*அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் தொடக்க பள்ளி ஆசிரியர்களின் அவல நிலை.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_1.html
🌟 தொடக்க கல்வியின் கீழ் செயல்படும் சிறுபான்மை பள்ளிகளில் 28/2010 முதல் 15/11/2011 வரை பணியில் சேர்ந்து பணிபுரிகின்ற ஆசிரியர்களின் நிலை மிகவும் துயரமானதாக உள்ளது .
(அதாவது அ/ஆ 181/நாள் 15/11/201 TET அரசாணை வெளியிடுவதற்கு முன்பு )
🌟 பணியில் சேர்ந்த இவர்களுக்கு பணிக்கு ஊதியம் மறுக்கப்பட்டு வந்த நிலையில் இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி வெறும் அடிப்படை ஊதியம் மட்டும் பெற்று வந்தனர்.
🌟 இந்நிலையில் 24/8/2016 அன்று சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதி மன்றத்தின் தீர்பாணையின் அடிப்படையில் சிறுபான்மை பள்ளிகளுக்கு TET அவசியமில்லை என தீர்ப்பளித்தது. ஆனால் இதுவரைக்கும் இவர்கள் பணிநிரந்தரமோ, பணபலன்களோ ஏதும் பெறாமலேயே வெறும் அடிப்படை ஊதியத்துடனேயே இன்னலுறுகிண்றனர்.
🌟 மீண்டும் கடந்த ஏப்ரலில்2017, உயர் நீதி மன்ற மதுரை கிளை 15/11/2011 கு முன்பு பணியில் சேர்ந்தவர்களை TET எழுத கட்டாய படுத்த கூடாது தகுதி தேர்வு அவர்களுக்கு அவசியமில்லை என அறிவித்தது .இந்த தீர்ப்பனையின் அடிப்படையில் பள்ளிக்கல்வியின் துறையின் கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அனைத்து விதமான பண பலன்களும் கிடைக்கப்பெற்று, பணி நிரந்தரமும் பெற்று வருகின்றனர் ஆனால் தொடக்க கல்வியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரமும் மற்ற பண பலன்களும் இன்றி மிகுந்த சிரமப்படுகிறோம்.
🌟 DEEO, AEEO வை அணுகினால் அவர்கள் இயக்குநரிடம் இருந்து முறையான அரசாணை வந்தால் மட்டுமே என்கின்றனர்.
🌟 இவர்களின் பிரச்சனகள் களையப்படுமா? நல்ல தெளிவான அரசாணை வெளியிட்டு இவர்களின் துயர் துடைக்கப்படுமா?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு இந்த ஆசிரியர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வழிவகை செய்யுமாறு TNPTF அயன் சார்பாக அன்புடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறோம், நன்றி!*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment