Monday, 29 January 2018

*மாநில செயற்குழு கூட்ட முடிவு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி காத்திருப்பு போராட்டம் - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_55.html


*🌟 பேரண்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்*


*🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் 28-01-2018 (ஞாயிற்றுக்கிழமை) சென்னையிலுள்ள கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது.*


🌟 மாநில தலைவர் *_தோழர் மோசஸ்_* தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


🌟 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 09.02.2018 அன்று நம் பேரியக்கத்தின் சார்பாக காத்திருப்பு போராட்டத்தினை மிக வலிமையாக நடத்திட அனைத்து தோழர்களும் களப்பணியாற்றி போராட்டம் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும்,


🌟 மாநில பொறுப்பாளர்கள் 18 பேர் இயக்குநர் அலுவலகத்திலும், மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் இயக்கத்தின் தூண்களாக விளங்கும் உறுப்பினர்கள் அனைவரும் திரண்டு அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுடன் இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்தினை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.


*🌟 கடந்த இரண்டு ஊதியக்குழுவிலும் மிகக் கடுமையான ஊதிய இழப்பை சந்தித்துள்ள இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்புக்காக 25.03.2018 அன்று சென்னையில் "இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாடு" நடத்திட இம்மாநில செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.*

🌟 நமது பேரியக்கத்தின் 12 வது மாநில தேர்தல் புதுக்கோட்டையில் 04.03.2018 அன்று சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது.

*⚡ தேர்தல் ஆணையாளராக *_தோழர்.செ.போத்திலிங்கம்_* முன்னாள் பொதுச்செயலாளர்,*  


*⚡ துணை ஆணையாளர்களாக *_தோழர் எஸ்.ஜோசப் ராஜ்_* முன்னாள் மாநிலச்செயலாளர்,*

*_தோழர் ந.குருசாமி_* முன்னாள் மாநிலச்செயலாளர், நியமனம் செய்யப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டது.


💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪


"இடைநிலை
ஆசிரியர்களின்
ஊதிய மீட்பு மாநாடு"
ஒரே ஒரு ஒற்றைக்
கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி 25.3.18-ல் சென்னையில் மாநாடு.
கோரிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள
இடைநிலை ஆசிரியர்கள்
கடந்த 40 ஆண்டு காலமாகப்
பெற்று வந்த மத்திய அரசின்
ஆசிரியர்களுக்கு இணையான
ஊதியத்தை மீட்டெடுத்தல்.

இத்தகைய வீரமிகு, எழுச்சிமிக்க போராட்டங்களை அறிவிக்கும் ஒரே இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மட்டுமே.

💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪


தோழமையுடன்;

*தோழர்.மோசஸ்,*மாநில தலைவர்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


*தோழர்.பாலசந்தர்,*பொதுச்செயலாளர்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


*தோழர்.ஜுவானந்தம்,*மாநில பொருளாளர்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.



💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு  எடுத்துள்ள "இடைநிலை  ஆசிரியர்களின்  ஊதிய மீட்பு  மாநாடு" மற்றும்  "காத்திருப்பு போராட்டம்" வெற்றியடைய  *_TNPTF அயன்_*  சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

      

*இலட்சியம்  அடையும் வரை.,*

*ஓய்வென்பது இல்லை...,*


*வெல்லட்டும் வெல்லட்டும்* 

*கோரிக்கைகள் வெல்லட்டும்*


*வாழ்க! வாழ்க!! வாழியவே *_TNPTF_* வாழியவே!!! 


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 









No comments: