🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_16.html
*🌟 தொடக்கக்கல்வி ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ அரசு/ அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் EMIS இணையதளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்வது மற்றும் ஆதார் எண்களை மாணவர் விபரங்களுடன் முழுமையாக இணைப்பது தொடர்பான தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்.*
🌟 பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் மற்றும் ஆதார் ஆகியவை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு. *18.01.2018 முதல் 25.01.2018 வரை -1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் புதிதாக மாணவர்களை விவரங்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
🌟 அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விடுபட்ட மாணவர் விபரங்களை முழுமையாக பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் அறிவுறித்தியுள்ளார்.
🌟 துறையின் உயர் அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட உள்ளதால் EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையும், பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் சமமாக உள்ளதை அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் சார்ந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.
🌟 இணைப்பில் கானும் படிவத்தினை (சான்றினை) சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் உதவித் தொடக்கக்கல்வி அலுவலரிடமும், உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடமும், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தொடக்கக்கல்வி இயக்குநரிடமும் அளிக்கப்பட வேண்டும்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment