🌟 23.2.18க்குப் பிறகு எந்த வகுப்பிற்கும் New entry செய்ய முடியாது என்பதால் அதற்குள், New entry செய்யவேண்டியிருப்பின் பதிவேற்றத்தினைமுடித்திடுதல் வேண்டும்.
🌟 UDISE ல் உள்ள மாணவர்கள் பதிவிற்கும், தங்களது பள்ளியில் தற்பொழுது பயிலும் மாணவர்கள் பதிவிற்கும் வேறுபாடு காணப்படுகிறது என்பதால் EMIS ல் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பதிவினை பதிவிடுவதற்கு Option நாளைக்குள் வர இருக்கிறது வந்தவுடன் தங்களது EMIS தளத்திற்குள் சென்று மாணவர் பதிவினை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🌟 பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களையும் பதிவேற்றம் செய்து முடித்த பின் புகைப்படம், குருதி வகை, ஆதார் எண் ஆகிய தகவல்களை மொபைல் அப்ளிகேஷன் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.
🌟 பதிவு செய்தவுடன் Data Approval கொடுக்க வேண்டும்.
🌟 Data Approval முடித்த பின்பு ID Approval க்கு சென்று மாணவர் விபரங்களை சரிபார்த்து விட்டு ID Approval கொடுக்க வேண்டும்.
🌟 ஆதார் இல்லாத மாணவர்களுக்கு BRC ல் ஆதார் மையம் அமைக்க இருப்பதால் கீழ் கண்ட படிவத்தினை பூர்த்தி செய்து தயாராக வைக்க வேண்டும்.
🌟 மேலும் தலைமை ஆசிரியர்கள் கீழ்க்கண்ட உறுதிமொழி படிவத்தினை பூர்த்தி செய்து கையொப்பம் இட்டு தர வேண்டி இருப்பதால் பணியினை மிகச் சரியாக விரைந்து முடிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
🌟 அனைத்து பணிகளையும் இந்த வாரத்திற்குள் முடிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
🌟 மேற்கண்ட படிவங்கள் கீழே உள்ள link ல் இணைக்கப்பட்டுள்ளது, Link ஐ கிளிக் செய்து படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
🌟 EMIS இணையதளத்தில் மாணவர்கள் விபரங்களை பதிவேற்றம் செய்வதற்கு உண்டான செலவினத் தொகை விரைவில் கொடுக்கப்பட இருக்கிறது, அந்த தொகை அந்தந்த பள்ளி வங்கி கணக்கில் ஏற்றப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment