🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_28.html
*🌟 2017-18 ம் கல்வி ஆண்டில் தொடக்கக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவு படி நாளிதழ் (செய்தித்தாள்) வாங்குவதற்கு மாவட்ட வாரியாக தொகை பிரித்தளித்தல் மற்றும் நாளிதழ் வாங்குதல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*
🌟 2017-18 ம் கல்வியாண்டில் பள்ளி மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களால் பின்வரும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன,
"பள்ளிகளுக்கு நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வழங்குதல்"
🌟 மாணவர்கள் தங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், மொழித்திறன்களை வளப்படுத்திடவும் பள்ளிகளுக்கு நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
🌟 இவ் அறிவிப்பின் படி மாணவர்கள் தங்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும், மொழித்திறன்களை வளப்படுத்திடவும் பிப்பரவரி 2018 மற்றும் மார்ச் 2018 ஆகிய இரு மாதங்களில் பணி நாட்களுக்கு மட்டும் ஒரு நாளிதழின் விலை 5.00 ரூபாய் என 20 நாட்களுக்கு 100 ரூபாய் என கணக்கிட்டு வாங்குவதற்கு 32 மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் தொகை பிரித்தளிக்கப்படுகிறது. இத்தொகை ECS மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
🌟 இந்நாளிதழ் வாங்குவதற்கு அரசாணை நிலை எண் 5, பள்ளிக்கல்வித் (தொ.க 3(2)) துறை, நாள் 10.01.2018 - ன் படி நடைமுறைகளை பின்பற்றி செயல்படும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment