*⚡⚡T N P T F⚡⚡*
*☄அ ய ன் ☄*
பின் அனுமதி கிடைக்க வழிவகை செய்ய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட மாநில பொறுப்பாளர்களுக்கு கோரிக்கை,
⭐ இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றதற்கு பின் அனுமதி வேண்டி கேட்டுக்கொண்டதற்கு இயக்குநர் அவர்கள் 2016 ஏப்ரல் மாதம் அந்தந்த ஒன்றியங்களில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மூலமாக பட்டியல் தயார்செய்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டு அதன்படி தயாரிக்கப்பட்ட பட்டியல் அனுப்பப்பட்டது,
⭐ அனுப்பப்பட்ட பட்டியல் கிடப்பிலேயே இருந்தது, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் இயக்குநரை சந்தித்து பின் அனுமதி வழங்க கோரிக்கை மனு அளித்ததால்,
⭐ 2017 பிப்ரவரி மாதம் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களிடம் குறிப்பாணை வழங்கி சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விளக்க கடிதம் பெறப்பட்டு இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது,
⭐ விளக்கக் கடிதம் கொடுத்தும் பின் அனுமதி சம்மந்தமாக எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை,
⭐ இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 369 ஆசிரியர்கள் உள்ளனர், மேலும் இது போன்று அனைத்து மாவட்டங்களிலும் பல ஆசிரியர்கள் பின் அனுமதி கிடைக்க வேண்டி காத்துள்ளனர்.
⭐ பின் அனுமதி கிடைக்கப் பெறாததால் ஊக்க ஊதியம் பெற முடியாமல் ஆசிரியர்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர், மேலும் இதனால் Pay commission லும் பாதிப்பு வருமோ என்ற ஐயத்தில் உள்ளார்கள்,
⭐ 4/11/2017 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டத்தில் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மாநில மையத்திடம் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📱tnptfayan.blogspot.in
No comments:
Post a Comment