*ஆசிரியர் தொழிலும் , அதிலுள்ள சிக்கல்களும்.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_67.html
🌟 ஐயா கண்களை மட்டும் விட்டுவிடுங்க மற்றப்படி படிக்கலனா நல்ல வெலுங்க என்று கூறியது ஒரு காலம் .
அப்போது மாணவர்கள் படித்தனர் , தற்கொலை இல்லை.
மனித உரிமை ஆணையம் என்று ஒன்று வந்தது , அதன் நோக்கம் சரியே ஆனால் ?
🌟 மாணவர்களை அடிக்க கூடாது என்றீர்கள் சரி என்றோம் , ஆனால் அவன் அடிக்க தொடங்கினான் , ஆசிரியரை கத்தியால் காயப்படுத்தினான் ஆனாலும் அவனுக்கு தன்டனையில்லை சிறுவன் என்று சீர்திருத்த பள்ளியில் இடம்.
🌟 அவன் மனம் நோகும்படி திட்டக்கூடாது என்றீர்கள் சரியேன்றோம், ஆனால் அவன் எங்களை காதுகளில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுகிறான் எங்களால் தண்டிக்கவும் முடியவில்லை, தட்டிக் கேட்கவும் முடியவில்லை அவன் சின்னப் பையன் எங்றீர்கள்.
🌟 தண்டிக்கவும் கூடாது , திட்டவும் கூடாது என்று பெற்றோரை அழைத்து வரச் சொன்னால் அதற்கும் தண்டனையா?
🌟 இரவு வீட்டிற்கு தாமதமாக வரும் பையனை கேள்விகள் கேட்க பெற்றோருக்கு உரிமை உன்டு. ஆனால் பள்ளிக்கு தினம் தாமதமாக வரும் மாணவனை கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா?
🌟 தான் சொன்ன வேலையை செய்யாதப் பையனை தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு, ஆனால் தான் சொன்ன வீட்டுபாடத்தை தினம் தினம் செய்ய தவறிய மாணவானை கண்டிக்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா?
🌟 ஒழுங்கீன செயல்களில் இடுபடும் பையனை தட்டிக் கேட்க , தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு, ஆனால் பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் இடுபடும் மாணவனை தட்டிக் கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா .
🌟 தினம் தினம் குறைந்தது 500 பிள்ளைகளுடன் நாங்கள் படும் பாட்டை யார் அறிவார்.
சமூகமே எங்கள் பிள்ளைகளையும் மறந்து உங்கள் பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர் காலத்திற்காக உழைக்கும் எங்களை போற்ற வேண்டாம், தூற்றாமலாவாது இருங்கள் .
🌟 என்று உங்கள் குழந்தைகளுக்காக மனவலியையும் மறந்து பாடுபடும் ஆசிரியர் சமூகம்.
தகவல்: ஒரு ஆசிரியரின் மனக் குமுறல்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment