Monday, 12 February 2018

*மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_74.html


*🌟மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி அளிப்பது தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் குறித்து சென்னை மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையரகம் ஆணை வெளியிட்டுள்ளது.*



🌟 மனவளர்ச்சி குன்றியோருக்கு ஆரம்பகால பயிற்சி முதல் சிறப்பு கல்வி, முன் தொழிற் பயிற்சி மற்றும் தொழிற் பயிற்சி ஆகியவற்றை வழங்கும் சிறப்புப் பள்ளிகளும், 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு மற்றும் பயிற்சி வழங்கும் இல்லங்களும் அரசு அனுமதி மற்றும் நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது.


🌟 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் 18 வயது பூர்த்தி அடைந்திருந்தாலும், அவர்களது மனவயது (mental Age) சாதாரண நபர்களை விட குறிப்பிடக் கூடிய அளவில் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு தொடர்ந்து சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி அளிப்பது அவர்களது மறுவாழ்வுக்கு முக்கியமானதாகும்.


🌟 எனவே, அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்த பின்பும் அவர்களுக்கு தேவையான பயிற்சியினை அரசு திட்டங்கள் வாயிலாக தொடர்ந்து வழங்குவது அவசியமாகிறது.


🌟 எனவே, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை, முன் தொழிற் பயிற்சி மற்றும் தொழிற் பயிற்சி பிரிவில் அனுமதித்து, சிறப்பு பள்ளிகள் மூலமாக பயனடையச் செய்யலாம் என இதன் மூலம்  அறிவுறுத்தப்படுகிறது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: