Wednesday, 7 March 2018

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செய லாளரின் அறிவிப்பு-06.03.2018*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/03/06032018.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டக்கிளைகளின் கவனத்திற்கு...*


*🌟08.03.2018 அன்று சர்வதேசப் பெண்கள் தினம்*


*🌟கடந்த ஆண்டு நமது பேரியக்கத்தின்  மாவட்டக்கிளைகள் சார்பில் மகளிர் தினக் கருத்தரங்கங்கள் மிகுந்த எழுச்சியோடும் உற்சாகத்தோடும் நடைபெற்றன.*


*🌟பெண்ணுரிமைப் பதாகையை உயர்த்திப் பிடிப்பதில் ஈடு இணையற்ற நம் பேரியக்கத்தில்,04.03.2018 அன்று நடைபெற்ற மாநிலத் தேர்தலில் மாநிலத்தலைவர் உட்பட 42% பெண் தோழர்கள் தேர்வு செய்யப்பட்டது தமிழகத்தின் ஆசிரியர் இயக்க வரலாற்றில் மிக முக்கியப் பதிவாகும்*


*🌟இவ்வாண்டும் கடந்த ஆண்டைப்போலவே முற்றிலும் பெண் ஆசிரியர்களைக் கொண்டு மார்ச் மாத இறுதிக்குள் மகளிர் தின கருத்தரங்குகளை மாவட்டக்கிளைகளின் சார்பில் நடத்திட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது*


*🌟தனியாகவோ அல்லது வாய்ப்பிருப்பின் தோழமைச் சங்கங்களை இணைத்துக்கொண்டோ காலச்சூழல் மற்றும் களச்சூழலுக்கேற்ப தேதியை நிர்ணயம் செய்திடவும் மாநில மையம் கனிவுடன் கேட்டுக்கொள்கிறது*


*⚡தோழமையுடன்*

*ச.மயில்*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: