Tuesday, 5 December 2017

*புதிய விரைவுப் பாடத்திட்டம் (2017) - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கருத்துக்களும் ஆலோசனைகளும்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

 ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/2017.html


🌟 தமிழகக் கல்வித் துறையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த 22.05.2017 அன்று பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் கலைத்திட்டக் குழுவும், பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் உயர் மட்ட குழுவும் அமைக்கப்பட்டது.



🌟 கிட்டத்தட்ட 5 மாத காலக்கெடுவுக்குள் விரைவுப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அப்பாடத் திட்டத்தைத் தமிழக முதல்வர் அவர்களால் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.



🌟 புதிய வரைவுப் பாடத் திட்டப் பணிகளை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதிப்புமிகு. உதயச் சந்திரன் அவர்கள் மேற்பார்வையிலும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மதிப்புமிகு. அறிவொளி அவர்களின் ஒருங்கிணைப்பில் கலைத்திட்டத்துணைக் குழு மற்றும் பாடப் புத்தகம் எழுதும் குழுக்கள் அமைக்கப்பட்டன.



🌟  பாடத்திட்ட மாற்றம் குறித்து கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என கிட்டத்தட்ட 2000 பேரிடம் கருத்துக்கள் பெறப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி யின் பாடத்திட்டம் உட்பட பல பாடத்திட்டங்களை ஆய்வு செய்தும், வெளி மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், அமெரிக்கா, பின்லாந்து உட்பட வெளிநாடுகளில் உள்ள 15 வகையான பாடத்திட்டங்களை ஆய்வு செய்தும் அதில் உள்ள நல்ல அம்சங்களை புதிய பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளதாக பாடத்திட்ட வரைவுக் குழுத் தலைவர் முனைவர். அனந்தகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


🌟 புதிய விரைவுப் பாடத்திட்டம் பற்றிய செய்திகள், பேட்டிகள் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இருந்தாலும் அதற்குள் இருக்கின்ற அம்சங்கள், தரம், வகைப்பாடு, இன்னும் கவனிக்கப்பட வேண்டிய பகுதிகள், சமூக மாற்றத்திற்கான கூறுகள் போன்றவற்றை ஆய்வு செய்து கீழ்க்கண்ட கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கருத்து கேட்பு குழுவின் பரிசீலனைக்குப் பதிவு செய்கிறோம்.


🌟 கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது,👇👇👇


https://drive.google.com/file/d/1554Tx_WsSps5h-28tQ8WhxcmbzB17MO0/view?usp=drivesdk


https://drive.google.com/file/d/1yCL2xGQd784NqijjoLulgac6LEFte5jx/view?usp=drivesdk


https://drive.google.com/file/d/1GrGKTAloMHPaY8buDvIrk-gFsduX22OL/view?usp=drivesdk


https://drive.google.com/file/d/1q6ks-UXJtVB5JG6eD2wECDdgO33nqhjZ/view?usp=drivesdk


https://drive.google.com/file/d/1q-yZhm_eM2HHUuH0_BqMd-kUKaW7FKhI/view?usp=drivesdk


https://drive.google.com/file/d/10KRO_7NySDfPbNzmwbWWE6ab2PBL15mX/view?usp=drivesdk


https://drive.google.com/file/d/1iV8VOwvvUXz3c34odeRY1Fh_oep0SovM/view?usp=drivesdk



🤝 தோழமையுடன்;

தோழர்.செ.பாலச்சந்தர்,
மாநில பொதுசெயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм









No comments: