Thursday, 1 February 2018

* தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை - ஊடகச் செய்தி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_1.html


*🌟 மத்திய அரசின் பட்ஜெட் மாத ஊதியம் பெறுவோருக்கு மிகப் பெரிய ஏமாற்றம்!*

* தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை*


🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் தோழர்.ச.மோசஸ், பொதுச் செயலாளர் தோழர்.செ. பாலச்சந்தர், மாநில பொருளாளர் தோழர்.ச. ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை.


🌟 மத்திய அரசின் 2018-19  ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உயர்த்தப்படாதது மாத ஊதியம் பெறுவோர் மத்தியில் மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே வருமான வரி வரம்பு உயர்த்தப்படாததால் இந்தியா முழுவதும் மாத ஊதியம் பெறும், குறிப்பாக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


🌟 விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்துள்ள இன்றைய நிலையில், மாத ஊதியம் பெறும் ஊழியர்கள் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கும் காலச்சூழலில், இந்த பட்ஜெட்டிலாவது தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஏற்கனவே வருமான வரி உயர்த்தப்படாததன் காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்12 மாத ஊதியத்திற்கு பதிலாக 11 மாத ஊதியத்தையே பெற்று வருகின்றனர். 


🌟 250 கோடி ரூபாய் வரிவருவாய் உடைய கார்பரேட் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரிகுறைப்பு செய்துள்ள மத்திய அரசு மாத ஊதியம் பெறுவோரின் நலன்களைப் பற்றி சிந்திக்காதது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் கரும்பலகைக்குப் பதிலாக டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்ததாக இருந்தாலும், பல பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான கழிப்பறை, மின்சாரம், குடிநீர், கட்டிடம் ஆகிய வசதிகளை செய்துதர முதலில் அரசு முன்வர வேண்டும்.


🌟 கல்விக்கான நிதி ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை என்பது தேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு எதிர்பார்த்த பலனை தராது என்பதையே காட்டுகிறது. 2022 க்குள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும். 70 லட்சம் புதிய வேலைவாய்புகள் உருவாக்கப்படும் போன்ற பட்ஜெட் அறிவிப்புகள் கடந்த பட்ஜெட் அறிவிப்புகளை ஒப்பிட்டு பார்க்கும் போது வெற்று, விளம்பர அறிவிப்புகளாகவே தெரிகிறது. எனவே, மத்திய அரசு தனிநபர் வருமான வரி வரம்பை உயர்த்த முன் வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.


தோழர்.ச.மோசஸ்,
மாநிலத்தலைவர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


தோழர்.செ.பாலசந்தர்,
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


தோழர்.செ.ஜுவானந்தம்,மாநில பொருளாளர்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: