Sunday, 31 December 2017
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலசந்தர் அவர்களின் அறிவிப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_31.html
🌟 பேரண்புமிக்க பேரியக்க தோழர்களுக்கு வீர வணக்கம்
🌟 ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று 31.12.17 சென்னையில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. திரு.இரா. தாஸ், திரு.மு.அன்பரசு தலைமை ஏற்றனர்.
*அதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.*
🌟 6.1.18 அன்று CPS ரத்து அறிக்கை வெளியிடுதல்; பொங்கல் போனஸ் வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் காலை மணி 10 முதல் 1 மணி வரை தொடர்முழக்க போராட்டம் நடத்துவது.
🌟 3.1.18 அன்று மாவட்ட கூட்டங்களை நடத்துவது.
🌟 9.1.18 & 10.1.18 நாட்களில் அனைத்து அரசியல் கட்சி/சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பது.
🌟 4.2.18 அன்று சென்னையில் CPS ஒழிப்பு கருத்தரங்கம் நடத்துவது. அதில் நீதியரசர்,வழக்கறிஞர்,பத்திரிக்கையாளர்,பாராளுமன்ற உறுப்பினர்,தொழிற்சங்க தலைவர்,ஆகியோரை பங்கேற்க அழைப்பது.
🌟 ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற உள்ள உயர்மட்டக்குழு கூட்டத்தில் தொடர்மறியல் போராட்டத் தேதியை அறிவிப்பது.
🌟 வழக்கு மற்றும் போராட்ட நிதி சங்கத்திற்கு ரூ. 20000/_ என முடிவு செய்யப்பட்டது.
🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க தோழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தோழமையுடன்;
செ.பாலசந்தர்,
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தோழர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*📽 வரலாற்றில் இன்று... 🎥* *📅 31.12.2017 📆*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/31122017.html
🌟 1879 - வெள்ளொளிர்வு விளக்கு முதல் முறையாக தாமஸ் எடிசனால் காட்சிபடுத்தப்பட்து.
🌟 1909 - மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது.
🌟 1923 - லண்டன் பிக் பெண் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொருமுறை பிபிசி -ல் ஒலிபரப்பு செய்ய துவங்கப்பட்டது.
🌟 2004 - உலகின் மிக உயரமான வானலாவியான தாய்வானின் தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது.
🌟 2011 - அமெரிக்க இந்தியரும், 2009 ல் வேதியியல் பிரிவில் நோபல் பரிசு பெற்றவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு, பிரிட்டன் அரசு "நைட்ஹுட்" விருது அறிவித்தது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Saturday, 30 December 2017
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டார கிளைத் தேர்தல் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_67.html
🌟 பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களுக்கு வீர வணக்கம்.
🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டார கிளைத் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.
🌟 தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள்,
*🌟 தலைவர் :*
தோழர்.கு.சந்திரசேகரன்.
*🌟 செயலாளர் :*
தோழர்.அ.செல்வராஜ்.
*🌟 பொருளாளர்:*
தோழர்.அ.விஜயராஜ்.
*🌟துணைத் தலைவர்கள்:*
தோழர்.அ.ஞானம்,
தோழர்.உத்தாரபதி,
தோழர்.சி.சாரதா.
*🌟 துணைச் செயலாளர்கள்:*
தோழர்.அ.முனியன்,
தோழர்.கருணாகரன்,
தோழர்.சார்தாஜ்பேகம்.
*🌟 மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்:*
தோழர்.அ.கண்ணன்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟 ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_91.html
🌟 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முழுநேர முனைவர் பட்டப்படிப்புமேற்கொள்ளும் மாணவர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்
விண்ணப்பிக்க கடைசி தேதி:- 31.01.2018
🌟 விண்ணப்பம் pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது, கீழுள்ள link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
https://drive.google.com/file/d/16itBhgJcT6Agh_1sNuxFE9xDt4e3c_qc/view?usp=drivesdk
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் வட்டார கிளைத் தேர்தல் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_85.html
🌟 பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களுக்கு வீர வணக்கம்.
🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் வட்டார கிளைத் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.
🌟 தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள்,
*🌟 தலைவர் :*
தோழர்.எஸ்.கண்ணன்.
*🌟 செயலாளர் :*
தோழர்.வி.சி.சண்முகம்.
*🌟 பொருளாளர்:*
தோழர்.சி.பாரதிதாசன்.
*🌟துணைத் தலைவர்கள்:*
தோழர்.ஜெ.சுதர்சன்,
தோழர்.க.தனசேகரன்,
தோழர்.எஸ்.ஜெயபாரதி.
*🌟 துணைச் செயலாளர்கள்:*
தோழர்.பா.உதயகுமார்,
தோழர்.ஜெ.ப்ராங்களின் ஆரோக்கிய ஜேசுதாஸ்,
தோழர்.ப.அழகுமீனாள்.
*🌟 வட்டார செயற்குழு உறுப்பினர்கள்:*
தோழர்.இன்பச்செல்வன்
தோழர்.தே.ஜுவபிரபு
தோழர்.வி.குமார்
தோழர்.வே.ராஜேஷ்குமார்
தோழர்.ரோகிணிதோழர்.முத்துலட்சுமி
தோழர்.அந்தோணி
தோழர்.லதா
தோழர்.ஜெபஸ்டின் ஜேசு அந்தோணி ராஜ்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*TNPTF இயக்க நாளிதழில் ஜாக்டோ-ஜியோ சார்பாக நடைபெற்ற ஆர்பாட்ட புகைப்பட காட்சிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/tnptf_30.html
🌟 24.11.2017 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வட்ட தலைநகரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்பாட்ட சில வட்டார புகைப்படங்கள் நமது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்க நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
🌟 இந்த புகைப்படங்களில் எமது வட்டாரத்தில் நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்பாட்ட புகைப்படம் வந்துள்ளது
🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்க நாளிதழுக்கு *_TNPTF அயன்_* சர்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*📽 வரலாற்றில் இன்று... 🎥* *📅 30.12.2017 📆*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/30122017.html
🌟 1879 - தமிழக ஆன்மீகவாதி ரமண மகரிஷி பிறந்த தினம்.
🌟 1906 - அகில இந்திய முஸ்லீம் லீக் டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
🌟 1943 - சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
🌟 1880 - டிரான்ஸ்லாம் குடியரசு ஆன தினம்.
🌟 2014 - கொடிய நோயான எபோலா நோய் பாதிக்கப்பட்டதால் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 842 பேர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Friday, 29 December 2017
*EMIS ANDROID APPLICATION*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/emis-android-application.html
🌟 *EMIS ANDROID APPLICATION WORKING DEMO VIDEO*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*Bharathiar University*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/bharathiar-university.html
🌟 B.Ed. Programme 2018-2020 Admission Notification
🌟 Application forms are issued from 13.12.2017
🌟 Last Date for submission of Application 30.04.2018
🌟 Spot admission from 13.12.2017 onwards
www.b-u.ac.in
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான கற்றல் விளைவுகள் குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_54.html
🌟 தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் பயிற்சியாக "கற்றல் விளைவுகள்" என்ற தலைப்பில் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
🌟 ஏற்கனவே உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் பயிற்சிகள் நிறைவடைந்துள்ளது.
🌟 தற்பொழுது இப்பயிற்சியினை மீதமுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கிட கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
*🌟 உயர் தொடக்க நிலை:*
⚡ கற்றல் விளைவுகள்-கணிதம் & அறிவியல் - 03.01.2018 - 04.01.2018 இரண்டு நாட்கள்.
*🌟தொடக்க நிலை:*
⚡ கற்றல் விளைவுகள்-
Phase -I - 08.01.2018, 09.01.2018 - இரண்டு நாட்கள்.
Phase -II - 10.01.2018, 11.01.2018 - இரண்டு நாட்கள்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*ரூ.750 தனி ஊதியம் சம்மந்தமான செயல்முறைக் கடிதம் மற்றும் RTI கடிதம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/750-rti.html
🌟 இடைநிலை ஆசிரியர் ஒருவர் பட்டதாரி ஆசிரியராக 01.01.2011 க்கு பின் பதவி உயர்வு பெற்று ஊதிய நிர்ணயம் செய்யப்படும் போது அவர் ஏற்கனவே இடைநிலை ஆசிரியர் பதவியில் பெற்று வந்த தனி ஊதியம் ரூ.750 -னையும் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்திருப்பது அரசு கடித எண் 8764/சி.எம்.பி.சி/2012-1 நாள்-18.04.2012 ல் வெளியிட்டுள்ள தெளிவுரையின் படி சரியே என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசு சார்புச் செயலாளர் மற்றும் பொது தகவல் அலுவலர் பதில் அளித்துள்ளார்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*📽 வரலாற்றில் இன்று... 🎥* *📅 29.12.2017 📆*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/29122017.html
🌟 சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம்.
🌟 1845 - டெக்சாஸ் அமெரிக்காவின் 28 வது மாநிலமாக இணைந்தது.
🌟 1891 - தாமஸ் ஆல்வா எடிசன், வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்.
🌟 1937 - ஐரிய சுதந்திர நாடு, புதிய அரசியலமைப்பை அறிமுகம் செய்து, அயர்லாந்து குடியரசு எனப் பெயர் மாறியது.
🌟 2014 - போக்குவரத்து துறை வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் வரலாறு காணத அளவில் அரசு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Thursday, 28 December 2017
*இனி பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_47.html
🌟 இந்தியாவில் இனி பேஸ்புக் பயன்படுத்துவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.இந்தியாவில் 24.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் பேஸ்புக் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பேஸ்புக் கணக்குகளில் ஏராளமானவை போலியானவை என தெரிய வந்துள்ளது. இத்தகைய போலி கணக்குகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக, பேஸ்புக் பயன்படுத்துவோரின் ஆதார் எண்ணை வைத்து, அவர் உண்மையான பெயரில் தான் கணக்கு வைத்துள்ளாரா என பேஸ்புக் சரிபார்க்க முடிவு செய்துள்ளது.
🌟 மொபைல் பேஸ்புக் இணையதளத்தில் இது சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, புதிதாக பேஸ்புக் கணக்கு துவங்பவர்களிடம் ஆதார் அட்டையில் உள்ளது போன்று உங்களின் பெயரை பதிவு செய்யுங்கள். அது உங்களை அடையாளம் காண உங்கள் நண்பர்களுக்கு எளிதாக என தெரிவிக்கப்பட உள்ளது. ரெட்டிட், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
🌟 அதே சமயம், அனைவரும் இதனை செயல்படுத்த அவசியமில்லை. புதிதாக கணக்கு துவங்குபவர்களுக்கு மட்டுமே இந்த முறை அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மொபைல் மூலம் பேஸ்புக் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. அதனால் தங்களின் உண்மையான பெயர்களை பயன்படுத்த விரும்புபவர்கள், ஆதார் அட்டையில் உள்ளபடி தங்களின் பெயர்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். மற்றபடி கட்டாயமில்லை என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*📽 வரலாற்றில் இன்று... 🎥* *📅 28.12.2017 📆*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/28122017.html
🌟 1932 - இந்திய தொழிலதிபர் திருபாய் அம்பானி பிறந்த தினம்.
🌟 1937 - இந்திய டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா பிறந்த தினம்.
🌟 1940 - இந்திய அரசியல் தலைவர் ஏ.கே.அந்தோணி பிறந்த தினம்.
🌟 1612 - கலிலியோ கலிலி நெப்டியூன் கோளை கண்டுபிடித்தார்.
🌟 1065 - லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Wednesday, 27 December 2017
*EMIS APP - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/t-n-p-t-f-emis-app-emis.html
🌟 *EMIS APP தற்போது இயங்கும் நிலையில் உள்ளது*
🌟 அந்தந்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் EMIS தளம் பயன்பாட்டில் இருக்கும் அந்த நாட்களில் பயன்படுத்திக்கொண்டு பதிவேற்றம் செய்யவும்.
🌟 மொபைலில் EMIS TAMILNADU என் Play store-ல் பதிவிறக்கம் செய்து
தங்கள் பள்ளியின் மாணவர்களின் பதிவுகள் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை எடுத்து வைத்து கொள்ளவும்.
🌟 *STUDENT ID CARD*- ற்கு சென்றால் அதில் *DATA APPROVAL* மற்றும் *STUDENT ID CARD* என்று இரண்டுதலைப்பு இருக்கும்.
🌟 முதலில் *DATA APPOROVAL* ற்கு சென்று அதில் தங்கள் பள்ளியில் வகுப்பை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
🌟 அதனுள் சென்றால் ஒரு மாணவனின் பெயரை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் தகவல் விடுபட்டு இருந்தால் மேலே *EDIT* என்பதை கிளிக் செய்து விடுப்பட்டதை பதிவு செய்து கொள்ளவும்.
🌟 Photo பதிவேற்றம் செய்ய CAMERA வை தொட்டால்
🌟 GALLERY *(ஏற்கனவே எடுத்த வைத்த புகைப்படத்தை தேர்ந்தெடுக்க )*
🌟 Camera *( போட்டோ உடனே எடுத்து அப்போதே பதிவேற்றம் செய்து கொள்ள நினைப்பவர்கள் )* தங்களுக்கு தகுந்தவாறு தேர்வு செய்து புகைப்படம் *UPLOAD* செய்து கொள்ளவும்.
🌟 பின் *DATA APPROVAL* கொடுக்கவும். அதன் பின் வெளியே வந்து *ID CARD APPROVAL* ற்கு சென்று செய்ததை சரிபார்த்து கொண்டு *APPROVAL* கொடுத்தால் அது *ID CARD* அடிக்க ஏற்றுக்கொள்ளப்படும்.
🌟 இறுதியாக ID APPROVAL கொடுப்பதற்கு முன் சரிபார்த்து கொடுக்கவும்.
🌟 கொடுத்த எண்ணிக்கையை சரிபார்த்து கொள்ளவும்.
🌟 பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை உபயோகப்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
🌟 EMIS APP Download link 👇👇👇
https://play.google.com/store/apps/details?id=com.emis.schooleducation
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*📽 வரலாற்றில் இன்று... 🎥* *📅 27.12.2017 📆*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/27122017.html
🌟 1945 - உலக வங்கி உருவாக்கப்பட்ட தினம்.
🌟 1934 - பேர்சியா, ஈரான் என்ற பெயரைப் பெற்ற தினம்.
🌟 1956 - தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தினம்.
🌟 1978 - ஸ்பெயின் ஜனநாயக நாடான தினம்.
🌟 1922 - ஜப்பானின் ஹோஷோ, உலகின் முதலாவது விமானம் தாங்கி கப்பலாக கருதப்பட்ட தினம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Tuesday, 26 December 2017
*👍அசத்தும் AEEO👌*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/aeeo.html
🌟 அசத்தும் அரசு அலுவலர் தான் பணி புரியும் இடம் ஒரு கோவில்!!அந்த கோவிலை சொந்த செலவில் புதுப்பித்த, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்!
🌟 வேலூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தில், நெடுங்காலமாக பராமரிப்பின்றி இருந்த மாதனூர் உதவித் தொடக்க கல்வி அலுவலகத்தை, கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர், திரு.மாதேஷ் அவர்களின் சீரிய முயற்சியால் தன் சொந்த பணம் ரூபாய்,22,000/- செலவு செய்து அலுவலகத்தை மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒரு முன்மாதிரி அலுவலகமாக மாற்றி அமைத்து உள்ளார்...
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வழங்க குடியரசுத் தலைவர் உத்தரவு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_34.html
🌟 உயர்நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்த்து வழங்கும்படி நீதிபதிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
🌟 ராமேஸ்வரம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆளுநர் மாளிகையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரையும் சந்தித்தார். அப்போது பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தையும் இனி தமிழில் மொழி பெயர்த்து வழங்கும்படி கேட்டுக் கொண்டார். இதற்காக சட்டப் புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் உறுதியளித்துள்ளார்.
🌟 குடியரசுத் தலைவரின் இந்த அறிவிப்பால் வழக்கறிஞர்களும், மனுதாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் ஆணை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_10.html
*🌟 இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் மற்றும் பொது மக்களிடத்திலும் ஏற்படுத்தவும், மேலும் பள்ளி குழந்தைகளின் தனித்திறன்களை மேம்படுத்தவும் பள்ளிகளில் ஆண்டு விழாக்களை கொண்டாடுதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.
🌟 பள்ளிகளில் ஆண்டு விழாக்களை கொண்டாடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
⚡ குழந்தைகளின் எண்ணிக்கை 80 க்கும் அதிகமாக உள்ள (I to V) தொடக்கப்பள்ளிக்கு ரூ.5000,
⚡ குழந்தைகளின் எண்ணிக்கை 120 க்கும் அதிகமாக உள்ள (I to V) தொடக்கப்பள்ளிக்கு ரூ.8000,
⚡ குழந்தைகளின் எண்ணிக்கை 200 க்கும் அதிகமாக உள்ள (I to V) தொடக்கப்பள்ளிக்கு ரூ.10000,
⚡ குழந்தைகளின் எண்ணிக்கை 120 க்கும் அதிகமாக உள்ள (I to VIII) நடுநிலைப் பள்ளிக்கு ரூ.8000,
⚡ குழந்தைகளின் எண்ணிக்கை 200 க்கும் அதிகமாக உள்ள (I to VIII) நடுநிலைப் பள்ளிக்கு ரூ.10000,
மேற்கண்டவாறு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
🌟 மாவட்ட வாரியாக செலவினத் தொகை இணைக்கப்பட்டுள்ளது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*📽 வரலாற்றில் இன்று... 🎥* *📅 26.12.2017 📆*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/26122017.html
🌟 சுனாமி நினைவு தினம்.
🌟 1791 - ஆங்கில கணிதவியலாளர் சார்லஸ் பாபேஜ் பிறந்த தினம்.
🌟 1898 - ரேடியம் கண்டுபிடிக்கப் பட்ட தினம்.
🌟 1933 - பண்பலை வானொலி காப்புரிமம் பெற்ற தினம்.
🌟 1944 - ஆங்சான், பர்மாவின் நவீன ராணுவத்தை உருவாக்கினார்.
🌟 பொதுநல வாரிய நாடுகள் (பொக்சிங்) தினம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Monday, 25 December 2017
*வீட்டு கடன் வாங்க தேவையான ஆவணங்கள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_56.html
*🌟 மனை, வீடு வாங்க/ கட்ட, பிளாட் வாங்க, இருக்கின்ற வீட்டை மேம்படுத்த/ கூடுதல் அறைகள்/ தளம் கட்ட இப்படி எல்லாவற்றிற்கும் கடன் வாங்கலாம்.*
*🌟 தேவையான ஆவணங்கள்:*
⚡ 1.மனைப் பத்திரம்:
உங்களோட மனையினை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து வாங்கின பத்திரம்.
⚡ தாய் பத்திரம்:
இப்பொழுது இருக்கின்ற பத்திரத்திற்கு முந்தைய பத்திரம்.
⚡ வில்லங்கச் சான்றிதழ்:
இன்றைய நிலையில் மனை உங்களுக்கு தான் சொந்தம் என்பதை உறுதிபடுத்தும் சான்றிதழ்.
சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து வாங்க வேண்டும்.
குறைந்தது 13 வருடத்திற்கும், அதிகபட்சம் 20 வருடத்திற்கும் இந்த வில்லங்கச் சான்றிதழை வாங்கி வைப்பது நல்லது.
⚡ சட்டக் கருத்து (லீகல் ஒப்பீனியன்):
இது வக்கீல்கிட்ட வாங்க வேண்டிய சான்றிதழ். இதை வாங்குவதற்கு மனைப் பத்திரம், ஒரிஜினல் வில்லங்க சான்றிதழ், தாய் பத்திரத்தோட நகல், அப்ரூவ்டு மனையாக இருந்தால் அதற்கான லே-அவுட் வரைபடம், ஆகிய எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும்.
⚡ மனை விலை மதிப்பீடு அறிக்கை:
நீங்கள் கட்டப்போகின்ற வீட்டினுடைய சந்தை மதிப்பு என்ன, அரசு வழிகாட்டி மதிப்பு எவ்வளவு, இந்த இரண்டின் சராசரி எவ்வளவு? இதையெல்லாம் கணக்கு செய்து அங்கீகாரம் பெற்ற இன்ஜினியர் ஒருவர் கொடுக்கும் ரிப்போர்ட் தான் இது.
⚡ அங்கீகரிக்கப்பட்ட பிளான்:
மாநகராட்சி/ நகராட்சி மாதிரியான உள்ளாட்சி அமைப்புகளிடம் வாங்க வேண்டிய கட்டிட பிளான். கடன் வாங்கி வீடு கட்டுவதாக இருந்தால் முன்னதாகவே பிளான் போட்டு உள்ளாட்சி அமைப்புகளிடம் அப்ரூவலுக்கு விண்ணப்பித்திருந்தால் விரைவாக வீட்டு வேலையினை ஆரம்பித்துவிடலாம்.
⚡கட்டுமான செலவு அல்லது வீட்டின் மதிப்பு:
புதியதாக வீடு கட்டுவதாக இருந்தால் அதற்கான செலவு விபரங்களைப் பற்றி விவரமாக இன்ஜினியர் தரும் அறிக்கை.
ஏற்கனவே கட்டப்பட்ட வீடாக இருந்தால் அதனை மதிப்பிட்டு இன்ஜினியர் தரும் ரிப்போர்ட்.
⚡ வயதுக்கான ஆதாரம்:
கடனை திருப்பி செலுத்துவதற்கு உண்டான காலத்தை முடிவு செய்வதற்கு வயது ரொம்ப முக்கியம்.
10 அல்லது 12 ஆம் வகுப்பு மார்க் லிஸ்ட் அல்லது டி.சி போதுமானது.
பொதுவாக 21 வயது முடிந்திருந்தால் தான் வீட்டுக்கடன் தருவார்கள்.
சில வங்கிகள் வீட்டுக்கடன் வாங்குவதற்கு 25 வயது நிர்ணயம் செய்துள்ளது.
வீட்டுக்கடன் வாங்குவதற்கான அதிக பட்ச வயது 55.
⚡ வருமானச் சான்றிதழ்:
நீங்கள் வேலை பார்க்கின்ற அலுவலகத்திலிருந்து உங்களது சம்பள விபரங்களை தெளிவாக குறிப்பிட்டு அலுவலர் கையெழுத்து இட்டு வழங்கப்படும் சான்றிதழ்.
பொதுவாக ஒரு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிரந்தர பணியில் இருக்கின்றவர்களுக்குத் தான் வீட்டுக்கடன் கிடைக்கும்.
⚡ வங்கி கணக்கு புத்தகம் (பாஸ் புக்):
கடந்த ஆறு மாத காலத்திற்கான வங்கி கணக்கு புத்தகத்தின் நகல்.
⚡ வருமான வரி செலுத்திய விபரம்:
வருமானவரித்துறை வழங்குகின்ற நிரத்தர கணக்கு (பான் கார்ட்) அட்டையின் நகல்.
வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்த படிவத்தின் நகலையும் கொடுக்க வேண்டும்.
⚡ இருப்பிட முகவரிக்கான ஆதாரம்:
குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இவற்றின் நகல்.
⚡ புகைப்படம்:
மார்பளவு புகைப்படம் (Passport size photo) 5.
⚡ இதையெல்லாம் தவிர தேவைப்பட்டால் கடனுக்கு ஜாமின் கொடுக்க யாரையாவது கேரன்டி கையெழுத்து போடச்சொல்லி கேட்க வாய்ப்பு உள்ளது.
வருமானவரி கட்டுகின்ற யார் வேண்டுமானாலும் கேரன்டி கையெழுத்து போடலாம்.
தேசிய சேமிப்பு பத்திரம், ஆயுள் காப்பீடு பத்திரம் இதனை ஜாமின் தொகைக்கு இணையாக கொடுக்கலாம்.
⚡ கடனுக்கு அடமானமாக சொத்து பத்திரத்தை வாங்கி வைத்துக்கொள்வார்கள்.
கூடவே சொத்து பத்திரம் வங்கியில் அடமானமாக இருக்கும் விபரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து விடுவார்கள்.
அடமானமாக வைத்த சொத்தை கடன் அடைப்பதற்கு முன்பே விற்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது.
*⚡ கட்டணங்கள்:*
⚡ பரிசீலனைக் கட்டணம்:
வீட்டுக் கடன் விண்ணப்ப படிவத்தினை பரிசீலனை செய்வதற்கும், இடத்தினை நேரில் வந்து பார்ப்பதற்கும் வசூல் செய்கின்ற கட்டணம் தான் இது.
எவ்வளவு கடன் தருவதாக ஒப்புதல் தருகிறார்களோ அதுல சுமார் 0.5 - 1 சதவீதமாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் லீகல் ஒப்பீனியன், இன்ஜினியர் மதிப்பீட்டு அறிக்கை இவற்றிற்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இது கடன் தொகையினை பொருத்து மாறுபடும். தோராயமாக இந்த வகை செலவினங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகும்.
⚡ சில வங்கிகள், அவர்களுக்கென்று தனியாக வக்கீல், இன்ஜினியர்களை வைத்திருப்பார்கள். அந்த மாதிரியான வங்கிகளில் அவர்களிடம் தான் ரிப்போர்ட் வாங்கி கொடுக்க வேண்டும்.
அப்பொழுது அந்த கட்டணங்களும் கடன் தொகையில் சேர்ந்து விடும், சில வங்கிகள் கட்டணத்தினை தனியே கட்ட சொல்வார்கள். எப்படி பார்த்தாலும் இந்த பரிசீலனை கட்டணத்தினை எந்த வங்கியும் திருப்பி கொடுக்க மாட்டார்கள். அதனால் கடன் வாங்குகின்ற முடிவிற்கு இறுதியான பின் பரிசீலனை கட்டணத்தினை கட்ட வேண்டும்.
*⚡ கூடுதல் செலவுகள்:*
⚡ இது எல்லாம் போக வீட்டினை உங்கள் பெயருக்கு மாற்றி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய தனியாக செலவு ஆகும்.
இந்த செலவு நகர்புறங்களில் சில இலட்சம் செலவாகும்.
இந்த கட்டணத்தில் 85% வரைக்கும் அதே வங்கியில் திருப்பி செலுத்துகின்ற தகுதி இருந்தால் கடனாக வாங்கிக்கொள்ளலாம்.
இந்த கடன் வேண்டுமென்றால் நாம் வங்கியில் முன் கூட்டியே தகவல் கொடுக்க வேண்டும்.
இதனை கடன் தொகையுடன் சேர்த்து அதற்கு தகுந்தாற்போல் இ.எம்.ஐ - யினை மாற்றம் செய்வார்கள்.
⚡ புரோக்கர் மூலமாக வீடு வாங்குனீர்களானால் 2% கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கும்.
தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு டெபாசிட், கடன் தொகை, வீட்டிற்கு காப்பீடு என்று நிறைய பிற செலவுகள் இருக்கும்.
இத் தகவல் உங்களை பயமுறுத்த இல்லை, மாறாக முன்னேற்பாட்டிற்காகத் தான் தகவல் பகிரப்படுகிறது.
நன்றி! வணக்கம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*நீதிமன்ற அவமதிப்பு - ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_25.html
🌟 அண்மையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது நீதிமன்றத்தின் மான்புகளைச் சீர்குலைக்கும் வகையில், அவதூறாக பேசியதாகவும், பேட்டி அளித்ததாகவும் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டாதாரி ஆசியரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன், மாநிலத் தலைவர் எஸ்.பக்தவச்சலம், பொதுச்செயலாளர் டி.கோவிந்தன், முன்னால் மாநில பொருளாளர் ஜெ.சொர்ணலதா, எம்.மாயகிருஷ்ணன், எம்.ஜான் பிரேம் குமார், என்.செல்வன், கே.எஸ்.பாலகிருஷ்ணன், வி.ரமேஷ், கவிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிறுவன தலைவர் அ.மாயவன் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் எப்.ஐ.ஆர் அடிப்படையில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
🌟 இந்த வழக்கு வெள்ளி அன்று (டிசம்பர் 22) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
🌟 அந்த விசாரணையில் ஆசிரியர் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலையீட்டின் காரணமாகதான் தமிழக அரசு உடனடியாக ஊதிய உயர்வை வழங்கிட முன்வந்ததையும் நன்றி உணர்வோடு பார்க்கிறோம் என்று கூறினர்.
🌟 நீதிமன்ற மாண்புகளை சீர்குலைக்கக்கூடிய வகையில் செயல்படவில்லை என்றும், எதிர்காலத்திலும் அவ்வாறு செயல்படமாட்டோம் என்றும் உறுதியளித்தனர்.
🌟 இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அனைத்து தற்காலிக பணிநீக்க ஆணைகளையும் ரத்து செய்தார்.
🌟 ஆசிரியர் கழகத்தின் சார்பாக மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், வழக்குரைஞர் ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகினர்.
தகவல்: நாளிதழ் செய்தி.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*📽 வரலாற்றில் இன்று... 🎥* *📅 25.12.2017 📆*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/t-n-p-t-f.html
🌟 இயேசு கிறிஸ்து பிறந்த தினம்.
🌟 1876 - பாகிஸ்தானை தோற்றுவித்த முகமது அலி ஜின்னா பிறந்த தினம்.
🌟 1990 - உலகலாவிய வலைத்திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
🌟 1741 - ஆண்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியை கண்டுபிடித்தார்.
🌟 2010 - பாகிஸ்தானில் உணவு விநியோக மையத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர், 70 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Sunday, 24 December 2017
*தொலைந்து போன மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்..அனைத்தையும் லாக் கூட செய்யலாம்...*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_97.html
🌟 செல்போன் தவறவிட்டால் பதறாமல் இருந்த இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்.....
🌟 அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும். தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா. இது உண்மை. இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
*find my device*
🌟 find my device மூலம்இதை எளிதான செய்ய முடியும்.
🌟 முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள்..
🌟 பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை log in செய்ய வேண்டும்.உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும்.
🌟 அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound,lock ,erase என்ற 3 தகவல்கள் இருக்கும்.
🌟 ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது map மூலமாக தெரியவரும்.
🌟 play sound கிளிக் செல்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.
🌟 lock ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடும்.
🌟 erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.
🌟 இந்த அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
🌟 *தொலைந்து போன மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்..அனைத்தையும் லாக் கூட செய்யலாம்... எப்படி என்ற YOUTUBE VIDEO LINK 👇👇👇
https://youtu.be/jUSrGnZwb88
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*ஆசிரியர்களுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/t-n-p-t-f-health-card-2016-website.html
🌟 Health card 2016 website:
tnnhis2016.com/TNEMPLOYEE/EmployeeLogin.aspx
🌟 TPF account slip click here
agae.tn.nic.in/onlinegpf/loginnew.aspx
🌟 Salary details monthly click here
epayroll.tn.gov.in/epayslip
🌟 CPS account slip click here
CPS.tn.gov.in/puplic
🌟 Salary status in treasury click here
treasury2.tn.giv.in
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..?*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_24.html
🌟 ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
🌟 தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
🌟 பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.
🌟 இனி மேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்து விடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி…
🌟 ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்கு தோராயமாக 61.00 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு.
🌟 ஆன்லைனில் நேரடியாக தேடி பிரிண்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.
🌟 இது போக ரெஜிஸ்டர் டாக்குமண்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும்.
🌟 சென்னை, கடலூர், கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி அலுவலகங்களுக்கு இது பொருந்தும்.
🌟 அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.
🌟 மேலும் பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன் லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1 ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.
🌟 மேலும் சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமெண்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது.
🌟 உங்களின் அரசாங்க லேண்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.
🌟 அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
🌟 ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0
🌟 ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1
🌟 டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp
🌟 திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp
🌟 சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp
🌟 சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp
🌟 லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelineva…/gvaluemainpage2011.asp
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*📽 வரலாற்றில் இன்று... 🎥* *📅 24.12.2017 📆*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/24122017.html
🌟 1951 - லிபியா விடுதலை நாள்.
🌟 1973 - திராவிடர் கழகத்தை தோற்றுவித்த ஈ.வெ.ராமசாமி இறந்த தினம்.
🌟 1987 - தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் இறந்த தினம்.
🌟 1924 - அல்பேனியா குடியரசானது.
🌟 1906 - ரெஜினால்ட் ஃபெசண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Saturday, 23 December 2017
*அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊர்திபடி தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_42.html
🌟 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி உடைய மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊர்திபடி மாதமொன்றுக்கு ரூ.1000 லிருந்து ரூ.2500 ஆக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது என்று அரசு சார்பு செயலாளர் (பொது தகவல் அலுவலர்) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் அளித்துள்ளார்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Subscribe to:
Posts (Atom)