Saturday, 24 February 2018

*தேசிய கல்வி உதவித் தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_29.html


*🌟தேசிய கல்வி உதவித் தொகை பெற விரும்புவோர், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் திரு.சுப்பரமணியன் தெரிவித்துள்ளார்.*


*அவரது செய்தி குறிப்பு:*

🌟 விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் , ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், ஐ.டி.ஐ, ஐ.டி.சி, பாலிடெக்னிக், பட்டயப் படிப்புகள், பொறியியல், மருத்துவம் மற்றும் எம்.பில் படிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், ஜைனர் மற்றும் பார்சி மதத்தைச் சேர்ந்த சிறுபான்மை மாணவ, மாணவிகள் மத்திய அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.


🌟 இதற்காக www.scholarsips.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


🌟 வரும் மார்ச் 31 ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்துள்ள கல்வி நிறுவனங்கள் மட்டுமே 2018-19 ம் ஆண்டிற்கான உதவித்தொகை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: