🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/5000.html
🌟 மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 5000 அரசுப்பள்ளிகளை இணைப்பதோடு, அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை காலியிடங்களுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்,
🌟 தமிழகத்தில் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. நடப்பாண்டில் ஆகஸ்ட் வரை சேர்க்கை நடைபெற்றதால் செப்டம்பர் மாதத்தில் பள்ளி மாணவர் விபரங்கள் சேகரிக்கப்பட்டது. இதில் 20 க்கும் குறைவாக மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் பட்டியல் திரட்டப்பட்டு.
🌟 இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், போதிய கற்பித்தல் பணிகள் இன்றி, சம்பளம் பெறுகின்றனர். இதனால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய, பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 5000 அரசுப்பள்ளிகள் நடப்பு கல்வியாண்டு இறுதிக்குள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
🌟 இதனால் மாவட்ட கல்வி அதிகாரிகள், புதிய நியமனம் மற்றும் இடமாற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
🌟 மாவட்ட வாரியாக இணைக்கப்பட வேண்டிய பள்ளிகள், ஆசிரியர்களின் விபரங்கள் திரட்டும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
🌟 *இச்செய்தி பற்றி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் தோழர். மோசஸ் கூறுகையில்*
🌟 கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, புதிய பள்ளிகள் துவங்க அனுமதி அளித்திருந்தால் சேர்க்கை சரிவதை தடுக்க இயலும். தற்போது தமிழகம் முழுக்க 5000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகிலுள்ள பள்ளிகளோடு இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு புதிய நியமனத்திற்கு வாய்ப்புகள் மிக குறைவு என்று கூறியுள்ளார்.
தகவல்: நாளிதழ் செய்தி
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment