Friday, 15 December 2017

*பள்ளிக்கல்வி அமைச்சர் & செயலாளரிடம் மேல்முறையீட்டு மனு : TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/tnptf_52.html


*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின்  பெருமைக்குரிய தோழர்களே!*

*வணக்கம்.*


🌟இன்று (15.12.17) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக,


🌟மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்


🌟மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள்


🌟மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித் துறை இணைச்செயலாளர் அவர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து,


🌟ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில், வேறு ஒன்றியத்தில் இருந்து மாறுதலில் வந்த ஆசிரியர்கள் அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுடன் *ஒப்பிட்டு மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைய* இயலாது என்ற அறிவுரையை மறுபரிசீலனை செய்து, முன்னுரிமைப் பட்டியலின்படி ஊதிய முரண்பாடுகளைக் களைந்திட உரிய தெளிவான வழிகாட்டுதல் வழங்கிடக் கோரும் மேல்முறையீட்டு மனு.


🌟நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு *பி.எட்., பட்டப்படிப்பிற்கான ஊக்க ஊதியம் வழங்கிட* விதிகளில் இடமில்லை எனக்கூறி மறுத்து ஆணை வழங்கியுள்ளதை ஆட்சேபிக்கும் மேல்முறையீட்டு மனு.


*🌟பொருளாதாரம் & வணிகவியல்* பாடங்களுக்குப் பெறப்படும் *பி.எட்., பட்டப் படிப்பிற்கு ஊக்க ஊதிய* உயர்வை ரத்து செய்து, அரசாணைகளுக்கு முரணாக இயக்குநர் அவர்கள் வெளியிட்டுள்ள செயல்முறைகளை இரத்து செய்யக் கோரும் மனு.


🌟தமிழக அரசின் 8-வது ஊதிய மாற்றக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதில், *தனி ஊதியம் ரூ.2,000/- மற்றும் சிறப்புப் படிகளில் (ரூ.500, ரூ.50, ரூ.30) ஏற்பட்டுள்ள இழப்பீடுகளை நிவர்த்தி செய்ய*க்கோரும் மனு.


🌟உயர்கல்வி பயில முன் அனுமதி கோரி முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டும் அலுவலக தாமதத்தால் ஆணை வழங்கப்படாத சூழலில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் *பின்னேற்பு வழங்க* மீண்டும் விண்ணப்பித்திருந்தனர். பின்னேற்பு வழங்குவதில் தொடரும் தாமதத்தால் உயர்கல்வியால் ஏற்படும் பலன்கள் மறுக்கப்பட்ட சூழலில் ஆசிரியர்கள் உள்ளதைக் கவனத்தில் கொண்டு, பின்னேற்பு வழங்க ஆவண செய்யக் கோரும் மனு.

உள்ளிட்ட 5 கோரிக்கை / மேல்முறையீட்டு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.


🌟இன்றைய சந்திப்பில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலாளர் செ.பாலசந்தர், துணைப் பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் மற்றும் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் தோழர்.ந.சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டோம்.


_தோழமையுடன்_

*செ.பாலசந்தர்,*_பொதுச் செயலாளர்,_*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*



*📲தகவல் பகிர்வு:*

_தோழர்.செல்வ.ரஞ்சித்குமார்._ (நன்றி தோழர்)


*TNPTF மேல்முறையீட்டு மனு - pdf வடிவில் 👇👇👇*


https://drive.google.com/file/d/1XCRf7ovy9QsxLMq4M71NgNVC_knDARtO/view?usp=drivesdk



*🗣இவண்,*

*_TNPTF அயன்_*

🗝тnρтfαyαn.вℓσgѕρσஈт.¢σм




No comments: