Saturday, 23 December 2017

*இரண்டாம் பருவ விடுமுறை நாட்களில் நடைபெற இருக்கும் கணினி பயிற்சியினை ரத்து செய்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர்.பாலசந்தர் கோரிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_97.html


🌟 பேரண்புமிக்க பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்,


🌟 ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவ விடுமுறையில் கணினி பயிற்சி வழங்கிட தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ள நிலையில் நேற்று,


🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தோழர்.பாலசந்தர், தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.கார்மேகம் அவர்களை சந்தித்து பயிற்சி வகுப்பினை இரத்து செய்திட கோரிக்கை  வைத்துள்ளார்.


*🌟 தொடக்கக்கல்வி இயக்குநரிடம் பொதுச்செயலார் வைத்த கோரிக்கை தொடர்பாக கூறிய விபரம்.*


🌟 வேலை நிறுத்த போராட்ட காலமானது, நீதிமன்றத்திலேயே பதில் நாளாக சனிக்கிழமைகளில் வேலை செய்து ஈடு செய்வது எனவும்,


🌟 ஏற்கனவே பல மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சனிக்கிழமைகளில் வேலை செய்ய உத்தரவு பிறப்பித்து, சனிக்கிழமைகளில் ஈடு செய்யும் நாளாக பணியாற்றி உள்ளதையும்,


🌟 மேலும் ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் வெளியூர் செல்ல ஏற்கனவே திட்டமிட்டுள்ளதையும் கூறியுள்ளார்.


🌟 கோரிக்கையின் சாரம்சத்தை கேட்ட தொடக்கக்கல்வி இயக்குநர் மனுவினை பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.


🤝 தோழமையுடன்;

செ.பாலசந்தர்,
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.



✍️ தகவல் பகிர்வு:

தோழர்.ரஹீம்
மாநில செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: