Monday, 25 December 2017

*நீதிமன்ற அவமதிப்பு - ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_25.htm
l


🌟 அண்மையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது நீதிமன்றத்தின் மான்புகளைச் சீர்குலைக்கும் வகையில், அவதூறாக பேசியதாகவும், பேட்டி அளித்ததாகவும் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டாதாரி ஆசியரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன், மாநிலத் தலைவர் எஸ்.பக்தவச்சலம், பொதுச்செயலாளர் டி.கோவிந்தன்,  முன்னால் மாநில பொருளாளர் ஜெ.சொர்ணலதா,  எம்.மாயகிருஷ்ணன், எம்.ஜான் பிரேம் குமார்,  என்.செல்வன், கே.எஸ்.பாலகிருஷ்ணன், வி.ரமேஷ், கவிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிறுவன தலைவர் அ.மாயவன் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் எப்.ஐ.ஆர் அடிப்படையில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.


🌟 இந்த வழக்கு வெள்ளி அன்று (டிசம்பர் 22) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


🌟 அந்த விசாரணையில் ஆசிரியர் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலையீட்டின் காரணமாகதான் தமிழக அரசு உடனடியாக ஊதிய உயர்வை வழங்கிட முன்வந்ததையும் நன்றி உணர்வோடு பார்க்கிறோம் என்று கூறினர்.


🌟 நீதிமன்ற மாண்புகளை சீர்குலைக்கக்கூடிய வகையில் செயல்படவில்லை என்றும், எதிர்காலத்திலும் அவ்வாறு செயல்படமாட்டோம் என்றும் உறுதியளித்தனர்.


🌟 இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அனைத்து தற்காலிக பணிநீக்க ஆணைகளையும் ரத்து செய்தார்.

🌟 ஆசிரியர் கழகத்தின் சார்பாக மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், வழக்குரைஞர் ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகினர்.    


தகவல்: நாளிதழ் செய்தி.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: