Wednesday, 3 January 2018

*உலக வரலாற்றிலேயே முதல் தற்கொலைப் படை வீராங்கனை!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_3.html



🌟 ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முன்பு வேலு நாச்சியார் படை தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த சமயம் அது. அரண்மனை ஆயுதக் கிடங்கில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் குவிக்கப்பட்டு இருந்தது.



🌟 அப்போது சட்டென ஒரு உருவம் எரி நெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் குதித்தது.. அப்படியே அந்த ஆயுதக்கிடங்கு வெடித்துச் சிதற அந்த உருவமும் வெடித்துச் சிதறியது...


🌟 ஆங்கிலேயர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முழுதும் அழிக்கப்பட்டது.. அதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது...


🌟 ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் வெடித்துச் சிதறிய அந்த உருவம் தான் " தியாக வீரத்திருமகள் குயிலி "


🌟 இந்தக் குயிலி தான் உலக வரலாற்றில் காணப்படும் முதல் தற்கொலைப் படை வீராங்கனை. ஆனால், ஒரு திருத்தம். நமது தேச நலனுக்காக தற்கொலை படை தாக்குதல் நடத்தியவள் இவள். அந்தத் தாக்குதலில் ஆங்கிலேயர்களின் ஆயுதங்களை மட்டும் தான் அழித்தாள். எந்த ஆங்கில உயிரும் பறிக்கப் பட வில்லை. உயிரைக் கொடுக்கும் பாரதப் பெண் ஆயிற்றே! எதிரியாக போய் விட்டாலும் எப்படி உயிரைப் பறிக்க மனம் வரும்?



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: