Thursday, 1 February 2018

*வருமான வரிவிலக்கு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பிரதமருக்கு கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post.html


*🌟 வருமான வரிவிலக்கினை திருத்தம் செய்து மாற்றியமைக்க வேண்டி பிரதமருக்கு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமான தோழர்.பாலசந்தர் அவர்கள் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார், இச்செய்தி இன்றைய தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது.*



🌟 வருமான வரி வரம்பையும் கல்விக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டையும் அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.பாலசந்தர் அவர்களும், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனார்த்தன் அவர்களும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.



🌟 தனிநபர் வருமான வரி வரம்பை ரூ.5 லட்சமாக அதிகரிக்க வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.8 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.13 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் என வருமான வரியைத் திருத்த வேண்டும். வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பொது கழிவு ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட வேண்டும்.



🌟 வீட்டு வாடகைப்படி, மருத்துவ படி, அகவிலைப் படி, மருத்துவ செலவினம் மீளப் பெறுதல் ஆகியவற்றை வருமானமாகக் கருதாமல் செலவினமாகக் கருத வேண்டும்.


🌟 80 சி பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழித்தொகையை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரிவுள்ளனர்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: