Tuesday, 21 November 2017

*ஜேக்டோ-ஜியோ வட்டார அளவிலான ஆர்பாட்டம் - 24.11.2017*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/t-n-p-t-f.html


*அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே..*



🌟 வருகின்ற *24-11-17 அன்று ஜாக்டோ ஜியோ சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது 


🌟 ஏனெனில் ஆகஸ்டு மாத வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாகவே அக்டோபரில் ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டது



🌟  *சி.பி.எஸ்.ஒழிப்பு மற்றும் ஊதியக்குழு முரண்பாடான மத்திய அரசுக்கு இனையான ஊதியம் வழங்காமை போன்றவை நீதிமன்ற வழக்கில் இருக்கும் இந்த காலகட்டத்தில் நமது ஆர்ப்பாட்டத்தின் வீச்சினை பொறுத்தே அரசின் நிலைப்பாடும் நீதிமன்றத்தின் நடவடிக்கையும் அமையும் 


🌟 நாம் எந்த அளவுக்கு வீரியத்தோடு இந்த ஆர்ப்பாட்டத்தினை     வெற்றியடைய செய்கிறோமோ அந்த அடிப்படையிலேயே நமது ஊதியக்குழுவின்,21 மாத நிலுவைத்தொகை பெறுவதும் ஊதியக்குழு முரண்பாடுகள் சரி செய்வதும்அமையும்.


🌟 அதனால் தான் *இந்த ஆர்ப்பாட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆர்ப்பாட்டமாக கருதப்படுகிறது. 


🌟 இது வேலை நிறுத்த போராட்டம் அல்ல,பயப்பட, பாதிப்பு ஏற்பட,சுமார் 1 மணி நேரம் மட்டும் நடைபெறும் *வட்டார அளவிலான ஆர்ப்பாட்டம் ஆதலால் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம். குறிப்பாக *பெண்ணாசிரியர்களின் பங்கு மகத்தானது*.



🌟 உங்களின் எண்ணிக்கையை பொறுத்தே இந்த ஆர்ப்பாட்டத்தின் வெற்றி அமையும். குடும்பச்சூழல், பணிச்சுமை இவைகள் இருப்பினும் வெள்ளியன்று விடியலை நோக்கி ஆர்ப்பாட்டம் நோக்கி செல்ல இன்றே திட்டமிடுங்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து அனைத்து உரிமையும் பெறுங்கள். 


🌟 நான் நலம் பெற நான் தான் போராடவேண்டுமே தவிர எனக்காக யாரேனும் போராடுவார்கள் என்பது தற்குறிகளின் வேதம் அதனை தகர்த்தெறிந்து ஆர்ப்பாட்டத்தினை வெற்றியடைய செய்ய அனைவரும் அணி திரண்டு வாரீர்.



🌟 என்முயற்சிகள் என்னை பலமுறை கைவிட்டதுண்டு, ஆனால் ஒரு முறை கூட என் முயற்சியை கைவிட்டதில்லை,என்ற *எடிசனின் கூற்றுக்கேற்ப முயற்சியை கைவிடாது முயற்சி திருவிணையாக்கும்*



🌟உத்வேகத்தோடு அனைவரும் வருக வருக என அன்போடு அழைக்கிறோம்

*JACTTO-GEO*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: