Friday, 27 October 2017

குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகள்

⟦ T ⟧ ⟦ N ⟧ ⟦ P ⟧ ⟦ T ⟧ ⟦ F ⟧
⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭


🔅குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகளின் கண்காட்சி தலைப்புகள், நிதி ஒதுக்கீடு, பரிசுகள் விபரம், & செய்யவேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை 



🔆 கண்காட்சி தலைப்புகள் 
            ”நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு’’
                  1.ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
                  2. வன மேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு
                  3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
                  4. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள்
                  5. கணித மாதிரியாக்கம்
        இத்தலைப்பின் கீழ் மேற்குறிப்பிட்ட உட்கருத்துப் பொருட்களை உள்ளடக்கி அறிவியல் கண்காட்சிக்கான மாதிரிகளை ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் செய்யவேண்டும்.

                "The Green India"  ''Smart City''  ''Digital India''  ''Swachh Bharat'' - ஆகிய தலைப்புகளிலும் மாதிரிகளை செய்து கண்காட்சியில் இடம் பெற செய்யலாம்.

🔆 இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, 
 (கண்காட்சி நடைபெறும் ஒரு குறுவள மையத்திற்கு வழங்கப்படும் தொகை)
        
          மாதிரிகள் செய்ய பொருள்கள் வாங்க -             ரூ.11000
🔆  பரிசுகள் விபரம்
          பரிசுகள் -  தொடக்க நிலை-        முதல் பரிசு   - ரூ.   400
                                                                 இரண்டாம் பரிசு    - ரூ.   300  
                                                                 மூன்றாம் பரிசு   -     ரூ.   200  
           பரிசுகள் -  உயர் தொடக்க நிலை- முதல் பரிசு - ரூ.600
                                                                          இரண்டாம் பரிசு- ரூ.500  
                                                                            மூன்றாம் பரிசு - ரூ.400 
          
சிறந்த செயல்பாடு கொண்ட ஒரு  தொடக்க நிலை பள்ளிக்கு - ரூ.300
சிறந்த செயல்பாடு கொண்ட ஒரு உயர் தொடக்க நிலை பள்ளிக்கு - ரூ.300

        பேணர் மற்றும் சான்றிதழ் செலவு  
  (தொடக்க நிலை 3 பரிசு, உயர்தொடக்க நிலை 3 பரிசு)      -     ரூ. 500

கண்காட்சியில் கலந்து கொள்ள வரும் பள்ளி ஆசிரியர்கள் 
மற்றும் மாணவர்களுக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்க - ரூ.1500

                                                                               மொத்தம்   -   ரூ. 16000/-

இத் தொகையினை  கண்காட்சி நடைபெறும் CRC மையத்தில் கலந்து கொள்ளும் பள்ளிகளுக்கு பொருள்கள் வாங்க சம்மாக பிரித்து கொடுக்க வேண்டும்.
        
🔆 பள்ளி வாரியாக செய்யப்பட வேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை
                        1. தொடக்கப் பள்ளி - ( I to V )   - 2 மாதிரிகள்
                        2. நடுநிலைப் பள்ளி - ( I to VIII ) - 4 மாதிரிகள் [( I to V)- 2 மாதிரிகள்
                                                                                                              ( VI to VIII) - 2 மாதிரிகள்]
                        3. மேல்நிலை/ உயர்நிலைப் பள்ளி - ()  - 2 மாதிரிகள்


🔆  https://tnptfayan.blogspot.com/2017/10/blog-post_27.html


மேலும் விரிவாக காண  -    🔗 tnptfayan.blogspot.in







No comments: