Wednesday, 1 November 2017

நீங்கள் விமானத்தில் பயணம் செய்ய ஆவலாக உள்ளீர்களா! அப்படியானால் விமான நிலையத்தில் பயன்படுத்த வேண்டிய ஆவணங்கள் பற்றி அறிந்துகொள்ளக!!

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



🌟 *✈✈✈விமான நிலையத்தில் பயன்படுத்த வேண்டிய ஆவணங்கள் பற்றி விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரிய தலைவர் குமார் ராஜேஷ் சந்திரா அவர்கள் கூறியது*


🌟 விமான நிலைய முனையத்தில் நுழையவும், பாதுகாப்பு சோதனையின் போதும் காண்பிக்கப்பட வேண்டிய சான்று விவரங்களை விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.


🌟 *அதன் விவரம்:*
1. பாஸ்போர்ட்
2. வாக்காளர் அடையாள அட்டை
3. ஆதார் அல்லது மொபைல் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார்
4. பான் கார்டு
5 . டிரைவிங் லைசென்ஸ்
6. பணியிட அடையாள அட்டை
7. மாணவர்களின் அடையாள அட்டை
8. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம்
9. பென்சன் அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்
10. மாற்றுத்திறனாளி அடையாளி அட்டை


🌟 மேலும் விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரிய தலைவர் குமார் ராஜேஷ் சந்திரா கூறுகையில், மேற்குறிப்பிட்ட அட்டைகளை காண்பிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் அவர்கள், மத்திய மாநில அரசுகளில் பணிபுரியும் குரூப் ஏ கெஜடட் அதிகாரியின் லெட்டர் பேடில், புகைப்படம ஒட்டி, கையெழுத்து வாங்கி காண்பிக்கலாம்.


🌟 உள்நாட்டு விமான பயணத்தின் போது, பச்சிளம் குழந்தைகள் அல்லது சிறுவர்களை அழைத்து சென்றால், அவர்களின் பாதுகாவலர்களுக்கு உரிய சான்று இருந்தால், அவர்களுக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


https://tnptfayan.blogspot.com/2017/10/blog-post_31.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: