*தமிழறிஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_95.html
🌟 வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
🌟 இதுதொடர்பாக தமிழ் வளர்ச் சித் துறை வெளியிட்ட அறிக்கை:
🌟 வயது முதிர்ந்த தமிழறிஞர் களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண் ணப்பிக்கத் தகுதி: 1.1.2018-ஆம் தேதி 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வயது சான்றிதழ், ஆன்லைன் மூலம் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் இரண்டு தமிழறிஞர் களிடம் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று ஆகியன விண்ணப் பத்துடன் இணைக்கப்பட வேண் டும்.
🌟 இதற்கான விண்ணப்பப்படி வத்தை தமிழ் வளர்ச்சித் துறை யில் நேரிலோ அல்லது இணை யதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம்தோறும் உதவித்தொகை ரூ.2,500, மருத்துவப்படி ரூ.100 மற்றும் கட்டணமில்லா பேருந்து சலுகையும் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 30 ஆகும்.
🌟 விண்ணப்பங்களைப் பெற மற்றும் அனுப்ப வேண்டிய முக வரி: தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம்,தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம் தமிழ்ச் சாலை, எழும்பூர்,
🌟 சென்னை- 8. மேலும் விவரங் களுக்கு 044 - 28190412, 28190413 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment