🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_4.html
*🌟 தேனி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தேனி மாவட்ட அளவிலான ஆசிரியர் இல்ல கட்டிடம் திறப்பு விழா*
⚡ நாள் : 11.02.2018
⚡ நேரம் : காலை 10.45 மணியளவில்
⚡ இடம் : திருமலை நகர், தேனி (கொடுவிலார்பட்டி ரோடு).
*🌟 கட்டிடம் திறப்பு மற்றும் சிறப்புரை:*
தோழர்.ச.மோசஸ் அவர்கள்,
மாநிலத்தலைவர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌟 TNPTF அலுவலகம் திறப்பு மற்றும் சிறப்புரை:*
தோழர். செ.பாலசந்தர் அவர்கள்,
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌟 நூலக அறை திறப்பு மற்றும் சிறப்புரை:*
தோழர்.சு.ஜுவானந்தம் அவர்கள்,
மாநிலப் பொருளாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*_ஆசிரியர் சொந்தங்களே!_*
*_இயக்கத்தின் வெற்றி விதைக்கெல்லாம்_*
*_விளைநிலமாய் இருப்பவர்கள் நீங்கள்!_*
*_இந்த நிமிடம் வரை இயக்கத்தின் செயல்பாடுகளுக்கெல்லாம்_*
*_ஆதாரமாய் இருப்பவர்கள் நீங்கள்... ஆசிரியர்கள்_*
*_அடக்கப்பட்ட போதும், ஒடுக்கப்பட்ட போதும்_*
*_காலத்தின் கண்கள் சிவக்க வேண்டுமென்று_*
*_கூவும் புரட்சி குயில் நீங்கள்_*
*_இன்று இயக்கமாய் இமயமாய் எழுந்து நிற்கும்_*
*_இந்த ஆசிரியர் இல்லத்தின் முகவரி நீங்கள்!_*
*_இந்த விழா இயக்க விழா மட்டுமல்ல_*
*_இல்ல விழாவும் கூட..._*
*_தொடரட்டும்...தொடர்வோம்...வாருங்கள்...!_*
🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எனும் மகத்தான பேரியக்கம் 02.08.1984 ல் உதயமாகி இன்று தமிழகத்தில் உள்ள ஆசிரியர் இயக்கங்களிலேயே உறுப்பினர் எண்ணிக்கையிலும், வலிமையிலும், இயக்கச் செயல்பாடுகளிலும் முதன்மையான இயக்கமாக விளங்கி கொண்டிருக்கிறது. ஆசிரியர் நலன் காக்கும் கேடயமாகவும் உரிமைகளை பெற்று தரும் உன்னத அமைப்பாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
🌟 நெஞ்சில் மூண்ட நெருப்புக்கு சமரசம் ஏதும் கிடையாது என்ற *_மாஸ்டர். இராமுண்ணியின்_* இலட்சியத்தை உயர்த்திப் பிடித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமது பயணத்தை துவக்கிய போது முன்னணி தளபதிகளாய் விளங்கியவர்கள்
⚡ தோழர்.எம்.பொன்னையா,
⚡ தோழர்.வீ.பழனிச்சாமி,
⚡ தோழர். வீ.நடராஜன்,
இவர்களின் வீரத்தை போற்றும் வகையில் *தேனி மாவட்ட அளவிலான ஆசிரியர் இல்லம்* அமைக்கப்பட்டுள்ளது.
🌟 அதுசமயம் இவ்விழாவில் தாங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
*தோழமையுடன்;*
⚡ வே.பழனிராஜ், மாவட்ட தலைவர், தேனி மாவட்டம்.
⚡ எஸ்.கிருஷ்ணசாமி, மாவட்ட செயலாளர், தேனி மாவட்டம்.
⚡ ஏ.ஜெகநாதன், மாவட்ட பொருளாளர், தேனி மாவட்டம்.
⚡ எம்.ஶ்ரீநிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தேனி மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார பொறுப்பாளர்களுக்கும், இயக்கத்தின் தூண்களாக விளங்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் *_TNPTF அயன்_* சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment