🌟 *_அகரம் பவுன்டேசன்_*,
நெ.15/8 கிருஷ்ணா தெரு,
தி.நகர்.
என்ற விலாசத்தில் இயங்கி வரும் அரசு பதிவு பெற்ற நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளாக விதைத் திட்டத்தின் மூலம் பின்தங்கிய மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் மேல்நிலைக் கல்வியை முடித்து உயர் கல்வியினை தொடர இயலாத மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌟 தற்போது 2017-18 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்களின் மேல்படிப்பிற்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய அகரம் பவுண்டேஷன் முன்வருவதால் கல்வி அறிவு பெறாதபெற்றோர்களின் பிள்ளைகள் மற்றும் நல்ல மதிப்பெண் எடுக்கும் திறன் இருக்கின்ற பொருளாதார சிக்கலால் மட்டுமே மேல் படிப்பு பெற முடியாத மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🌟 அகரம் பவுன்டேஷன் "விதை" திட்டம் மற்றும் "தை" திட்டங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள்,
🌟 அகரம் "விதை" திட்டத்தில் பங்கேற்கத் தேவையான விதிமுறைகளும், மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களும்
🌟 விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரிகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
🌟 அனைத்து ஆசிரியர் பெருமக்களும் இந்த நல்லதொரு வாய்ப்பினைப் பயன்படுத்தி மாணவர்கள் கல்வி நலன் பெற்றிட வழிவகுக்குமாறு *_TNPTF அயன்_* சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment