட்டார துணை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

பாராட்டு பெரும் ஆசிரியர்களையும் அவர்களது உறவினர்களையும், ஆசிரிய உறவுகளையும், சங்க வேர்களையும், விழுதுகளையும் ஒருங்கிணைத்து இந்த விழா மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

மேலும் NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் சின்னசேலம் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இறுதியாக இவ்விழாவிற்கு வருகைபுரிந்த முன்னாள் இன்னாள் இயக்க பொறுப்பாளர்கள், இயக்க உறுப்பினர்கள், தோழமைச் சங்க பொறுப்பாளர்கள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி கூறி தோழர். சுகந்தி சரவணன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சைவ, அசைவ உணவு வழங்கப்பட்டது.

நன்றியுடன்,

தலைவர், செயலாளர், பொருளாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
சின்னசேலம் வட்டாரம்.


Wednesday, 1 November 2023

*EMIS பதிவேற்றப் பணி!* *டிட்டோஜாக் தீர்மானத்தைச் செயல்படுத்துவோம்! -TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்*
 *நாள்: 01.11.2023*
***********************
 *EMIS பதிவேற்றப் பணி!*

*டிட்டோஜாக் தீர்மானத்தைச் செயல்படுத்துவோம்!*

*ஜாக்டோஜியோ ஆர்ப்பாட்டத்த வெற்றிகரமாக்குவோம்!*


 *📢தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜாக்) 30அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 13.10.2023ல் மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து 12.10.2023 அன்று மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 12 கோரிக்கைகள் ஏற்பு செய்யப்பட்டது.*

 *📢ஏற்பு செய்யப்பட்ட அக்கோரிக்கைகளில் முதல் கோரிக்கை "EMIS பதிவேற்றம் செய்யும் பணிகளிலிருந்து இன்று(01.11.2023) முதல் ஆசிரியர்களை விடுவிப்பது என்பதாகும். ஆனால்,இன்று வரை கல்வித்துறை இது தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே,27.10.2023 அன்று நடைபெற்ற டிட்டோ ஜாக்கின் காணொளி வழி மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், பேச்சுவார்த்தையில் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும், மதிப்புமிகு. இயக்குநர் பெருமக்களும் ஏற்றுக்கொண்டவாறு "01.11.2023 முதல் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் EMISல் ஆசிரியர் வருகைப் பதிவு மற்றும் மாணவர் வருகைப் பதிவு தவிர ஆசிரியர்களின் கற்பித்தல் நேரத்தை முழுமையாகப் பாதிக்கக்கூடிய, மாணவர்களின் கல்வி நலனைப் பாதிக்கக் கூடிய எவ்விதமான புள்ளி விவரங்களையும் பதிவேற்றம் செய்வதில்லை" என்ற முடிவை எடுத்துள்ளது. அத்தீர்மான நகல் மற்றும் உயர் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. டிட்டோஜாக்கின் இணைப்புச் சங்கமாகிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் அனைவரும் டிட்டோஜாக்கின் முடிவை நெஞ்சுறுதியோடும், நேர்மைத் திறத்தோடும் செயல்படுத்துமாறு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*

*📢அதேபோல் இன்று(01.11.2023) நடைபெறும் ஜாக்டோஜியோவின் மாவட்டத் தலைநகர் ஆர்ப்பாட்டத்தில் நம் பேரியக்கத் தோழர்கள் முதற்படையாய், முன்னணிப் படையாய் களத்தில் நின்று போர்ப்பதாகையை உயர்த்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் எழுச்சிமிகு நம் இயக்கத் தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.*
***********************
 *புரட்சிகர வாழ்த்துக்களுடன்* *ச.மயில்*
*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Friday, 29 September 2023

30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திசென்னையில் கோட்டை நோக்கிப் பேரணிதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்தியதுஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்பு! ஊடகச் செய்திமாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 13/2023 நாள்: 29.09.2023


🛡️30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இன்று (29.09.2023) சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர். பேரணியின் முடிவில் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 

🛡️சென்னையில் எழும்பூர் லாங்ஸ் கார்டன் ரோடு ரவுண்டனாவிலிருந்து தொடங்கிய பேரணிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ஜீ.மத்தேயு முன்னிலை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் வரவேற்புரையாற்றினார். பேரணியை சிஐடியு மாநிலத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய அ.சவுந்தரராசன் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

 

🛡️பேரணி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் சென்றடைந்தது. அங்கு நடைபெற்ற கோரிக்கை விளக்கக் கூட்டத்தின் போது மாநில பொதுச்செயலாளர் ச.மயில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை. எனவே, தி.மு.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் எழுத்து மூலமாகக் கொடுத்த வாக்குறுதிகளின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 01.06.2009க்குப் பின்பு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவின் அறிக்கையை விரைவாகப் பெற்று ஊதிய முரண்பாடு களைந்திட வேண்டும். 01.06.2009க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, நிர்வாகக் காரணங்களால் 01.06.2009க்குப் பின்பு நியமன ஆணை வழங்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும். மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்நாட்டின் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயிலும் 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கும் காலைச் சிற்றுண்டித் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும், சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். 

 

🛡️தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்வதோடு, பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதைக் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை மாணவர்களின் கல்வி நலன் கருதி காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று புதிய மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும்.

 

🛡️1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி எண்ணும் எழுத்தும் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தல் பணியைப் பெருமளவில் பாதிக்கும் எமிஸ் பணிகளிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன், சமூக நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இன்று (29.09.2023) சென்னையில் நடைபெற்ற கோட்டை நோக்கிப் பேரணியின் முடிவில் முதலமைச்சர் அவர்களுக்கு எங்களின் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்துள்ளோம்.

 

🛡️எங்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு தேர்தல் அறிக்கையில் கூறியவாறு நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் எங்களது அமைப்பு தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.

 

🛡️இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம், STFI அகில இந்தியச் செயலாளரும், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான அ.சங்கர், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சே.பிரபாகரன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன், Ex.MLC, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் P.பேட்ரிக்ரெய்மாண்ட், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் மாநில கௌரவத் தலைவர் மா.கணபதி, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் த.உதயசூரியன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்கள். இறுதியில் STFI அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண்கிறிஸ்துராஜ் நன்றி கூறினார்.


இப்படிக்கு,

ச.மயில்

பொதுச்செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 

Wednesday, 1 June 2022

*🛡️தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு!*

*🛡️தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு!*

*🛡️கோடை விடுமுறையில் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள "எண்ணும் எழுத்தும்" பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வித்துறையை கேட்டுக்கொண்டுள்ளது.*

*_இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_*

*🛡️கடந்த 21.05.2022 முதல் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 13ம் தேதி கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி 23 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான கோடை விடுமுறை அளவைவிட குறைவான நாட்களாகும். 2021-22 ம் கல்வியாண்டில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாணவர்கள் தாமதமாகப் பள்ளிகளுக்கு வருகை புரிந்தாலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்கள் 220 நாட்களைத் தாண்டியுள்ளது. இது வழக்கமான ஆண்டின் வேலை நாட்களை விடக் கூடுதலாகும்.*

*🛡️இத்தகு சூழலில் 2021-22ம் கல்வியாண்டில் அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாட்களிலும் 01.06.2022 மற்றும் 02.06.2022 ஆகிய இரு நாட்கள் "எண்ணும் எழுத்தும்" பயிற்சிக்கான கருத்தாளர் பயிற்சியும், 1 முதல் 3 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 06.06.2022 முதல் 10.06.2022 முடிய "எண்ணும் எழுத்தும்" பயிற்சியும் தமிழ்நாடு முழுவதும் வழங்கிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.*

*🛡️இவ்வாறு கோடை விடுமுறையில் அளிக்கப்படும் பயிற்சி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோடைவிடுமுறையில் இதுபோன்ற பயிற்சிகள் இதற்கு முன்பு வழங்கப்பட்டதில்லை. மேலும், பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் கோடை விடுமுறையைத் துய்க்கும் பிரிவினராவர். இதனாலேயே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. 15 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.*

*🛡️எனவே, இக்கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாட்களையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையாக "எண்ணம் எழுத்தும்" பயிற்சி அமைந்துள்ளது. கோடைவிடுமுறையில் இப்பயிற்சி நடத்துவதை எதிர்த்து 28.05.2022 அன்று திருச்சியில் நடைபெற்ற எங்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.*

*🛡️எனவே, பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையில் நடத்தும் "எண்ணும் எழுத்தும்" பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

இப்படிக்கு,

*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*

Monday, 9 May 2022

*🛡️தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய ஓய்வூதியத்திட்டத்தைக் கொண்டுவரக் கோரி மாநிலம் முழுவதும் மே 10ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்!*

*🛡️தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய ஓய்வூதியத்திட்டத்தைக் கொண்டுவரக் கோரி மாநிலம் முழுவதும் மே 10ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்!*

_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 09/2022  நாள்: 09.05.2022_

*🗣️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:*

*🛡️தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த இயலாது என்று கூறியுள்ள நிதியமைச்சரின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் நாளை (10.05.2022) போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.*

*🛡️கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இன்றைய ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் வரிசை எண்: 309ல் கொடுத்துள்ள மிக முக்கியமான வாக்குறுதி "புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்" என்பதாகும். தேர்தல் அறிக்கையில் கூறியது மட்டுமல்லாது இன்றைய முதலமைச்சர் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவோம்" என்று கூறினார்கள். அதுமட்டுமல்லாது தேர்தல் பிரச்சாரக் காணொளிகளிலும் கூட பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வாக்குறுதி அழுத்தந்திருத்தமாக வெளியிடப்பட்டது.*

*🛡️இத்தகு சூழலில் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு எதுவும் அறிவிக்காத நிலையில், 07.05.2022 அன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அவர்கள் தமிழக அரசு ஊழியர்களுக்கு "பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர இயலாது" என்று தெரிவித்திருப்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெருத்த ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.*

*🛡️சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பேசிய பேச்சு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக நினைத்துக்கொண்டு பேசியதைப் போல் உள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தின்படி தேசிய ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தில் (PFRDA) செலுத்திய தொகையை PFRDA தர மறுத்து விட்டதாக நிதியமைச்சர் கூறுகிறார்.*

*🛡️தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து PFRDA உடன் ஒப்பந்தம் செய்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தோடு, தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே இதுவரை இணையாமல் PFRDA உடன் எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளாமல் ஊழியர்களிடமிருந்து தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்திற்காகப் பிடித்தம் செய்த தொகையை 17 ஆண்டுகளாக தனது கைவசமே வைத்துள்ள தமிழ்நாட்டை ஒப்பிட்டுப் பேசுவது அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயலாகும். ராஜஸ்தான் மாநில அரசு PFRDAல் செலுத்திய நிதியை தன்வசம் கேட்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அந்நிதி ஏற்கனவே தமிழ்நாடு அரசிடம் தான் உள்ளது. எனவே, யாரிடமும் நிதியைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. இதில் சட்டச்சிக்கல் வருவதற்கு வாய்ப்பே இல்லை.*

*🛡️ஒருவேளை நிதியமைச்சர் அவர்கள் கூறியதைப் போல சட்டச்சிக்கல் ஏற்பட்டாலும் எத்தனையோ சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் தமிழக அரசு தனது ஊழியர்களின் நலன்களுக்காக அதற்கான திருத்தத்தை மேற்கொள்வதுதான் சரியாக இருக்கும். தான் பதவியேற்றது முதல் அரசு ஊழியர்களுக்கு எதிரான கருத்துக்களை பல இடங்களில் பலமுறை வெளிப்படுத்தியுள்ள நிதியமைச்சர் அவர்கள் மீண்டும் ஒருமுறை சட்டமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ள இக்கருத்து எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல.*

*🛡️தேர்தல் அறிக்கையில் கூறியவற்றில் 75% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகக் கூறும் இன்றைய தமிழக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்காகக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதியைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை என்பதே உண்மையாகும். ஆனால், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களிடமிருந்து ஏற்கனவே பெற்று வந்த உரிமைகள் தான் பறிக்கப்பட்டுள்ளன.*

*🛡️இந்தியா முழுவதும் பல மாநில அரசுகள் தனது ஊழியர்களின் நலன் கருதி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் தமிழக நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழக அரசு தனது ஊழியர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.*

*🛡️ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை செலவு கணக்காகப் பார்க்கும் நிதியமைச்சர் அவர்கள், அவற்றை மக்கள் நலப் பணிகளுக்கான செலவாகப் பார்க்க வேண்டும். மிகப்பெரிய பொருளாதார நிபுணரான நிதியமைச்சர் அவர்கள் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் "பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவோம்" என்று வாக்குறுதி அளித்த போதே "இது நடைமுறைச் சாத்தியமற்றது" என்று அப்போதே ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி அனைவரது உள்ளத்திலும் தற்போது எழுந்துள்ளது.*

*🛡️தமிழ்நாடு நிதியமைச்சரின் கருத்தினால் அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியைப் போக்கும் வகையில் முதலமைச்சர் அவர்கள் உரிய விளக்கத்தை அளித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நாளை (10.05.2022) வட்டாரத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவெடுத்துள்ளது.*


Friday, 24 December 2021

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்டம் அழைப்பிதழ்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்டம் அழைப்பிதழ்*


*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்டம் (30.12.2021) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.*

*🛡️மாநில செயற்குழு கூட்டமானது மாநிலத்தலைவர் திருமதி. மூ.மணிமேகலை அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*

கூட்டப்பொருள்:

*🚩1) அஞ்சலி*

*🚩2) வேலை அறிக்கை*

*🚩3) 01.11.2021 முதல் பள்ளிகள் திறப்பு - இன்றைய கல்விச்சுழல்.*

*🚩4) 03.10.2021 STFI அகில இந்திய செயற்குழு மற்றும் 16.12.2021 STFI அகில இந்தியப் பொதுக்குழு முடிவுகள்.*

*🚩5) பொதுமாறுதல் கலந்தாய்வு.*

*🚩6) இல்லம் தேடிக்கல்வி.*

*🚩7) "ஆசிரியர் கேடயம்" இயக்க இதழ் சந்தா சேர்ப்பு மற்றும் "இயக்க இதழ் புரவலர்" சேர்ப்பு.*

*🚩8) 2021-22 உறுப்பினர் பட்டியல் மற்றும் அடிக்கட்டைகள் ஒப்படைத்தல்.*

*🚩9) இயக்கத்தின் அமைப்புத் தேர்தல்கள் - நடுவர் தீர்ப்பாய அறிக்கை.*

*🚩10) ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப் பூர்வமாக)*

*🚩11) பொதுச்செயலாளர் கொணர்வன*

*⚡மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறேன்.*

🤝தோழமையுடன்,

*_ச.மயில்_*
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

Monday, 22 November 2021

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பாக ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் உடனான சந்திப்பு நிகழ்வு*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பாக ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இன்று (22.11.2021) சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து பேசினார்கள்.*


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்* *நாள்:22.11.2021*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்*

*⚡மாநிலத் தலைவர் _தோழர் மூ. மணிமேகலை,_*

*⚡பொதுச் செயலாளர் _தோழர்.ச.மயில்,_*

*⚡மாநிலப் பொருளாளர் _தோழர்.J.மத்தேயு,_*

*துணைப் பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்,_*

*⚡STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.தோ.ஜாண் கிறிஸ்துராஜ்,_*

*⚡மாநிலச் செயலாளர் _தோழர். கிருஷ்ணன்_*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்.*

*ஆகியோர் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இன்று(22.11. 2021)சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குனரைச் சந்தித்துப் பேசினர்.*

*🤝தோழமையுடன்*

*ச.மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Sunday, 21 November 2021

TNPTF-கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட 12ம் வகுப்பு மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று மாணவியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதோடு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் - TNPTF கோரிக்கை*

 *🚩TNPTF-கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட 12ம் வகுப்பு மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று மாணவியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதோடு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் - TNPTF கோரிக்கை*


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* *மாநில மையம்*
*நாள்:21.11.2021*

*🚩இன்று (21.11.2021), கோவையில் தான் பயின்ற சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட 12ம் வகுப்பு மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர்  தோழர் மூ.மணிமேகலை, மாநிலச் செயலாளர் தோழர் த.சகிலா மற்றும் கோவை மாவட்டப் பொறுப்பாளர்கள், மாணவியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி,மாணவியின் பெற்றோரிடம்  சம்பவம் குறித்துக்  கேட்டறிந்து,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், துயரத்தையும், ஆறுதலையும் தெரிவித்தனர்*

*🚩மிகவும் வறிய நிலையில் உள்ள அம்மாணவியின் அப்பாவியான பெற்றோரின் நிலை கண்டு நமது இயக்கப் பொறுப்பாளர்கள் மிகவும் மனம் வருந்தினார். எப்போதும் படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்த அம்மாணவியின் அகாலமரணம் மிகப்பெரிய இழப்பாகும். தங்களிடம் பயிலும் மாணவச் செல்வங்களை தாங்கள் பெற்ற பிள்ளைகளைப் போல் கருதும் மிகப்பெரும்பாலான ஆசிரியர்களுக்கு மத்தியில்,இது போன்ற கயவர்கள் ஒரு சிலரின் கீழ்த்தரமான செயல்கள் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.*

 *🚩தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.*

🤝தோழமையுடன்

 *ச.மயில்*
*பொதுச்செயலாளர்* 
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*




Wednesday, 10 November 2021

*🛡️3, 5, 8 வகுப்புக்களுக்குத் தேசிய அடைவுத் தேர்வு நடத்துவதை / பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்! / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!.*

*🛡️3, 5, 8 வகுப்புக்களுக்குத் தேசிய அடைவுத் தேர்வு நடத்துவதை / பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்! / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!.*

*_ஊடகச் செய்தி மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 20/2021  நாள்: 10.11.2021_*

*🛡️3, 5, 8 வகுப்புக்களுக்குத் தேசிய அடைவுத் தேர்வு நடத்துவதை  பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

*🛡️கொரோனா பெருந்தொற்றுச் சூழலில் 19 மாதங்கள் கழித்து ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 3, 5, 8 வகுப்புக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய அடைவுத்தேர்வை (NAS) பள்ளிக் கல்வித்துறை கைவிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

*🛡️பெருந்தொற்றுக் காரணமாக 19 மாதங்கள் கழித்து ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பெருந்தொற்றின் தாக்கம் சற்றுத் தணிந்துள்ள நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நவம்பர் 1 முதல் சுழற்சிமுறையில் வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.*

*🛡️மாணவர்களின் பாதுகாப்பு, மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுகட்டுதல், கற்றல் இடைவெளியைப் போக்குதல் ஆகிய பணிகளை மையப்படுத்தி ஆசிரியர்கள் தங்கள் கடமையை ஆர்வத்துடன் ஆற்றி வருகின்றனர். வரலாறு காணாத அளவிற்கு நீண்ட காலம் பள்ளிக்கு வருகை தர இயலாத நிலையில் இருந்த ஆரம்ப வகுப்புக்களின் மாணவச் செல்வங்களை பள்ளிச் சூழலுக்கு, கற்றல் சூழலுக்குக் கொண்டு வருவது என்பது கடினமான பணியாகும்.*

*🛡️மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் கூட தனது செய்தி வெளியீட்டில் "முதலிரு வாரங்களுக்கு மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டும் வகையிலான கதை, பாடல், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், நினைவாற்றலை வளர்ப்பதற்கான உத்திகள் போன்றவற்றை வகுப்பறைகளில் வழங்குங்கள்" என்று ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார். பள்ளிக் கல்வித்துறையும் அவ்வாறே உத்தரவிட்டுள்ளது.*

*🛡️இத்தகு சூழ்நிலையில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் திறந்து ஒரு வாரமே ஆகியுள்ள சூழலில் 3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதத்தில் தேசிய அடைவுத்தேர்வு (NAS) நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது முற்றிலும் பொருத்தமற்றதாக உள்ளது. 2019-20 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர்ந்து அந்த வகுப்பிலேயே முழுமையாகப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்காமல், 2020-21 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கே செல்வதற்கு வாய்ப்புக் கிடைக்காமல், 2021-22 ஆம் கல்வியாண்டில் 5 மாதங்கள் பள்ளிக்கு வர இயலாமல் தற்போது நேரடியாக மூன்றாம் வகுப்பிற்கு வந்துள்ள மாணவனுக்கும், இதேபோன்று தற்போது 5, 8 வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கும் தேசிய அளவிலான அடைவுத் தேர்வு என்பது முற்றிலும் உளவியல் அணுகுமுறைக்கு மாறானதாகும்.*

*🛡️தேசிய அடைவுத் தேர்வு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டாலும், அப்பள்ளிகளின் மாணவர்களும், மற்ற பள்ளிகளின்  மாணவர்களைப் போலவே பெருந்தொற்றுக் காலத்தில் கற்றல் வாய்ப்பை இழந்தவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, 3, 5, 8 வகுப்புக்கான தேசிய அடைவுத் தேர்வை மாணவர்கள் நலன் கருதி பள்ளிக் கல்வித்துறை கைவிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
   
🤝இப்படிக்கு,

*_ச. மயில்_*
*பொதுச்செயலாளர்* 

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

                                                                     

Friday, 5 November 2021

*🛡️உயர் கல்வித்தகுதி பெறும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி! - முன்புபோல் ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும்! - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

*🛡️உயர் கல்வித்தகுதி பெறும் மாநில அரசு ஊழியர்களுக்கு /ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்கி /தமிழக அரசு வெளியிட்ட அரசாணை /ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி!/ முன்புபோல் ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும்!/ தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

*_ஊடகச் செய்தி மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 19/2021  நாள்: 03.11.2021_*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

*⚔️*
*🛡️மாநில அரசு ஊழியர்கள் பெறும் உயர் கல்வித்தகுதிக்கு ஒன்றிய அரசைப் பின்பற்றி 10.03.2020 முதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 01.11.2021ல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெருத்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 10.03.2020க்கு முன்பு வழங்கப்பட்டது போல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறும் உயர் கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

*⚔️*
*🛡️தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பெறும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக்காலத்தில் 1969ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. எரிகின்ற மெழுகுவர்த்தி தான் மற்றொரு மெழுகுவர்த்தியை சுடர்விட்டுப் பிரகாசிக்க வைக்க முடியும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர்கள் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஆசிரியர்கள் உயர் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு அறிவாசான் அண்ணா அவர்களால் ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பல நிலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வதில் பேரார்வம் காட்டி வந்தனர். அவ்வாறு ஆசிரியர்கள் பெற்ற உயர்கல்வி அவர்களிடம் பயிலும் மாணவச் செல்வங்களின் அறிவு வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் பேருதவியாய் அமைந்தது.*

*⚔️*
*🛡️இந்நிலையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 50 ஆண்டுகளாக வழங்கிவந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் எவ்விதக் காரணமுமின்றி 10.03.2020 முதல் ரத்து செய்து ஆணை வெளியிடப்பட்டது. இச்செயல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. இச்செயல் அ.தி.மு.க ஆட்சியின் மீது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. மீண்டும் ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மிக முக்கியக் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.*

*⚔️*
*🛡️இந்நிலையில் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இன்றைய ஆளும் கட்சியான தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் "ரத்து செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகள் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வழங்கப்படும்" என்று தெரிவித்தது. எனவே, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பறிக்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகள் கிடைத்துவிடும் என்ற பெரும் நம்பிக்கையில் அனைத்து நிலை ஆசிரியர்களும் இருந்தார்கள். அந்த நம்பிக்கையை வெடிவைத்துத் தகர்த்ததைப்போல உயர் கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்காமல் ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு வெளியிட்ட அரசாணை அமைந்துவிட்டது.*

*⚔️*
*🛡️50 ஆண்டு காலமாக தமிழகத்தில் ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் என்பது ஒருவரது பணிக்காலம் முழுவதும் பணப்பலனைத் தரக்கூடியது. ஓய்வுக்காலப் பலன்களுக்கும் பொருந்தக்கூடியது. அப்படிப்பட்ட பயனைப் பறித்துவிட்டு, தமிழக அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை என்பது உயர்கல்வி பயின்றவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்திற்குக் கூட ஈடாகாது என்பது தான் உண்மை.*

*⚔️*
*🛡️மேலும், ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கும் பல்வேறு சலுகைகளை தனது ஊழியர்களுக்கு வழங்க மறுக்கும் தமிழக அரசு உயர்கல்விக்கான ஊக்கத் தொகை வழங்குவதில் மட்டும் ஒன்றிய அரசைப் பின்பற்றுவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காத மாநில அரசு, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அளவிற்கு வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, கல்விப்படி, குழந்தைப் பராமரிப்பு விடுப்பு, மருத்துவப்படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைத் தனது ஊழியர்களுக்கு வழங்காத தமிழக அரசு உயர் கல்வித்தகுதிக்கு மட்டும் ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்குவது என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.*

*⚔️*
*🛡️எனவே, தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள உயர்கல்விக்கு ஊக்கத் தொகை வழங்கும் அரசாணையை ரத்து செய்து விட்டு முன்புபோல் ஊக்க ஊதியம் வழங்கும் வகையில் அரசாணையை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

🤝இப்படிக்கு,

*_ச. மயில்_*
பொதுச்செயலாளர்
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Monday, 1 November 2021

*செங்கோட்டை வட்டாரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய கிளை தொடக்க விழா - செய்தி துளிகள்*

*(31.10.2021) அன்று.....பொதிகைத் தென்றலும் பொருணை நதியும் சங்கமிக்கும் தென்காசி மண்ணிலே....... இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள செங்கோட்டை வட்டாரத்திலே பேரெழுச்சியோடும், பெரும் உற்சாகத்தோடும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய கிளை தொடக்க விழா.....* 

*தென்காசி மாவட்டக் கிளைக்கு மாநில மையத்தின் புரட்சிகரமான வாழ்த்துக்கள்!*
 
*தொடரட்டும் இயக்கப் பணி!*
 
*மாவட்டம் முழுவதும் உயரட்டும் இயக்கப் பதாகை!*

*நேரடிக் கற்றல்- கற்பித்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள உள்ள ஆசிரியர்களுக்கு மற்றும் மாணவச் செல்வங்களுக்கு TNPTF ன் வாழ்த்து செய்தி....*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்*
-----------------------------------------------
*வாழ்த்துச் செய்தி*
----------------------------------------------
*19 மாதங்களுக்குப் பிறகு* 

*ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளில்*

 *இன்று(01.11.2021)முதல்*

*நேரடிக் கற்றல்- கற்பித்தல் நிகழ்வுகள்....*

*மழை காணாப் பயிர் போல*

 *மயங்கி நின்ற மாணவச் செல்வங்களுக்கு*

 *இன்று மகிழ்ச்சித் திருநாள்!*

*கன்றினைக் காணா பசுவைப் போல* 

*கலங்கி நின்ற ஆசிரியப் பெருமக்களுக்கு*

*இன்று உற்சாகத் திருநாள்!*

*எதிர்கால சமூகத்தைச் சமைக்கும்*

 *மாணவச் செல்வங்களுக்கும்....*

 *மாணவச் செல்வங்களை செதுக்கும் சிற்பிகளாம்*

 *ஆசிரியப் பெருமக்களுக்கும்....*

 *இழந்த கல்வியை ஈட்டிட.......*

*TNPTF மாநில மையத்தின்*

*இதயங்கனிந்த இனிய வாழ்த்துக்கள்!*

*வாழ்த்துக்களுடன்* *ச.மயில்*
*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Sunday, 17 October 2021

*🛡️ஒரே பள்ளியில் 10, 20 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் / இடமாறுதல் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை / பள்ளிக் கல்வித்துறை கைவிடவேண்டும் ! / அமல்படுத்தினால் மாநிலந் தழுவிய போராட்டம் ! / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு!*

*🛡️ஒரே பள்ளியில் 10, 20 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் / இடமாறுதல் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை / பள்ளிக் கல்வித்துறை கைவிடவேண்டும் ! / அமல்படுத்தினால் மாநிலந் தழுவிய போராட்டம் ! / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு!*

*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 18/2021  நாள்: 17.10.2021*

*_ஒரே பள்ளியில் 10, 20 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை கைவிடவேண்டும்!_*

*_அமல்படுத்தினால் மாநிலந் தழுவிய போராட்டம்!_*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு!*
                  
_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

*⚔️*                          
*🛡️கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த 19 மாதங்களாகத் தமிழகத்தில் நேரடி கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளின்றி முடங்கிக்கிடந்த ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளும், மழலையர் பள்ளிகளும் 01.11.2021 முதல் நேரடி வகுப்புக்களுடன் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.*

*⚔️*                          
*🛡️பள்ளிகள் திறப்பைத் தொடர்ந்து, பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பள்ளிகளுக்கு வாங்க வேண்டிய கொரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தனது செயல்முறை ஆணையில் பள்ளிக்கல்வி ஆணையர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.*

*⚔️*
*🛡️ஆனால், பள்ளிக்கல்வி ஆணையரின் ஆணையில் குறிப்பிட்டவாறு பள்ளிகளுக்குத் தேவையான நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்குரிய நிதி வசதி பள்ளிகளில் இல்லை. மேலும், இக்கல்வியாண்டில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் சார்பில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக கொரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் வாங்கிட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நிதி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.*

*⚔️*
*🛡️மேலும், தற்போது பூஜ்யக் கலந்தாய்வு தொடர்பான செய்திகள் ஆசிரியர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும், விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் "ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடத்தும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். ஜீரோ கவுன்சிலிங் நடத்தப்படாது என்று அமைச்சர் திட்ட வட்டமாக குறிப்பிடவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஆசிரியர்களுக்கு பூஜ்யக்  கலந்தாய்வு என்பது முற்றிலும் தேவையற்றது என்பது எங்களது அமைப்பின் திட்டவட்டமான நிலைப்பாடாகும்.*

*⚔️*
*🛡️மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் "ஒரே பள்ளியில் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக சில கொள்கைகள் வைக்கப்பட்டுள்ளது. அதற்காக 3 விதமான வரையறைகள் வைத்துள்ளோம். பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடக்கும் போது அது குறித்துத் தெரிவிப்போம்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பதட்ட நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.*

*⚔️*
*🛡️ஆசிரியர் பணி என்பது நிர்வாகப் பணி அல்ல. எனவே, குறிப்பிட்ட சில ஆண்டுகளில் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர் பணி என்பது கற்பித்தல் சார்ந்த பணி. ஒரே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றும் போது தான் பள்ளிச் சூழல், பள்ளியின் அமைவிடச் சூழல், பள்ளியில் பயிலும் மாணவர்களின் சமூகச் சூழல், பெற்றோர்களின் சூழல், மக்கள் தொடர்பு போன்ற பல கூறுகளையும் அறிந்து ஆழ்ந்த, தேர்ந்த அனுபவத்துடன் அப்பகுதி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், அப்பள்ளியின் வளர்ச்சிக்கும் பணியாற்றும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு ஏற்படும்.*

*⚔️*                        
*🛡️அதுமட்டுமல்ல 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் பெரும்பாலும் வயதில் மூத்த பணி ஓய்வை நெருங்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள். அவர்களை இடமாற்றம் செய்வது என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயலாக அமைந்துவிடும். எனவே, ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய மேற்கண்டவாறான இடமாறுதல் அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை முற்றிலுமாகக் கைவிட்டு விருப்ப மாறுதல் என்ற அடிப்படையில் நேர்மையான வெளிப்படையான பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

*⚔️*
*🛡️19 மாதங்கள் கழித்து மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து கற்றலில் ஈடுபடவுள்ள சூழலில், மாணவர்களை கல்விச் சூழலுக்கு, பள்ளிச் சூழலுக்கு கொண்டு வருவதற்குரிய மிக மிக முக்கியமான பணி ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அப்பணியில் கடமை உணர்வோடும், பொறுப்புணர்வோடும் முழுமூச்சோடு ஈடுபட உள்ள ஆசிரியர்களிடம் குழப்ப நிலையை ஏற்படுத்தக்கூடிய பதட்ட நிலையை உருவாக்கக் கூடிய இதுபோன்ற அறிவிப்புக்களை பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

*⚔️*
*🛡️ஜீரோ கவுன்சிலிங், 10, 20 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி முடித்த ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தினால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலந் தழுவிய போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதையும் மாநில அமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.*

🤝இப்படிக்கு,
*_ச. மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Monday, 11 October 2021

*TNPTF - 19 மாதங்கள் மூடப்பட்ட ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் 01.11.2021 முதல் திறக்கப்படுகின்றன. எதிர்கால சமூகத்தை கட்டமைக்கும் இன்றைய மாணவச் செல்வங்கள் பெருந்தொற்றுச் சூழலால் இழந்த கல்வியை மீட்டெடுக்க சமூக அக்கறையோடு பணியாற்றுவோம், மேலும் 31.10.2021 க்குள் உறுப்பினர் சேர்க்கையினை முடிப்போம் - பொதுச்செயலாளர் அறிக்கை*

*TNPTF - 19 மாதங்கள் மூடப்பட்ட ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் 01.11.2021 முதல் திறக்கப்படுகின்றன. எதிர்கால சமூகத்தை கட்டமைக்கும் இன்றைய மாணவச் செல்வங்கள் பெருந்தொற்றுச் சூழலால் இழந்த கல்வியை மீட்டெடுக்க சமூக அக்கறையோடு பணியாற்றுவோம், மேலும் 31.10.2021 க்குள் உறுப்பினர் சேர்க்கையினை முடிப்போம் - பொதுச்செயலாளர் அறிக்கை*

*_பொதுச்செயலாளரின் கடிதம்-நாள்:11.10.2021_*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே!_ வணக்கம்.*

*⚔️*
*🛡️கொடுந்தொற்றுக் கொரோனாவால் கடந்த 19 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. கடந்த 01.09.2021 முதல், 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. 01.11.2021 முதல், 1 முதல் 8 முடிய உள்ள வகுப்புக்களும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.*

*⚔️*
*🛡️தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளை முதலில் திறக்க வேண்டும் என்று கடந்த 01.08.20021 மற்றும் 19.09.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினோம். ஏனெனில் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கே மிக அதிகமாக உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், சென்னை உயர்நீதிமன்றமும் கூட மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆரம்பப் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று திட்டவட்டமாக ஏற்கனவே கருத்துத் தெரிவித்துள்ளன. 01.11.2021 முதல் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் திறப்பு என்பது கூட தாமதமான அறிவிப்பாகவே நாம் கருதுகிறோம்.*

*⚔️*
*🛡️பள்ளிகள் திறக்கப்படுவதில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அளப்பரிய மகிழ்ச்சி. நோய்த்தொற்றின் காரணமாகப் பள்ளிகளைத் தமிழக அரசு மூடியது. மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வரவில்லை. ஆனாலும் கடந்த ஆண்டில் 17.08.2020 முதல் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்களுக்கு வருகை புரிந்தார்கள். கொரோனா தொற்று அதிகமாக இருந்த காலங்களில், பொதுப் போக்குவரத்து இல்லாத சூழலில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. இந்த ஆண்டும் ஆகஸ்ட் 2021 முதல் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்பு சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை தந்தார்கள்.*

*⚔️*
*🛡️மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வரவில்லையென்றாலும் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கான கற்றல் வாய்ப்புக்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு செயலாற்றி வருகிறார்கள். இணைய வழியாகவும், கட்செவி, முகநூல், கல்வித் தொலைக்காட்சி உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலமாகவும் கற்பித்தல் பணியில் ஆசிரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.*

*⚔️*
*🛡️நாள்தோறும் பள்ளிக்கல்வித்துறையிலிருந்து பல்வேறு அறிவிப்புக்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதிலும், சில மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வானளாவிய அதிகாரம் பெற்றவர்களாக மாறி நடைமுறைக்கு ஒத்துவராத செயல்களையெல்லாம் செய்யச் சொல்லி ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்துவதையும் பார்க்கிறோம். முதன்மைக் கல்வி அலுவலர்கள் வரம்பு மீறி சில இடங்களில் நடந்து வருவதையும், ஆசிரியர்களை அடிமைகளாக நினைக்கும் போக்கையும் சமீபகாலமாக அதிகமாகப் பார்க்க முடிகிறது. மாநில கல்வித்துறையின் உத்தரவுகளையும் தாண்டி தனக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு செயல்படும் சில மாவட்ட அளவிலான, வட்டார அளவிலான கல்வித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் ஆண்டான்-அடிமை என்ற மனோபாவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.*

*⚔️*
*🛡️மாணவர்கள் பள்ளிக்கு வராத இந்த காலகட்டத்திலும் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்களிடம் நாள்தோறும் கேட்கும் புள்ளிவிவரங்கள் மலைக்க வைக்கின்றன. அது மட்டுமல்ல வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் கிராமப்புற ஏழைப் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வித்துறை காட்டும் கற்றல் வாய்ப்புக்கள் என்பதும் அவர்களுக்கு போதுமான பயனைத் தருவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அத்தகைய கற்றல் வாய்ப்புக்களைப் பெறுவதற்கான அடிப்படை வசதிகள் அவர்களிடம் இல்லை. இத்தகைய நெருக்கடியான சூழலில் கல்வித்துறைக்கு நாள்தோறும் புள்ளி விவரங்களை அளிப்பது, தங்களிடம் பயிலும் வாய்ப்பு வசதிகளற்ற குழந்தைகளுக்கு இன்றைய சூழலில் கற்றல் சூழலை உருவாக்குவதில் ஏற்படும் இடர்பாடுகள் என இரட்டைச் சுமையுடன் ஆசிரியர்கள் இன்றைய நிலையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.*

*⚔️*
*🛡️இத்தகு சூழல் மாறிட "பள்ளிகள் திறக்கப்படுவது மேல்" என்ற எண்ணம் அனைத்து ஆசிரியர்களிடமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு சிரமங்களை ஆசிரியர்கள் சந்தித்து வரும் சூழலில் "ஆசிரியர்கள் கடந்த 1½ ஆண்டுகளாக பணிக்கே செல்லாமல் ஊதியம் பெற்று வருகிறார்கள் என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்க அரசின் உயர் பொறுப்புக்களில் உள்ள சிலர் முயல்வதையும் பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு பொதுக்கருத்தை சமூகத்தில் உருவாக்குவதற்கு சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதையும் நாம் பார்க்க முடிகிறது. "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி" என்று சொல்வதைப் போல ஆசிரியர்களை ஏளனமாக எடை போடுபவர்களை ஆசிரியர் சமூகம் உற்றுக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.*

*⚔️*
*🛡️இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 19 மாதங்கள் மூடப்பட்ட ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் 01.11.2021 முதல் திறக்கப்படுகின்றன. எதிர்கால சமூகத்தை கட்டமைக்கும் இன்றைய மாணவச் செல்வங்கள் பெருந்தொற்றுச் சூழலால் இழந்த கல்வியை மீட்டெடுக்க சமூக அக்கறையோடு பணியாற்றுவோம். நீண்ட இடைவெளிக்குப் பின்பு பள்ளிக்கு வரும் குழந்தைகளைப் பள்ளிச் சூழலுக்கு, கல்விச் சூழலுக்கு கொண்டுவருவது நமது முதற்கட்டப் பணி. அந்தப் பணியை நமக்கிருக்கும் கள அனுபவத்தைக் கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றுவோம்.*

*⚔️*
*🛡️நோய்த் தொற்றுச் சூழலிலிருந்து தற்காத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடைமுறைச் செயல்பாடுகளை மாணவச் செல்வங்களின் நெஞ்சில் ஆழமாகப் பதிய வைப்போம். தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும், சமூகத்தையும் நோய்த் தொற்று தாக்காமல் தவிர்க்க எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை மாணவச் செல்வங்களுக்குப் புகட்டுவோம். நோய்த் தொற்றால் எதிர்காலத்தில் பள்ளிகள் மூடப்படுவதை தவிர்க்க கடமை உணர்வுடன் பணியாற்றுவோம்.*

*⚔️*
*🛡️கல்விப் பணியைக் கடமை தவறாது ஆற்ற வேண்டிய நம் பேரியக்கத் தோழர்கள் இயக்கப் பணியையும் இடையறாது ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இயக்கத்தின் அடிப்படைப் பணியான 2021-2022 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கைப் பணியை முடிப்பதில் அனைத்து வட்டார, நகர, மாநகர கிளைகளின் பொறுப்பாளர்களும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டிய தருணமிது. பள்ளி, பள்ளியாகச் சென்று உறுப்பினர் சேர்க்கைப் பணியை மேற்கொள்ள 31.10.2021 வரை சிறந்த காலமாகும். 01.11.2021 முதல் மாணவர்களின் கல்வியில் அதீத கவனம் செலுத்த வேண்டிய காலமென்பதால் 31.10.2021க்குள் உறுப்பினர் சேர்க்கைப் பணியினை நிறைவு செய்திட அனைத்துக் கிளைகளும் தவறாது கடமையாற்றிட வேண்டும்.*

*⚔️*
*🛡️கடந்த 19.09.2021 மதுரை மாநிலச் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இயக்கத்தின் போர்வாளாம் "ஆசிரியர் கேடயம்" இதழுக்கு இயக்கப் புரவலர்களைச் சேர்ப்பது என்பதாகும். இயக்க இதழ் புரவலர் நிதியளிக்கும் இயக்கத் தோழர்களுக்கு "இயக்க இதழ் புரவலர் விருது" வழங்கிச் சிறப்பித்திட மாநில அமைப்பு முடிவெடுத்துள்ளது. இயக்க இதழை பேணிக் காத்திடும் இந்த உன்னதப் பணியில் பல மாவட்டக் கிளைகள் வீறு கொண்டு பணியாற்றி வருவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. மதுரை மாநிலச் செயற்குழுவிலேயே மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என ஒரே நேரத்தில் 100 பேர் வரை புரவலர் திட்டத்தில் இணைந்தது என்பது உற்சாகம் தரும் நிகழ்வாக அமைந்தது.*

*⚔️*
*🛡️"இயக்க இதழ் புரவலர் நிதி" பெறும் பணியில் மாநிலத்திலேயே மற்ற மாவட்டக் கிளைகளுக்கு முன்னுதாரணமாக பாய்ச்சல் வேகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது சிவகங்கை மாவட்டக் கிளை. இலக்கைத் தாண்டி இதுவரை நூறுக்கும் மேற்பட்ட இதழ் புரவலர்களை சிவகங்கை மாவட்டக் கிளை சேர்த்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி வட்டாரக் கிளை மாநிலத்திலேயே மற்ற வட்டார, நகர, மாநகரக் கிளைகளுக்கு முன்மாதிரியாக விளங்கி 30 இதழ் புரவலர்களைச் சேர்த்திருப்பது என்பது மிகவும் பாராட்டுக்குரியது.*

*⚔️*
*🛡️இயக்க இதழ் புரவலர் சேர்க்கையில் ஒவ்வொரு மாவட்டக்கிளையும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும் என மாநில அமைப்பு எதிர்பார்க்கிறது. நாம் அனைவரும் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த முயற்சி இயக்கத்தின் மாபெரும் பிரச்சார ஆயுதமாம் "ஆசிரியர் கேடயம்" இதழ் எதிர்காலத்தில் பெரும் வளர்ச்சி பெறுவதற்கு பேருதவியாய் அமையும். இயக்க வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை எட்டுவதற்குரிய அடித்தளமாக இது அமையும்.*

*⚔️*
*🛡️ஒவ்வொரு முறையும் மாநில செயற்குழு முடிந்தவுடன் ஒவ்வொரு மாவட்டக் கிளையும் தனது செயற்குழு அல்லது பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தி மாநிலச் செயற்குழு முடிவுகளை நிறைவேற்றிட முனைப்புடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் மாவட்டச் செயற்குழு முடிந்தவுடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வட்டார, நகர, மாநகரக் கிளைகளின் செயற்குழு கூடி மாவட்டச் செயற்குழு முடிவுகளை நிறைவேற்றுவதில் கடமை தவறாது களப்பணி ஆற்ற வேண்டும். இவ்வாறு செயல்படும் போதுதான் மாநிலம் முழுவதும் இயக்கப் பணிகள் எழுச்சியுடன் இடையறாது நடைபெறும். நம் இலக்கை நோக்கிய இலட்சியப் பயணம் உறுதியுடன் முன்னேறும்.*

🤝தோழமையுடன்

*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்.*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


Sunday, 19 September 2021

*🛡️உயர் பொறுப்பில் உள்ளவர்களே ஆசிரியர்களின் பணி, ஊதியம் பற்றி தவறான தகவல் தெரிவிப்பதை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்! - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.*

*🛡️உயர் பொறுப்பில் உள்ளவர்களே ஆசிரியர்களின் பணி, ஊதியம் பற்றி தவறான தகவல் தெரிவிப்பதை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்!*

*_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 17/2021  நாள்: 19.09.2021_*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்._

*⚔️*                              
*🛡️ஆசிரியர்களின் பணி நிலை, ஊதியம் ஆகியவை பற்றி தவறான, பொய்யான விமர்சனங்களை தமிழக அரசில் உயர் பொறுப்பில் உள்ளவர்களே முன்வைக்கும் போக்கைத் தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.*

*⚔️*                              
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (19.09.2021) மதுரையில் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.*

*🛡️கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். மதுரை மாவட்டச் செயலாளர் பெ.சீனிவாசகன் வரவேற்புரை ஆற்றினார்.*
                             
*🛡️கூட்டப் பொருள்கள் மீதான விவாதத்தை தொடக்கி வைத்தும், இயக்கச் செயல்பாடுகள் குறித்தும் பொதுச்செயலாளர் ச.மயில் விளக்கவுரை ஆற்றினார்.*

*⚔️*
*🛡️இக்கூட்டத்தில் ஆசிரியர் தினத்தன்று கடலூரில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களுக்கு டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவிலேயே அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி நிலை பற்றியும், குறிப்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் பற்றியும் தவறான பொய்யான தகவலைக் கூறிய தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*

*⚔️*                              
*🛡️அதேபோன்று கொரோனா தொற்றால் விடுமுறை அளிக்கப்பட்ட ஒரு பள்ளியை பார்வையிடச் சென்ற போது தனது பதவியின் கண்ணியத்திற்கு மாறாக தரக்குறைவான வார்த்தைகளைப் பேசிய கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் பேச்சுக்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்களே ஆசிரியர்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் இது போன்று பொறுப்பில்லாமல் பேசுவதை தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.*

*⚔️*
*🛡️மேலும், கொரோனா பெருந்தொற்றால் கடந்த 1½ ஆண்டுகளாகப் பள்ளிகள் மூடப்படுள்ள நிலையில் 01.09.2021 முதல் 9, 10, 11, 12 வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.*

*⚔️*
*🛡️இதேபோன்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி நலன் கருதி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) வழிகாட்டுதல்களின் படி ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*
                       
*🛡️கூட்டத்தின் நிறைவாக மாநிலப் பொருளாளர் J.மத்தேயு நன்றி கூறினார்.*

*🛡️இக்கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண் கிறிஸ்துராஜ் உட்பட மாநில நிர்வாகிகள், மாநிலம் முழுவதுமிருந்து மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.*

🤝இப்படிக்கு,

*_ச. மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Tuesday, 7 September 2021

*🛡️அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்பு! _பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்!_*

*🛡️அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்பு! _பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்!_*

*ஊடகச் செய்தி மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 16/2021 நாள் : 07.09.2021*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

*🛡️இன்று (07.09.2021) தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புக்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. அதே நேரத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றுவதோடு, அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு போல் 01.07.2021 முதல் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது.*

*🛡️கடந்த 27.08.2021 அன்று தலைமைச் செயலகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 4 சங்கங்களின் தலைவர்களுடன் தமிழ்நாடு அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மனித வள மேலாண்மைத்துறைச் செயலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பேச்சுவார்த்தையில் சங்கத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளில் 13 அறிவிப்புக்களை 110 விதியின் கீழ் மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.*

*🛡️பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்திய கோரிக்கைகளான, அரசு ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்க ஊதியம் விரைவில் வழங்கப்படும், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்களைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யும் நடைமுறை தவிர்க்கப்படும், 2016, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தக் காலம், தற்காலிகப் பணிநீக்கக் காலம் ஆகியவை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும், வேலை நிறுத்தக்காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பணி மாறுதல்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படுவதோடு அதன் காரணமாக பாதிக்கப்பட்ட பதவி உயர்வுகள் சரிசெய்யப்படும் ஆகிய அறிவிப்புக்கள் வரவேற்கத்தக்கவை.*

*🛡️அதே போன்று பணிக்காலத்தில் காலமான அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாரிசுகளுக்கான கருணை அடிப்படை நியமனம் தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் நீக்கப்படும், அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வயது வரம்பினைக் கருத்தில் கொள்ளாமல் மகன்கள், மகள்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள், கொரோனா நோய்த் தொற்றுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படும், கணக்கு மற்றும் கருவூலத்துறையின் IFHRMS பணிகள் எளிமைப்படுத்தப்படும், அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத் தேவைக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட 13 அறிவிப்புக்களை வெளியிட்டதற்காக மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.*

*🛡️அதே நேரத்தில் அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு போல் தமிழக அரசும் 01.07.2021 முதல் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்துகிறது.*

*🛡️மேலும், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி நிறைவேற்ற வேண்டும். இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு 40 என்பதை ரத்து செய்திட வேண்டும்.*

*🛡️நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் 12500க்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்*

*🛡️காப்பீட்டுத் திட்டத்தில் தாய், தந்தை இருவரையும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தப்பட்டன. அக்கோரிக்கைகளையும் மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்துகிறது.*

*🛡️ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அதற்கேற்ப அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றுவார் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெரிதும் எதிர்பார்க்கிறது.*

🤝இப்படிக்கு,

*_ச. மயில்_*
பொதுச்செயலாளர்
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*