Friday, 23 February 2018

*தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_23.html


*தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 100% ஆதார் எடுப்பதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்த தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.*



🌟 தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 31.03.2018 க்குள்  100% ஆதார் எடுத்து முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



🌟 ஆதார் எடுக்கும் பணியை 31.03.2018 க்குள் முடிக்க ஏதுவாக போர் கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட வாரியாக மொத்த மாணவர்களின் எண்ணிக்கை விபரம், ஆதார் எண் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விபரம், ஆதார் எண் பதிவு செய்யப்படாத மாணவர்களின் எண்ணிக்கை விபரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தினமும் deesection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



🌟 மேற்கண்ட தகவலினை உதவி/ கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி பள்ளி அளவில், ஒன்றிய அளவில் அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் எண் பெறுவதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 



No comments: