Friday, 9 March 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு - கண்டன அறிவிக்கை (08.03.2018)*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/08032018.html


*🌟கடந்த சில தினங்களாக தமிழகத்தில் நடைபெற்று வரும் விரும்பத்தகாத நிகழ்வுகள் தமிழகத்தின் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது. உழைப்பாளி மக்களின் மகோன்னதத் தலைவர், பெரும் புரட்சியாளர், உழைப்பவர்களே உலகத்தை ஆள வேண்டும் என்ற தத்துவத்தை புரட்சியின் மூலம் நடைமுறைப்படுத்திய மகத்தான தலைவர், உலகத் தொழிலாளர்களின் வழிகாட்டி மாமேதை லெனின் சிலை திரிபுராவில் உடைக்கப்பட்டது இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.*



*🌟இந்நிலையில் மாமேதை லெனின் சிலை உடைக்கப்பட்டதை ஆதரித்தும், தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்றும் தனது முகநூலில் பதிவிட்ட திரு.எச்.ராஜா அவர்களின் செயல் பொறுப்பற்ற, பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் மோசமான செயலாகும். இதைத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.*



*🌟அதைத் தொடர்ந்து பகுத்தறிவுப்பகலவன், தன்னிகரற்ற பெண்ணுரிமைப் போராளி, தமிழகத்தில் சமூக நீதிக்காக அயராது உழைத்த மாமனிதர், சாதியத்தை தமிழ் மண்ணிலிருந்து அகற்றிட காலமெல்லாம் உழைத்திட்ட கலங்கரை விளக்கம், மூடத்தணத்தை முற்றாய் ஒழித்திட 96 வயது வரை மேடைதோறும் முழங்கிய களப்போராளி தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும்  என்று கூறியதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது.*



*🌟தமிழகத்தின் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் நபர்கள் எவராக இருந்தாலும் தமிழக அரசு உரிய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.*


தோழமையுடன்;

தோழர்.ச.மயில்,மாநில பொதுச்செயலாளர்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. 

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: