🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_56.html
*🌟 மனை, வீடு வாங்க/ கட்ட, பிளாட் வாங்க, இருக்கின்ற வீட்டை மேம்படுத்த/ கூடுதல் அறைகள்/ தளம் கட்ட இப்படி எல்லாவற்றிற்கும் கடன் வாங்கலாம்.*
*🌟 தேவையான ஆவணங்கள்:*
⚡ 1.மனைப் பத்திரம்:
உங்களோட மனையினை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து வாங்கின பத்திரம்.
⚡ தாய் பத்திரம்:
இப்பொழுது இருக்கின்ற பத்திரத்திற்கு முந்தைய பத்திரம்.
⚡ வில்லங்கச் சான்றிதழ்:
இன்றைய நிலையில் மனை உங்களுக்கு தான் சொந்தம் என்பதை உறுதிபடுத்தும் சான்றிதழ்.
சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து வாங்க வேண்டும்.
குறைந்தது 13 வருடத்திற்கும், அதிகபட்சம் 20 வருடத்திற்கும் இந்த வில்லங்கச் சான்றிதழை வாங்கி வைப்பது நல்லது.
⚡ சட்டக் கருத்து (லீகல் ஒப்பீனியன்):
இது வக்கீல்கிட்ட வாங்க வேண்டிய சான்றிதழ். இதை வாங்குவதற்கு மனைப் பத்திரம், ஒரிஜினல் வில்லங்க சான்றிதழ், தாய் பத்திரத்தோட நகல், அப்ரூவ்டு மனையாக இருந்தால் அதற்கான லே-அவுட் வரைபடம், ஆகிய எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும்.
⚡ மனை விலை மதிப்பீடு அறிக்கை:
நீங்கள் கட்டப்போகின்ற வீட்டினுடைய சந்தை மதிப்பு என்ன, அரசு வழிகாட்டி மதிப்பு எவ்வளவு, இந்த இரண்டின் சராசரி எவ்வளவு? இதையெல்லாம் கணக்கு செய்து அங்கீகாரம் பெற்ற இன்ஜினியர் ஒருவர் கொடுக்கும் ரிப்போர்ட் தான் இது.
⚡ அங்கீகரிக்கப்பட்ட பிளான்:
மாநகராட்சி/ நகராட்சி மாதிரியான உள்ளாட்சி அமைப்புகளிடம் வாங்க வேண்டிய கட்டிட பிளான். கடன் வாங்கி வீடு கட்டுவதாக இருந்தால் முன்னதாகவே பிளான் போட்டு உள்ளாட்சி அமைப்புகளிடம் அப்ரூவலுக்கு விண்ணப்பித்திருந்தால் விரைவாக வீட்டு வேலையினை ஆரம்பித்துவிடலாம்.
⚡கட்டுமான செலவு அல்லது வீட்டின் மதிப்பு:
புதியதாக வீடு கட்டுவதாக இருந்தால் அதற்கான செலவு விபரங்களைப் பற்றி விவரமாக இன்ஜினியர் தரும் அறிக்கை.
ஏற்கனவே கட்டப்பட்ட வீடாக இருந்தால் அதனை மதிப்பிட்டு இன்ஜினியர் தரும் ரிப்போர்ட்.
⚡ வயதுக்கான ஆதாரம்:
கடனை திருப்பி செலுத்துவதற்கு உண்டான காலத்தை முடிவு செய்வதற்கு வயது ரொம்ப முக்கியம்.
10 அல்லது 12 ஆம் வகுப்பு மார்க் லிஸ்ட் அல்லது டி.சி போதுமானது.
பொதுவாக 21 வயது முடிந்திருந்தால் தான் வீட்டுக்கடன் தருவார்கள்.
சில வங்கிகள் வீட்டுக்கடன் வாங்குவதற்கு 25 வயது நிர்ணயம் செய்துள்ளது.
வீட்டுக்கடன் வாங்குவதற்கான அதிக பட்ச வயது 55.
⚡ வருமானச் சான்றிதழ்:
நீங்கள் வேலை பார்க்கின்ற அலுவலகத்திலிருந்து உங்களது சம்பள விபரங்களை தெளிவாக குறிப்பிட்டு அலுவலர் கையெழுத்து இட்டு வழங்கப்படும் சான்றிதழ்.
பொதுவாக ஒரு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிரந்தர பணியில் இருக்கின்றவர்களுக்குத் தான் வீட்டுக்கடன் கிடைக்கும்.
⚡ வங்கி கணக்கு புத்தகம் (பாஸ் புக்):
கடந்த ஆறு மாத காலத்திற்கான வங்கி கணக்கு புத்தகத்தின் நகல்.
⚡ வருமான வரி செலுத்திய விபரம்:
வருமானவரித்துறை வழங்குகின்ற நிரத்தர கணக்கு (பான் கார்ட்) அட்டையின் நகல்.
வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்த படிவத்தின் நகலையும் கொடுக்க வேண்டும்.
⚡ இருப்பிட முகவரிக்கான ஆதாரம்:
குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இவற்றின் நகல்.
⚡ புகைப்படம்:
மார்பளவு புகைப்படம் (Passport size photo) 5.
⚡ இதையெல்லாம் தவிர தேவைப்பட்டால் கடனுக்கு ஜாமின் கொடுக்க யாரையாவது கேரன்டி கையெழுத்து போடச்சொல்லி கேட்க வாய்ப்பு உள்ளது.
வருமானவரி கட்டுகின்ற யார் வேண்டுமானாலும் கேரன்டி கையெழுத்து போடலாம்.
தேசிய சேமிப்பு பத்திரம், ஆயுள் காப்பீடு பத்திரம் இதனை ஜாமின் தொகைக்கு இணையாக கொடுக்கலாம்.
⚡ கடனுக்கு அடமானமாக சொத்து பத்திரத்தை வாங்கி வைத்துக்கொள்வார்கள்.
கூடவே சொத்து பத்திரம் வங்கியில் அடமானமாக இருக்கும் விபரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து விடுவார்கள்.
அடமானமாக வைத்த சொத்தை கடன் அடைப்பதற்கு முன்பே விற்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது.
*⚡ கட்டணங்கள்:*
⚡ பரிசீலனைக் கட்டணம்:
வீட்டுக் கடன் விண்ணப்ப படிவத்தினை பரிசீலனை செய்வதற்கும், இடத்தினை நேரில் வந்து பார்ப்பதற்கும் வசூல் செய்கின்ற கட்டணம் தான் இது.
எவ்வளவு கடன் தருவதாக ஒப்புதல் தருகிறார்களோ அதுல சுமார் 0.5 - 1 சதவீதமாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் லீகல் ஒப்பீனியன், இன்ஜினியர் மதிப்பீட்டு அறிக்கை இவற்றிற்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இது கடன் தொகையினை பொருத்து மாறுபடும். தோராயமாக இந்த வகை செலவினங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகும்.
⚡ சில வங்கிகள், அவர்களுக்கென்று தனியாக வக்கீல், இன்ஜினியர்களை வைத்திருப்பார்கள். அந்த மாதிரியான வங்கிகளில் அவர்களிடம் தான் ரிப்போர்ட் வாங்கி கொடுக்க வேண்டும்.
அப்பொழுது அந்த கட்டணங்களும் கடன் தொகையில் சேர்ந்து விடும், சில வங்கிகள் கட்டணத்தினை தனியே கட்ட சொல்வார்கள். எப்படி பார்த்தாலும் இந்த பரிசீலனை கட்டணத்தினை எந்த வங்கியும் திருப்பி கொடுக்க மாட்டார்கள். அதனால் கடன் வாங்குகின்ற முடிவிற்கு இறுதியான பின் பரிசீலனை கட்டணத்தினை கட்ட வேண்டும்.
*⚡ கூடுதல் செலவுகள்:*
⚡ இது எல்லாம் போக வீட்டினை உங்கள் பெயருக்கு மாற்றி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய தனியாக செலவு ஆகும்.
இந்த செலவு நகர்புறங்களில் சில இலட்சம் செலவாகும்.
இந்த கட்டணத்தில் 85% வரைக்கும் அதே வங்கியில் திருப்பி செலுத்துகின்ற தகுதி இருந்தால் கடனாக வாங்கிக்கொள்ளலாம்.
இந்த கடன் வேண்டுமென்றால் நாம் வங்கியில் முன் கூட்டியே தகவல் கொடுக்க வேண்டும்.
இதனை கடன் தொகையுடன் சேர்த்து அதற்கு தகுந்தாற்போல் இ.எம்.ஐ - யினை மாற்றம் செய்வார்கள்.
⚡ புரோக்கர் மூலமாக வீடு வாங்குனீர்களானால் 2% கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கும்.
தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு டெபாசிட், கடன் தொகை, வீட்டிற்கு காப்பீடு என்று நிறைய பிற செலவுகள் இருக்கும்.
இத் தகவல் உங்களை பயமுறுத்த இல்லை, மாறாக முன்னேற்பாட்டிற்காகத் தான் தகவல் பகிரப்படுகிறது.
நன்றி! வணக்கம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment