🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_10.html
🌟 ஜாக்டோ-ஜியோ சார்பில் 06-01-2018 அன்று மாவட்ட தலைநகரங்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தொடர் முழக்க போராட்டம் நடைபெற உள்ளது.
*🌟 தொடர் முழக்க போராட்ட கோரிக்கைகள்:*
⚡ உச்ச வரம்பின்றி ஒரு மாத ஊதியம் போனசாக வழங்குதல்,
⚡ புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துதல்,
⚡ 21 மாத நிலுவைத் தொகையை உடன் வழங்குதல்,
⚡ சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், ஊர்புற நூலகர், பகுதி நேரம்/ தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்குதல்,
*⚡ இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் மற்றும் அமைச்சுப் பணியாளர், கண்காணிப்பாளர்கள், பல்வேறு துறையில் உள்ள அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், தலைமைச்செயலகம் உள்ளிட்ட தொழில் நுட்ப ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து ஊதியம் மாற்ற உத்தரவிடுதல்,*
⚡ பல்கலைக்கழகம்/ கல்லூரி பேராசிரியர்களுக்கு ஊதிய மாற்ற உத்தரவினை உடன் அமுல்படுத்துதல்,
⚡ குறைந்த பட்ச ஊதியம் ரூ.18000 மற்றும் மறுக்கப்பட்ட மத்திய அரசுக்கு இணையான படிகளை வழங்குதல்,
⚡ குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்குதல்,
⚡ போராடிய அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எவ்வித நிபந்தனை இன்றி ரத்து செய்தல்,
⚡ மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல்,
⚡ அலுவலர் குழுவின் அதிகார எல்லையை மீறி பரிந்துரைத்துள்ள பணியாளர் சீரமைப்பு குழு அமைப்பதை அரசு உடனடியாக கைவிடல்,
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
🌟 தொடர்முழக்க போராட்டத்திற்கு அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு, நமது எதிர்ப்பினை தமிழக அரசுக்கு காட்ட வேண்டும் என்று *_TNPTF அயன்_* சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment