Thursday, 18 January 2018

*தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_97.html


*🌟 தொடக்கக்கல்வி துறையில் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநராக மாற்றுப்பணியில் பணிபுரிய விருப்பமுடைய பட்டதாரி ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பம் கேட்டு பெறுவது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*


🌟 மாநில திட்ட இயக்குநரின் 02.11.2017 நாளிட்ட கடிதத்தில் ஆசிரிய பயிற்றுநர்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டது.

🌟 இறப்பு , ஓய்வு , ராஜினாமா, பணி உயர்வு மற்றும் வேறு பணிக்கு செல்லுதல் உள்ளிட்ட காரணங்களால் 228 காலி பணியிடங்களும் மேலும் இக் கல்வியாண்டில் 350 ஆசிரிய பயிற்றுநர்களை பணி மாறுதல் செய்யப்பட உள்ளதால் 578 காலி பணியிடங்களால் திட்டப் பணிகள் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை உள்ளது.

🌟 578 ஆசிரிய பயிற்றுநர் பணியிடங்களை கீழ்குறித்த நிபந்தனைகளின் படி தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

*நிபந்தனைகள்*

🌟 விருப்பமுள்ள பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் பயிற்றுநராக பணி மாறுதலில் செல்வதற்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்து மாற்றுப்பணி வழங்கப்படும்.

 🌟 ஆசிரியர் பயிற்றுநர் பணியில் தணியரின் பணி அலுவலருக்கு திருப்தி இல்லையெனில் உடனே தாய்த் துறைக்கு அனுப்பப்படுவர்.

 🌟 குறைந்தது 3 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்றுநராக பணியாற்றலாம்.


🌟 01.01.2016 க்கு பின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட விருப்பமுடைய தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநராக மாறுதலில் செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: